``இந்த டாக்டர்கிட்ட ஏன் ஒருத்தரும் ட்ரீட்மென்ட்டுக்கு வர்றது இல்லை?''
``பின்னே, `கடமையைச் செய்... நலனை எதிர்பாராதே'னு போர்டு எழுதிவைச்சா, யார் வருவாங்க?''
- பர்வீன் யூனுஸ்

`` `சோஷியல் மீடியா, சோஷியல் மீடியா'னு சொல்றாங்களே...
என்னய்யா அது?''
``மீம்ஸ் போட்டு, உங்களைக் கலாய்க்கிற களம் தலைவரே.''
- பர்வீன் யூனுஸ்
``வேலைவெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்.''
``ஏ.டி.எம் மெஷின் மாதிரி இருக்கேன்னு சொல்லு.''
- விகடபாரதி
``போராட்டத்தை நினைத்து, தலைவர் வருத்தப்பட்டாரா?''
`` `இந்த நேரத்திலும் என்னைப் பற்றி மீம்ஸ் வருதே... எப்படி?'னு கேட்கிறார்.''
- அம்பை தேவா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism