Published:Updated:

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

``என்னால் பதில் சொல்ல முடிஞ்ச விஷயங்கள்னா, நிச்சயமா பதில் சொல்வேன். ரெடி... ஷூட் த கொஸ்டீன்ஸ்'' எனத் தெறிக்கவிடுகிறார் நடிகை இனியா.

``எனக்கு ரொம்ப விருப்பமான பகுதி தம்பி இது. வாராவாரம் படிச்சுடுவேன்'' - உற்சாகமாக லைனுக்கு வருகிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை.

``பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹிஸ்ட்ரினு எதைப் பற்றி வேணாலும் பேசலாம். ஒரே கண்டிஷன், ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கணும்'' என நிபந்தனையோடு பேசுகிறார் நடிகை காயத்ரி.

``கொஸ்டீன்ஸை மெசேஜ் பண்ணீட்டீங்கன்னா, கூகுள்ள பதிலைத் தேடிட்டு வந்திடுவேன். அப்படி எல்லாம் செய்ய மாட்டீங்களா? என்னப்பா நீங்க... நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்ப்பா'' என டீல் பேசித் தொடங்குகிறார் நடிகை நதியா.

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

``PETA - விரிவாக்கம் என்ன?''

பதில்: People for the Ethical Treatment of Animals.

இனியா: ``அய்யோ... இதைப் பற்றித்தான் நேத்து முழுக்க என் ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டு இருந்தேன். பீட்டாவுக்கு ஃபுல் ஃபார்ம்னு ஒரு ஃப்ரெண்ட் சொன்னாளே... மறந்துட்டேனே! (சிரிக்கிறார்) பெட்ஸ் அசோசியேஷன்னு வருமா? இல்லை... இல்லை. இருங்க. இப்ப சொல்லிடுறேன். ஆங்... People for  Ethical Treatment of Animals-னு ஏதோ வரும்னு நினைக்கிறேன். சரியா?'' என்கிறார் டவுட்டாக.

பவா செல்லதுரை: விடாமல் சிரிக்கிறார் ``நீங்க இந்தக் கேள்வியைக் கேட்பீங்கனு முன்னாடியே யூகிச்சேன். என் நண்பர் ஒருத்தர் வெட்னரி டாக்டர். அவர்கிட்ட இப்பதான் கேட்டுக் குறிச்சுவெச்சேன். People for Ethical Treatment of Animals. சரியா? விகடனின் தீவிர வாசகரா இருந்துட்டு, இதைக்கூட யூகிக்க முடியலைன்னா எப்படி பையா?'' அதே சிரிப்பு.

காயத்ரி: ``People for Ethical Treatment of Animals. பீட்டாவை வெச்சுதான் இவ்வளவு பெரிய பிரச்னை நடந்துட்டு இருக்கு. இதுக்குக்கூட பதில் தெரியலைன்னா எப்படி பாஸ்?''

நதியா: ``Protection of Animals-னு வரும். நடுவுல ஒரு வார்த்தை எதையோ மிஸ்பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். அதையும் சேர்த்தா சரியான ஆன்சர் கிடைச்சுடும். அதை நீங்களே சேர்த்துடுங்க. கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா'' எனச் சிரிக்கிறார்.

``சசிகலா குடும்பத்துக்கு எதிராக முதன்முதலில் கருத்து சொன்ன அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் யார்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

பதில்: கே.பி.முனுசாமி

இனியா: ``அய்யோ... என்கிட்ட பொலிட்டிகல் கொஸ்டீன்ஸ் மட்டும் தயவுசெஞ்சு கேட்றாதீங்க. எனக்குக் கொஞ்சம்கூட இன்ட்ரஸ்ட் இல்லாத ஏரியா அது. யாரைப் பற்றியும் நிறைவாவோ, குறைவாவோ  விமர்சனம் பண்றதுக்கு, எனக்கு விருப்பம் இல்லை. இந்தப் பதிலை அப்படியே இந்த கொஸ்டீனுக்கு ஆன்சரா எழுதிடுங்க. என்னை மாட்டிவிட்டுறாதீங்க.''

பவா செல்லதுரை: ``கே.பி.முனுசாமி. சரியான பதிலா?'' `சரி' என்றதும் உற்சாகமாக, ``என் நண்பர்கள் எல்லாரும் நான் அரசியலில் அப்டேட்டே இல்லாத ஆளு, எல்லாமே நீங்க லிட்ரேச்சர் ஆகதான் பார்க்கிறீங்கனு சொல்வாங்க. ஆனா, பரவாயில்லையே நான் `முனுசாமி'னு சரியான பதிலைச் சொல்லிட்டேனே.''

காயத்ரி: ``தெரியலையே... சசிகலாவை மட்டும் அடிக்கடி நியூஸ்ல பார்ப்பதால், அவங்க மட்டும்தான் தெரியும். சரி, எந்த எக்ஸ் மினிஸ்டர்னு சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கிறேன்.''

