Published:Updated:

அரசியைச் சந்தித்த இளவரசி!

எம்.குணா

அரசியைச் சந்தித்த இளவரசி!

எம்.குணா

Published:Updated:
##~##

11-11-11 அன்று தமன்னா, அனுஷ்கா, த்ரிஷாக்களுக்கு ஸ்பெஷலாக அமைந்ததோ என்னவோ... தமிழ் சினிமாவின் கடந்த தலைமுறை ஹீரோயின்களுக்கு உற்சாகமாக அமைந்தது. 'ஸ்ரீகலா சுதா தெலுங்கு அசோஸியேஷன்’ சார்பில் தெலுங்கு திரை உலகில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகைகள் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. காஞ்சனமாலா விருதை அஞ்சலி தேவிக்கும் பி.பானுமதி விருதை சௌகார் ஜானகிக்கும் கண்ணாம்பாள் விருதை ஜமுனா ராணிக்கும் சாந்த குமாரி விருதை கிருஷ்ணகுமாரிக்கும் சாவித்ரி விருதை வாணிஸ்ரீக்கும் தமிழக ஆளுநர் ரோசய்யா வழங்கினார். பத்மினி விருதை சரோஜா தேவி யும் புஷ்பவல்லி விருதை ராஜசுலோச்சனாவும் எஸ்.வர லட்சுமி விருதை ராஜஸ்ரீயும் ஸ்ரீரஞ்சனி விருதை காஞ்ச னாவும் டி.ஆர்.ராஜகுமாரி விருதை கே.ஆர்.விஜயாவும் ஜி.வரலட்சுமி விருதை ஜெயந்தியும் பெற்றுக்கொண்டார் கள். ஒரே மேடையில் இத்தனை நடிகைகள் ஒன்றுகூட... அந்த இடமே நினைவலை பரவசத்தில்தழுதழுத் தது. சிலரிடம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் இருந்து...

 அஞ்சலிதேவி: ''காஞ்சன மாலா அவ்வளவு பிரமாதமான நடிகை. வாசன் சாரோட ஜெமினி எடுத்த 'பாலநாகம்மா’ படத்துல அவங்க அவ்வளவு அருமையா நடிச்சிருப்பாங்க. நான் சினிமாவுக்கு வந்தப்ப, உடல்நிலை சரி இல்லாம கஷ்டப்பட்டாங்க. நேர்ல போய்ப் பார்த்து அழுதேன். இந்த நிகழ்ச்சியில்கலந்துக் கிட்ட எல்லா நடிகைகளும் 'அஞ்சலி பிக்சர்ஸ்’ல நடிச்சு இருக்காங்க. 'மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்தோட இந்திப் பதிப்புல சரோஜாதேவியும் நாககன்னியா காஞ்சனாவும் நடிச்சாங்க. அப்போ  நடிப்புத் தொழிலைத் தெய்வ பக்தியோட செய்வாங்க. பெண்களை உயர்த்திச் சொல்ற பவித்ரமான பாத்திரங்கள்ல மட்டும்தான் நடிப்பாங்க. நடிகையைச் சுத்திதான் கதையே வரும். படத்தோட தலைப்பைக்கூட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்துவைப்பாங்க!''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசியைச் சந்தித்த இளவரசி!

ராஜ சுலோச்சனா: ''இந்தி நடிகை ரேகாவோட அம்மாதான் புஷ்பவள்ளி. அந்தக் காலத்துலயே கிளாமரா... ஸ்டைலா இருப்பாங்க. சொந்தக் குரல்ல பேசி, பாட்டும் பாடி நடிப்பாங்க. அந்தக் காலத்துல நாங்க எல்லாரும் ஒரே குடும்பமா இருந்தோம். எங்க எல்லாருக்கும் ஒரே மேக்கப்மேன்தான். வரிசையாஉட்கார்ந்து மேக்கப் போட்டுக்குவோம். மனசுல துளிகூட ஈகோ இருக்காது. ஒரு செட்ல ஷூட்டிங் நடந்துச்சுன்னா பக்கத்து செட் படப்பிடிப்புல இருந்து நடிகைங்க தேடிவந்து நாங்க நடிக்கறதை வேடிக்கை பார்ப்பாங்க. ஜெயந்தி, சௌகார் ஜானகி, கிருஷ்ணகுமாரியை அடிக்கடி பார்ப்பேன். இன்னைக்கு எல்லோ ரையும் ஒண்ணா சேர்த்துவெச்சுப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்!''

