கார்ன் சூப்

தேவையானவை: மக்காச்சோளம் - ஒரு கப், வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப், பால் - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இரண்டு கப் வெஜிடபிள் ஸ்டாக், சோளம், உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட வேண்டும். வெந்து ஆறிய பிறகு, மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பாலை ஊற்றி சோளமாவைக் கரைத்து, அடுப்பில் வைத்து, மிளகுத்தூளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஃப்ரெஷ் கிரீமைக் கலந்து பரிமாறலாம்.

பலன்கள்: கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து நிறைந்தது. உடலுக்கு வலுவூட்டும். மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், தாமிரச்சத்துகள் நிறைந்தது. ஃபெரூலிக் ஆசிட் (Ferulic acid) எனப்படும் பாலிஃபீனால் நிறைந்தது.

அவல் - கேரட் தோசை

தேவையானவை: பச்சரிசி, கெட்டி அவல் - தலா அரை கப், நறுக்கிய கேரட் - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, மோர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சுத்தம் செய்த அவலை மோரில் ஊறவைத்து, ஊறிய அரிசி, கேரட், பச்சை மிளகாய், உப்புச் சேர்த்து அரைக்கவும். லேசாகப் புளித்ததும், வெங்காயத்தைச் சேர்த்து, தோசைக் கல்லில் தோசைகளாக வார்க்க வேண்டும். துருவிய கேரட்டை மேற்புறம் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: பச்சரிசியிலும் அவலிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். கேரட்டில் உள்ள கரோட்டினாய்டு கண்களுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச்சக்தியைக் கூட்டும்.

தூக்கமின்மை: இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை இன்று அதிகரித்துவரும் பிரச்னையாக இருக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், இரவு நெடுநேரம் கணிப்பொறி, செல்போன் பார்ப்பது, பணிச்சூழல், குடும்பப் பிரச்னை, உறவுச் சிக்கல்களால் ஏற்படும் மனஅழுத்தம், டென்ஷன், மனப் பதற்றம் போன்றவை தூக்கமின்மை பிரச்னை ஏற்பட முக்கியக் காரணங்கள்.

இரவில் செரிமானத்துக்கு எளிய மிதமான உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கார்போஹைட்ரேட் உள்ள அரிசி, சிறுதானியங்கள் ஏற்றவை. பாலில் உள்ள டிரிப்டோபான் (tryptophan) என்ற வேதிப்பொருள் உறக்கத்தைத் தூண்டும். இவை தவிர நட்ஸ், செர்ரி, காலிஃபிளவர், பருப்புவகைகள் போன்றவையும் உறக்கத்துக்கு ஏற்றவை.