கடல் பொங்கியதை இதுவரை உடல் பார்த்தது. இப்போது உடல் பொங்குவதை கடல் பார்க்கிறது. ‘இது தலையா... கடல் அலையா?’ எனக் கணக்கெடுக்க முடியாத அளவுக்கு மணல் பரப்பு முழுக்க மனிதத் தலைகள். நீலத் திரைக்கடலில் கறுப்பு அலைகள். மாடுகள், இனி கறுப்பு நிறத்தைப் பார்த்தால் மிரளாது; காதல் பொங்கப் பார்க்கும்.

மூன்று இடங்களில் நடக்கக் கூடாது என்றால், நூறு இடங்களில் நடக்கும் என்று அறிவிக்காமலேயே நடந்துள்ளது ஜல்லிக்கட்டு. இதுவரை பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டைப் பார்க்க, அலங்காநல்லூர் போக வேண்டும்; அவனியாபுரம் போக வேண்டும்; பாலமேடு போக வேண்டும். இனி அப்படி அல்ல. அடுத்த ஆண்டு அவரவர் மாவட்டத்தில் அவரவர் ஊரிலேயே பார்க்கும் நிலைமையை அரசாங்கமே உருவாக்கிவிட்டது. மக்கள் சோர்ந்துபோயும் சொரணை அற்றும் இருக்கும்போது இப்படி ஏதாவது செய்து எண்ணெய் ஊற்ற தீ மூட்டுவதுதான் அதிகாரவர்க்கத்தின் வழக்கமாக இருந்துள்ளது. அதையே இப்போது செய்தும் உள்ளது.

அலங்காநல்லூருக்கு ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்தவர்கள், அந்த விளையாட்டு நடக்கவில்லை என்றதும் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். காவல் துறை அவர்களைக் கைதுசெய்தது. உடனே தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தொடங்கிவிட்டது.

ஓர் ஊருக்கும் இன்னோர் ஊருக்கும் தொடர்பு இல்லை. கண்ணுக்குத் தெரியாத சங்கிலி, இவர்களைப் பிணைத்துள்ளது. அது தமிழ். அது தமிழன். அது தமிழ்நாடு!

மத்திய அரசு, மாநில அரசு, உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் எதிராக தமிழ், தமிழன், தமிழ்நாடு ஆகிய மூன்றும் கிளர்ந்து நிற்கின்றன.

என்ன சொன்னீர் மோடி?

“உச்ச நீதிமன்றத் தடை இருக்கும்போது என்னால் என்ன செய்ய முடியும்?” என்பது தமிழ் நாட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து ‘இரும்பு மனிதர்’ மோடி கேட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தை, தாங்கள் இதுவரை எதிர்த்ததே இல்லையா? நீதிபதிகள் தேர்வு என்பது, காலம்காலமாக கொலிஜியம் முறைப்படி நடந்துவந்தது. அந்த அதிகாரத்தையே நீதிபதிகளிடம் இருந்து பறிக்கும் வகையில் நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கும் அளவுக்கு எதிர்த்த உங்கள் தைரியம் எங்கே போய்ப் பதுங்கியது? ‘நீதிபதிகள் நியமனப் பிரச்னையை உங்களது ஈகோ பிரச்னையாக ஆக்க வேண்டாம்’ என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்சரித்தபோதும் பயப்படாத உங்களது வீரம், தமிழன் பிரச்னையில் தலைமறைவாகியது ஏன்? ‘நீதித்துறை, காலியிடங்களை நிரப்ப முடியுமா... முடியாதா?’ என, தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் கேட்டபோது பதில் சொல்லாமல் இருந்த உங்களுக்கா உச்ச நீதிமன்றத்தைப் பார்த்து பயம்?

காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது. அதற்குத் தலையாட்டினார் அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி. மறுநாளே திரும்பி வந்து, ‘இப்படி உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது’ என அவர் சொன்னார். மோடிக்குத் தெரியாமல் ரோத்தகி இப்படி வந்து சொல்லியிருக்க முடியாது. இப்படிச் சொன்னதற்காகத்தான் மோடிக்கு கர்நாடகச் சட்டசபை நன்றி தீர்மானம் போட்டது. கர்நாடகாவுக்காகத் துடித்த கண், தமிழ்நாட்டுக்காக ஏன் துடிக்க மறுத்தது? இப்படி ரூபாய் நோட்டுத் தடை விவகாரத்தில், வாராக் கடன்கள் வசூலில், என்.ஜி.ஓ-க்களுக்குப் பணம் வரும் விவகாரத்தில், ராணுவ மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு நீதிபதி நியமிக்காத விஷயத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் என பல்வேறு முறை மோடியின் அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கொட்டியிருக்கிறது. அப்போது எல்லாம் சொரணையே இல்லாமல் மல்லாந்து படுத்துக்கிடந்தது மத்திய அரசு. அதன் மாட்சிமை தாங்கிய தலைமை அமைச்சர் மோடி, தமிழர் விவகாரத்தில் மட்டும் கையை விரிக்கிறார் என்றால், அவருக்கு தமிழ்நாடு, இந்தியாவின் ஓர் அங்கம் என்ற நினைப்பே இல்லை என்றுதான் பொருள்.

லட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் வீதியில் உட்கார்ந்த பிறகும்கூட ஓர் அவசரச் சட்டம்போட மத்திய அரசு முன்வரவில்லை. ‘நீ ஓர் அவசரச் சட்டம் போடு. அதற்கு நான் எங்கள் துறைகள் மூலமாக ஒப்புதல் தருகிறேன்’ என்றுதான் சொன்னார்கள். அவசரச் சட்டம் போட்டதும் மத்தியத் துறைகள் ஒப்புதல் வழங்கினார்கள். இது ஒன்றும் ஆண்டவன் கட்டளை அல்ல என்பதால், ‘ஒருவார காலத்துக்கு இது சம்பந்தமான வழக்கை எடுக்க வேண்டாம்’ என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கட்டளை போடுகிறார்கள். அப்படியானால், என்ன பொருள்? இவர்கள் நினைத்தால் எங்கும் ஆட்டுவிக்கலாம் என்பதுதானே!

‘தமிழகத்தின் மேன்மையான கலாசாரத்தைக் கண்டு, நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். தமிழ் மக்களின் கலாசார லட்சியங்களைப் பூர்த்திசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்' என, பிரதமரின் ட்விட்டரில் நான்கு நல்ல வார்த்தைகளை வாங்குவதற்கு, லட்சக்கணக்கான மக்கள் இரவிலும் பகலிலும் பனியிலும் வெயிலிலும் வாடவேண்டி இருக்கிறது. இதனால்தான் எத்தனை முறை வந்தாலும் பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு விழாமல்போகிறது.

உதவி செய்ய துப்பு இல்லாவிட்டால், உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டாமா? ‘காவிரியில் தண்ணீர் விடு’ எனக் கேட்டால், ‘கடல் நீரையே குடிநீர் ஆக்கிக்கொள்ள வேண்டியதுதானே?’ எனக் கேட்ட சு.சுவாமி, இப்போது ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று எல்லோருக்கும் பட்டம் கொடுத்துள்ளார். தமிழர்களை, ‘இன்டர்நேஷனல் பறையாஸ்’ எனச் சொல்லி, தமிழ் நாட்டுக்குள்ளேயே வர முடியாமல்போனவர் அவர். சந்திராசாமி முதல் காஞ்சிபுரம் வரை அவர் செய்த பொறுக்கல் கதைகளை எழுத, பக்கங்கள் போதாது. இந்த விஷக்கிருமிகள் பா.ஜ.க உடலில் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை கட்சி எப்படி வளரும்? இன மானத்தில் எதிர் எதிர் முடிவுகளை எடுத்துவிட்டு, வருமானவரித் துறை மூலமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வை மிரட்டி தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வளர்த்துவிடலாம் என நினைத்தால், தாமரை இலையில் தண்ணீரும் ஒட்டாது; ஓட்டும் ஒட்டாது.

‘நீ அவசரச் சட்டம் போட்டுக்கொள்’ எனச் சொல்லும்போது, பன்னீர் வேண்டுமானால் பயந்திருக்கலாம். ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் எகிறி இருப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது. பன்னீர் பயந்தாங்கொள்ளி. இன்றைய அ.தி.மு.க அரசு, அச்சத்தால் நடுங்கும் அரசாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் வீட்டுக்கு ரெய்டு வந்தது அவமானம் என்றால், தலைமைச் செயலகத்துக்கு உள்ளேயே ரெய்டு நடத்தப்பட்டது கேவலம். அந்தக் கேவலத்தைக்கூட தட்டிக்கேட்க முடியாத வீரியத்தை இழந்தவர்கள் இவர்கள். மம்தா பானர்ஜி கேட்கிறார். இவர்கள் பேசா மடந்தையாக இருந்தார்கள். எதிர்த்தால் எங்கே நம் வீட்டுக்கும் ரெய்டு வந்துவிடுவார்களோ என்ற பயம். திருடர்களுக்குள் அறிமுகம் தேவை இல்லை என்பதைப்போல மத்திய அரசோடு இணக்கமாகப் போய்விட்டது மாநில அரசு.

ஜனவரி 14, பொங்கல். வாடிவாசலில் காளைகளை விட வேண்டும் என்ற நினைப்பே இவர்களுக்கு இல்லை. பன்னீருக்கும் இல்லை; அவரது சின்னம்மாவுக்கும் இல்லை. பன்னீருக்கு, தன் நாற்காலி நிலைக்க வேண்டும். அவரது சின்னம்மாவுக்கு, பன்னீர் நாற்காலி வேண்டும். ஜனவரி 12, 14, 18 என, முதலமைச்சர் ஆக தேதி பார்த்தார் சசிகலா. அன்றைய தினம் என்ன நிற சேலை உடுத்தலாம் என யோசித்திருப்பார். அவருக்கு அலங்காநல்லூர் எப்படி நினைவுக்கு வந்திருக்கும்? அப்படியே வந்தாலும், இரண்டு நாட்களுக்கு அங்கே பிரச்னை இருக்கும். காணும் பொங்கலோடு காணாமல்போகும் என நினைத்தார்கள். தை மாதத்தில் அடுப்புக்கு வெளியே பொங்கும் என அ.தி.மு.க அரசு கொஞ்சமும் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் இப்படி ஒரு அவசரக் கூட்டத்தை எப்போதோ கொண்டுவந்திருக்கலாம். சத்தம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும். கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வதைப்போல கடற்கரையில் மனிதர்கள் கூடிய பிறகு மோடியைப் பார்க்க டெல்லி போனார் பன்னீர். அவசரச் சட்டம் போட்டதும், மத்திய அரசு அனுமதி தந்ததும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் கையெழுத்துப் போட்டதும் இரண்டு நாட்களில் நடந்தது சாதனைதான். ஆனால், இவர்களது மெத்தனம்தான் போராட்டக்காரர்களை நம்ப முடியாமல் செய்கிறது. மோடியும் பன்னீரும் நன்மை செய்வார்கள் என இவர்களது மனம் நம்ப மறுக்கிறது. இதற்கு இவர்களது முந்தைய நடத்தைதான் காரணம்.

கடற்கரைப் போராட்டக்காரர்களோடு பத்து நாட்களாக மாநில அரசு பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. தினமும் காலையும் மாலையும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சந்தித்து, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, போராட்டக் காரர்களுக்கு விளக்கியிருக்க வேண்டும். அதற்கான எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை. ஜனவரி 17-ம் தேதி தொடங்கிய போராட்டத்தை 23-ம் தேதி காலை வரையில் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, அன்றைய தினம் அதிகாலையில் சுற்றிலும் போலீஸை நிறுத்தினர். ‘சட்டம் போட்டாகிவிட்டது. உடனே கலையுங்கள்’ என்றது போலீஸ். ‘எங்களது வழக்குரைஞர் வந்ததும் பேசிவிட்டு நாங்கள் கலைந்து விடுகிறோம்’ என்றுதான் போராட்டக் காரர்கள் சொன்னார்கள். பிறகு நான்கு மணி நேரம் கேட்டார்கள். பிறகு, இரண்டு மணி நேரம் கேட்டார்கள். கால அவகாசம் தருகிறோமா... இல்லையா என்றே சொல்லாமல், அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்த முனைந்தது சென்னை காவல் துறை. பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், மூதாட்டிகள் எனப் பார்க்காமல் நெட்டித் தள்ளினார்கள். கடற்கரைக்கு வெளியே போகாமல், கடலுக்குள் மக்கள் போனார்கள். இந்த அசாதாரண சூழ்நிலை, வன்முறையை நோக்கித் தள்ளியது. இப்படி ஒரு வன்முறை நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஏழு நாட்கள் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். ஆனால், அகிம்சைப் போராட்டத்தையும் அராஜகப் போராட்டமாக மாற்றிவிடும் ரசாயனத்தை போலீஸ் வைத்திருந்தது யார் குற்றம்? ‘நாங்கள் அகிம்சையாகப் போராடியது தவறா? நீ குடியரசு தினத்தை எப்படி நடத்துகிறாய் எனப் பார்க்கிறோம்?' எனச் சொல்வதன் பின்னால் உள்ள கோபம் நியாயமானதுதானே?

இந்தக் கூட்டத்துக்கு காரணமே கோபம்தான். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழத்தமிழர் விவகாரம், மீனவர் கடத்தல், கெயில், மீத்தேன், பணமுடக்க நடவடிக்கைகள், நீட் தேர்வு... இப்படி தொடர்ந்து அடிமேல் அடி விழுந்த ஆற்றாமையில் வெடித்துதான் இந்த இளைஞர்கள் கடற்கரையை நோக்கி வந்தார்களே தவிர, இது வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் அல்ல. இவர்களில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தான் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திருப்பார்கள். ஜாம்பஜார் காவல்நிலையம் அருகில் திடீரென ஒரு பசுங்கன்று வந்துவிட்டது. கடற்கரையை நோக்கி போய்க்கொண்டு இருந்தவர்கள் அதைப் பார்த்துப் பயந்து விலகினார்கள். அந்த அளவுதான் நமது இயற்கையோடு இயைந்த வாழ்வு. எனவே, மாடு காக்க மட்டும் அல்ல, நாடு காக்கக்கூடிய இளைஞர்கள் இவர்கள், அரசியல்வாதிகளை உள்ளே விடவில்லை. உண்மைதான். ஆனால், அரசியல் அவர்களது ரத்தத்தில் இருந்தது.

டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எதேச்சதிகாரத்தை எதிர்த்து, நரேந்திர மோடி இந்த நாட்டில் உருவாக்க நினைக்கும் ஒற்றைத் தன்மையை எதிர்த்து இவர்கள் முழக்கமிட்டார்கள். பன்னீர் அரசு, கையாலாகாத அரசாக இருக்கிறது எனக் குற்றம் சாட்டினார்கள். சசிகலா, கட்சிப் பதவிக்கும் ஆட்சிப் பதவிக்கும் தகுதியற்றவர் என்றார்கள். பெப்சி, கோக்குக்கு எதிராக முழங்கினார்கள் கே எஃப் சி சிக்கன் வேண்டாம் என மறுத்தார்கள். விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க கேட்டுக்கொண்டார்கள். இயற்கை உணவு பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தினார்கள். ஆணும் பெண்ணும் கடற்கரையில் கேலிப்பேச்சு அற்று ஒன்றாக இருந்தார்கள். இந்துவும் முஸ்லிமும் தங்கள் அடையாளங்களோடு அருகருகே இருந்தார்கள். ‘தமிழன் பண்பாட்டைக் காப்போம்’ என முழக்கமிட்டுப் போன ஒருவருக்கு மார்வாடி பெண், பிஸ்கட் கொடுத்தார். சொந்த வீட்டில் சாப்பிட்டத் தட்டை எடுத்து வைக்காதவர்கள், அடுத்தவர் எச்சிலைக் கூச்சப்படாமல் எடுத்து அப்புறப்படுத்தினார்கள். ஆணும் பெண்ணும் அவரவர் கழிவறை முன்னால் கூச்சப்படாமல் நின்றார்கள். கல்யாண வீட்டுக்குக்கூட பிள்ளைகளை அழைத்துச் செல்லாதவர்கள், அங்கு அழைத்து வந்தார்கள். அபசகுனத்தில் அளவீடாக குறிக்கப்படும் கறுப்பு உடை அனைவரது சீருடை ஆனது. இழவுக் குறீயிடான பறை இசை, போர்ப்பாட்டு முறை ஆனது.

பெரியார் இருந்திருந்தால் கைத்தடிகொண்டு தட்டிக் குதூகலித்திருப்பார். ‘குடும்பம் குடும்பமாக வா போராட்டத்துக்கு’ என்று அழைத்தவர் அவர். கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியிடம், ‘`எங்கே நீ மட்டும் தனியா வந்திருக்கிறாய்? உன் மனைவி எங்கே? குடும்பமாய் சேர்ந்து போராடினால்தான் ஆங்கிலேயனின் இதயத்தில் குத்த முடியும்!” என்று தனது மார்பில் குத்திக்காண்பித்த சகோதரி நிவேதிதா சொல் கேட்ட பிறகு, பாரதி பேசிய இடமும் இப்போது இந்த இளைஞர்கள் கூடியிருக்கும் இடமும் அருகருகேதான்.

மெரினா கடற்கரையில் இந்த இடத்துக்கு ஒரு காலத்தில் ‘திலகர் திடல்’ எனப் பெயர். பாலகங்காதர திலகரும், லாலாலஜபதி ராயும், விபின் சந்திரபாலும், காந்தியும், வ.உ.சி-யும், பாரதியும், சிவாவும் பேசிய மணல் பரப்பு இது.

புதிய பாரதி, புதிய வ.உ.சி., , புதிய சிவாக்கள் உருவாகிவிட்டார்கள். எதிரிகள் மாறிவிட்டார்கள். கடல் மாறவில்லை. புதிய அலை உருவாகிவிட்டது. இது கறுப்பு அலை. எதிர்ப்பு அலை. போராட்டம் என்ற ஒன்று தொடங்கினால், வெற்றியோடுதான் இனி முடியும்.

காளை மூலம் கலங்கரை விளக்கம் சொல்லும் நாளை இதுதான்!