ராஜஸ்ரீ: ''எம்.ஜி.ஆர்., கமலுக்கு  அம்மா கேரக்டர்ல நடிச்சு இருக் காங்க வரலட்சுமி அம்மா. 'பூவா தலையா’ படத்துல எனக்கு மாமியாரா நடிச்சாங்க. சென்னை யில அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். சென்னைக்கு வரும் போது எல்லாம் மறக்காம சரோஜா தேவி எனக்கு போன்

அரசியைச் சந்தித்த இளவரசி!

பண்ணுவாங்க. அந்தக் காலத்துல பொது நிகழ்ச்சின்னா நடிகைங்க பட்டுப்புடவை கட்டிக்கிட்டு, தலை நிறையப் பூவெச்சு தான் வருவாங்க. 'காதலிக்க நேரமில்லை’ படத்துல நான் ஜீன்ஸ் போட்டு நடிச் சப்போ, பெரிய நடிகைங்க எல்லாம் காச்மூச்னு கத்துனாங்க. இப்போ பொதுஇடங்கள்லயே பல பெண்கள் செக்ஸியா வர்றாங்க. நாங்க நடிச்சப்போ தெளிவா தமிழ்ல வசனம் பேசச் சொல்வாங்க. டயலாக் பேசும்போதே முகத்துல எக்ஸ்பிரஷன் காட்டணும். இப்போ நடிக்க வர்ற பெண்கள் அழகா இருந்தா மட்டும் போதும். திறமை இரண்டாம் பட்சமாதான் இருக்கு!''

சரோஜாதேவி: ''நான் ரொம்ப மதிச்சு ரசிச்ச நடிகை பப்பியம்மா. அவங்க பேர்லயே எனக்கு விருது கிடைச்சிருக்கு.  நாங்க நடிச்ச காலம் பொற்காலம். இப்போ வர்ற சினிமாவுல சம்பந்தமே இல்லாம திடீர் திடீர்னு சண்டை வருது. பாட்டு வரில்லாம் சுத்தமா புரியவே இல்லை. 'பாலும் பழமும்’ படத்துல சிவாஜி சார் பாடுவாறே 'போனால் போகட்டும் போடா’னு, அது மாதிரி ஒரு பாட்டை இப்போ காட்டுங்க பார்க்கலாம்!''

கே.ஆர்.விஜயா: ''டி.ஆர்.ராஜகுமாரி யைப் பல தடவை நேர்ல பார்த்திருக் கேன். 'விஜயா, நீயும் நானும் சேர்ந்து நடிக்கவே இல்லை’னு சொல்வாங்க. அந்த வருத்தம் எப்பவும் எனக்கு உண்டு.  'சந்திரலேகா’ மாதிரி எந்த ஜென்மத்துலயும் படம் எடுக்க முடியாது. அந்தக் காலத்துல சரோஜா தேவி ரொம்ப ரிசர்வ்டு டைப். 'யார் கிட்டயும் முகம் கொடுத்துப் பேச மாட்டாங்க’னு கேள்விப்பட்டு இருக் கேன். 'நான் ஆணையிட்டால்’ படத் துல நாங்க ரெண்டு பேரும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியா நடிச்சோம். அப்போ என்கிட்ட பாசமா இருந்தாங்க. தன் வீட்ல இருந்து சாப்பாடு வரவழைச்சு, பரிமாறிச் சாப்பிட வெச்சாங்க. அடிக்கடி பெங்களூர்ல இருந்து போன் செஞ்சு பாசமா பேசு வாங்க. சமீபத்துல ஒரு நாள் என்னைத் தேடி வந்தார் சினேகா. 'இன்னைக்கும் எல்லோரும் உங்களைத்தான் 'புன்னகை அரசி’னு சொல்றாங்க. உங்களை ரொம்ப நாளா சந்திக் கணும்னு நெனைச்சுட்டு இருந்தேன்’னு சொன்னாங்க. 'அரசியைப் பார்க்க இளவரசி வந்திருக்காங்க’னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சுட்டே இருந் தோம்!''

-கலகலவெனச் சிரிக்கிறார் கே.ஆர்.விஜயா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism