`` `முறைமாமன்’ படப்பிடிப்புல இருக்கும்போதுதான் சுந்தர் என்கிட்ட தன் காதலைச் சொன்னார். எதையும் சுத்திவளைச்சுப் பேசத் தெரியாது அவருக்கு. `நமக்குக் குழந்தை பிறந்தா, அது உன் சாயல்ல இருக்குமா. இல்லை என் சாயல்ல இருக்குமா?’னு திடீர்னு கேட்டபடியே என் எதிர்லே உட்கார்ந்தவர், `உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். என்ன சொல்றே?’ன்னார். ஒரு சின்னத் திகைப்பு வந்தது. ஆனா, அந்தக் கம்பீரம் பிடிச்சிருந்தது. உடனே ஓ.கே சொல்லிட்டேன்.

இதோ, கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் பெத்தாச்சு. நான் சரியான ஜாலி பார்ட்டி. எதுக்கெடுத்தாலும் `ஐ லவ் யூ’ சொல்வேன்.

ஆயிரம் முறை `ஐ லவ் யூ’ சொல்லி யிருப்பேன். சலிச்சுக்குவார். `அதான் தெரியுமே... ஏன் அடிக்கடி சொல்றே?’ம்பார். அவருக்கு இந்த மாதிரியான அன்பை வெளிப்படுத்துற விஷயங்களில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஆனா, எனக்குப் பிரசவ நேரத்துல பதறினார் பாருங்க... ஆயுசுக்கும் மறக்காது. என் பிறந்த நாளன்னிக்கு எப்படித் தோணிச்சோ தெரியலை. ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தார். `அட’னு ஆச்சர்யமாப் பிரிச்சுப் பார்த்தா உள்ளே எதுவுமே எழுதலை. `என்னங்க இது?’னு கேட்டா... `என் சார்பா எதாவது எழுதிக்கோ. என் மனசுல என்ன இருக்குனு என்னைவிட உனக்குத்தானே அதிகமா தெரியும்’னு சிரிச்சார். அந்த வெள்ளை மனசுதான் எனக்குப் பிடிச்சது.’’

- எஸ்.பி.ஏ