நதியா: ``அவங்க அண்ணா பொண்ணு தீபா அல்லது பையன் என்னமோ பேரு வருமே. அவங்கதானே எதிர்த்தாங்கனு படிச்சேன். எனக்கு பாலிட்டிக்ஸ் பற்றி அவ்வளவா தெரியாதுப்பா. நான் பாம்பே, கேரளானு சுத்திட்டு இருக்கேன்.  அங்கே எல்லாம் தமிழ்நாடு பற்றி நியூஸ் வருவது ரொம்பக் கம்மி. இதுவே தமிழ்நாட்டுல இருந்தேன்னா, உங்க கேள்விக்கான பதிலைப் புட்டுப்புட்டு வெச்சிருப்பேன்.''

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

`சோ' நடத்தி வந்த `துக்ளக்' பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் யார்?''

பதில்: ஆடிட்டர் குருமூர்த்தி

இனியா: ``துக்ளக்கா? இந்தப் பெயரை எப்படி ஸ்பெல் பண்ணணும்? இங்கிலீஷ்ல ஸ்பெல்லிங் சொல்லுங்க. இது யாரோட பேரு? சுத்தம்... நிஜமாவே தெரியாதுங்க. இந்தப் பெயரையே இப்பதான் கேள்விப்படுறேன். நான் ஒரு மலையாளி. கேரளாவில் இருக்கும் பொலிட்டிகல் ஸ்டேட்டஸ் பற்றியே விசாரிக்க மாட்டேன். இதுல எங்க தமிழ்நாடு பாலிட்டிக்ஸ் பற்றி தெரிஞ்சுக்க?''

பவா செல்லதுரை: ``குருமூர்த்தி. சோ கடைசிவரைக்கும் நியாயமான ஆளா எங்கேயுமே இருந்தது இல்லை.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஏஜென்ட் மாதிரிதான் அவரது செயல்பாடு இருந்தது. அதன் தொடர்ச்சியா அதே மாதிரி ஒரு நபரை செலெக்ட் பண்ணியிருக்காங்க.''

காயத்ரி: ``சோ ராமசாமி. அவங்க நடத்திவந்த பத்திரிகையா `துக்ளக்'? அதுவே எனக்கு இப்பதான் தெரியும். ஒரு ஷோ பண்றதுக்காக அவரைக் கூப்பிடலாம்னு நினைச்சுட்டு இருந்தோம். அதுக்குள்ள அவர் இறந்துட்டார். அவரை ஒரு நடிகராத்தான் எனக்குத் தெரியும்.''

நதியா: ``அய்யோ... நான் சோவைப் பற்றி மட்டும்தான் கேள்விப் பட்டிருக்கேன். மோடியின் ஃப்ரெண்ட், அரசியல்வாதிகளுக்கு சிறந்த ஆலோசனை எல்லாம் சொல்வார்னு தெரியும். மற்றபடி எதுவும் தெரியாது'' என்கிறார் சோகமாக.

“என்னை மாட்டிவிட்டுறாதீங்க!”

``தடகள வீரர் மாரியப்பனின் கதையை இயக்கப்போகும் இயக்குநர் யார்?''

பதில்: ஐஸ்வர்யா தனுஷ்.

இனியா: ``அய்யோ... நான் இதைப் பற்றி கேள்வியே படலை. போங்க... ஈஸியா இருக்கும்னு சொல்லிட்டு, எல்லாமே கஷ்டமா கேட்டுட்டீங்க'' எனச் செல்லமாகச் சிணுங்குகிறார்.

பவா செல்லதுரை: ``ஆகா... இது தெரியலையே! இயக்கப்போகும் இயக்குநர் தமிழ் இயக்குநரா?  அப்போ `பூ' சசியா? ஆங்... பாலாஜி சக்திவேலா? அவரும் இல்லையா? அப்ப தெரியலை. நீங்களே சொல்லிடுங்க'' பதிலைச் சொன்னதும், ``அடடா... ஒரு கேள்வியை மிஸ்பண்ணிட்டேனே.'' 

காயத்ரி: கேள்வியை முடிக்கும் முன்னரே ``ஐஸ்வர்யா தனுஷ். மாரியப்பன் கதையை வெச்சு இயக்கப்போறேன்னு சொன்னதுமே... ட்விட்டர், ஃபேஸ்புக்ல டிரெண்ட் ஆச்சே. இதுகூடத் தெரியாம இருப்போமா? சரி, நான் ஃபிப்ட்டி ஃபிப்ட்டி சரியான பதில் சொல்லியிருக்கேன். என்ன கிஃப்ட் தரப்போறீங்க பாஸ்?''

நதியா: ``ஆகா... மாரியப்பன் பாராலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சாரே, அவர்தானே? இவர் வாழ்க்கை வரலாறை யாரோ படமா எடுக்கப்போறாங்கனு படிச்சனே. தனுஷா... இல்லையா? அப்ப அவங்க மனைவி ஐஸ்வர்யாவா இருக்கும்? சரியா, சூப்பர். எப்படியோ தக்கிமுக்கி ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிட்டேன். இப்படி எல்லாம் யாருமே என்கிட்ட கேள்வி கேட்டது இல்லை. சரி... நான் எவ்வளவு மார்க்?'' எனச் சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism