Published:Updated:

ஜோடி சாம்பியன்!

க.நாகப்பன்படங்கள் : ப.சரவணகுமார்

ஜோடி சாம்பியன்!

க.நாகப்பன்படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
ஜோடி சாம்பியன்!

மானஸா மனசுல யாரு?

 ன் டி.வி. 'உதிரிப்பூக்கள்’ சீரியலின் நாயகி மானஸாவின் கணவர் யார் தெரியுமா? 'கற்க கசடற’, 'கோரிப்பாளையம்’, 'முத்துக்கு முத்தாக’ படங்களில் நடித்திருக்கும் விக்ராந்த். ''தெலுங்கு, மலையாளப் படங்கள், சீரியல்களில் நடிச்சிருக்கேன். ஆனா, தமிழ்ல இதுதான் ஃபர்ஸ்ட். சீரியல் டைரக்டர் விக்கிரமாதித்யன் ரொம்ப ஃப்ரெண்ட்லி. புது டீம் மாதிரி இல்லாம ரொம்ப வருஷம் பழகின ஃபீலிங். அதனாலயே என் ஒரு வயசுக் குழந்தை யஷ்வந்த் வீட்ல இருந்தாலும் நடிக்கச் சம்மதிச்சேன். ஆனாலும், எப்பவும் மனசுல அவன்தான் நிறைஞ்சிருக்கான். அவனைத் தேடினா உடனே வீட்டுக்கு ஓடிருவேன்!'' - சாந்தமாகச் சிரிக்கிறார் மானஸா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோடி சாம்பியன்!

'ஐ யம் பேக்!’  

ட... 'குட்டி’ பூஜாவா இது? திருமணத்துக்குப் பிறகு, ஏகத்துக்கும் வெயிட் போட்டிருந்த பூஜா, இப்போ சூப்பர் ஸ்லிம். ''திரும்ப பப்ளி பூஜா ஆகிட்டீங்களே... சினிமா சான்ஸ் எதுவும் வந்திருக்கா?'' என்று கேட்டால், ''நோ... நோ... சீரியல்தான் என் சாய்ஸ். ஓவரா வெயிட் போட்டுட்டேன்னு எனக்கே தெரிஞ்சது. அதான் கடுமையான டயட் இருந்து எடை குறைச்சுட்டேன். எண்ணெய்ப் பலகாரங்கள், அரிசிச் சாப்பாட்டை மூணு மாசம் தொடவே இல்லை. இப்போ ரொம்ப லைட்டா ஃபீல் பண்றேன். ஏதோ திரும்ப டீன்-ஏஜ் பருவத்துக்குப் போயிட்ட மாதிரி இருக்கு. என்ன... என்னைப் பார்க்கிற அன்பர்களும் நண்பர்களும் 'என்னம்மா... உடம்பு சரியில்லையா? ரொம்ப இளைச்சுப் போயிட்ட?’னு துக்கம் விசாரிக்கிறதுதான் தாங்கலை. எல்லாருக்கும் நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்... நான் இப்பதான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன்ன்ன்ன்ன்ன்!'' - ஹை டெசிபல் உற்சாகத்தோடு சிரிக்கிறார் பூஜா.

ஜோடி சாம்பியன்!  

'ஜோடி நம்பர்-1 சீஸன்-5’ சாம்பியன்கள் மனோஜ்குமார் மற்றும் ஜெயந்த். கேரளக்காரரான மனோஜ்குமார் இப்போது கோயம்புத்தூர்வாசி.

ஜோடி சாம்பியன்!

''அப்பா, அம்மா, ஒரு தம்பி. நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். சின்ன வயசுல அப்பா வாங்கிக் கொடுத்த மைக்கேல் ஜாக்சன் சி.டி-தான் ஆரம்பம். 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ போட்டியில் கலந்துக்கிட்டப்ப, பிரபுதேவா மாஸ்டரே என்னை 'ஜூனியர் மைக்கேல் ஜாக்சன்’னு பாராட்டினாரு. இப்போ 'ஜோடி நம்பர் ஒன்’ல மொதல்ல எனக்கு வேற ஒருத்தர்தான் ஜோடி. ஆனா, எங்களுக்குள் செட் ஆகலை. ரம்யா கிருஷ்ணன் மேடம் 'கண்டிப்பா மனோஜுக்கு புது ஜோடி தேடணும்’னு சொல்லி, ஜெயந்த்தை ஃபிக்ஸ் பண்ணாங்க. டான்ஸ் மாஸ்டர், ஹீரோனு ஏதாவது ஒரு வகையில் சினிமாவில் இருக்கணும். அதான் என் லட்சியம்!'' - குதூகலக் குரலில் சொல்கிறார் மனோஜ்குமார்.

ப்ளஸ் ஒன் மாணவனான ஜெயந்த் சென்னைப் பையன். ''ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ல ஃபைனல் வரை வந்தும் நான் டைட்டில் வின் பண்ணலை. இப்போ சீஸன்-5ல ஜெயிச்சதும்தான் அந்த வருத்தம்போச்சு. இப்போ மனோஜ்தான்  என் பெஸ்ட் ஃப்ரெண்ட். அப்பா, அம்மா சந்தோஷத்துக்காக ஒரு டிகிரி முடிச்சுட்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்துருவேன். அடுத்து, 'உங்களில் யார் பிரபுதேவா’ சீஸன்-2வுக்குத் தயார் ஆகிட்டு இருக்கேன்!'' என்று சொல்லும்போதும் ஸ்டெப்ஸ் போட்டபடியே இருக்கின்றன ஜெயந்த்தின் கால்கள்!

''சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்!''

ஜோடி சாம்பியன்!

'சரவணன்-மீனாட்சி’ ஸ்ரீஜா நேரில் பார்க்கும்போது இன்னும் பாந்தம்... இன்னும் பளிச்!

''கேரளப் பொண்ணு நான். காலேஜ் படிக்கிற காலத்துல இருந்தே ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள். எத்தனை தடவைதான் 'முடியாது’, 'ஐடியா இல்லை’, 'நீங்க என் அண்ணன் மாதிரி’னு சொல்லிச் சமாளிக்கிறது. இப்போலாம் யாராச்சும் வந்து லவ் சொன்னா உடனே, 'வீட்ல வந்து பேசுங்க’னு சொல்லிடுவேன். ஆனா, சீரியஸாவே எனக்கு வீட்ல ரொம்ப தீவிரமா மாப்பிள்ளை தேடிட்டு இருக்காங்க. பையன் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும். எப்படிலாம் இருந்தா பிடிக்கும்னு கேட்டா தெரியாது. பார்த்ததுமே பிடிக்கணும். நல்ல வேலையில் இருக்கணும். எல்லாருக் கும் உதவுற மனசோடு இருக்கணும். அப்படி ஒரு நல்ல பையன் இருந்தா சொல்றீங்களா? சென்னையில் எனக்கு அரிசிச் சாப்பாடு ரொம்பப் பிடிச்சிருக்கு. சான்ஸ் கிடைக்கிறப்பலாம் ஃபுல் மீல்ஸா சாப்பிட்டுட்டு இருக்கேன். வெயிட் போடுறதுக்குள்ள கல்யாணம் முடிச்சிரணும்!'' - குறும்பாகச் சிரிக்கிறார் ஸ்ரீஜா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism