ஓர் அலுவலகத்துக்குள் புதிதாக நுழைவது என்பது, புதிதாகக் காதலிப்பதைப் போன்றது; புதிதாக ஸ்மார்ட்போன் வாங்குவதைப் போன்றது. ஆரம்பத்தில் இருக்கும் அத்தனை ஆப்ஷன்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தாலும் போகப் போக டொக்காகி டொய்ய்யென்று ஆகிவிடும். புதிய அலுவலகம், முதல் வாரம் தரும் அதிசய சுவாரஸ்யங்கள், அபூர்வராகங்கள், புதிய பூபாளங்கள் எல்லாமே 30-வது வாரத்தில் முக்கல் முனகலாக மாறி, கடுப்பில் காண்டாகி, விக்கி வீணாய்ப்போகும். நெற்றியில் பட்டை போட்ட விநாயகம் எப்படி சேட்டை பண்ணும் வேதாளமாக மாறுகிறான்; எப்படி நடக்கிறது இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன்?

விடியும் வரை காத்திரு

முதல் வாரம்: ஆபீஸ் திறக்க வாட்ச்மேன் வருவதற்கு முன்பே கேட்டுக்குப் பக்கத்தில் புனிதப் பூனையாகக் காத்திருப்போம். எல்லோருக்கும் முந்தி `இன்னிக்கு ஆபீஸுக்கு நான்தான் ஃபர்ஸ்ட்' என அட்டெண்டன்ஸ் போட்டு செஞ்சுரி அடித்த கோஹ்லி போல பில்டப் கொடுப்போம். மொத்த ஆபீஸும் வீட்டுக்குப் போய் `தெய்வமகள்' பார்க்க ஆரம்பித்தப் பிறகும், நம் விரல்கள் மட்டும் அலுவலகக் கணினியோடு கதகளிகள் ஆடிக்கொண்டிருக்கும். நம்முடைய கடமை உணர்வைக் கண்டு வாட்ச்மேன்கூட கண்ணீர் உகுத்து, `போதும் ப்ரோ... கிளம்புங்க' என விரட்டுவார். நேரம் முடிந்த பிறகும் அவசரமாக அடிஷனல் ஷீட் கேட்கும் பரீட்சைப் பையனாக, `அண்ணே... அஞ்சு நிமிஷம்' என `தல' அஜித் போல பேசிக் கலங்கடிப்போம்.
30-வது வாரம்: ஆபீஸ் டைம் என்பது 9 மணி என்றாலும் உள்ளே நுழையும் நேரம் என்பது 9:45 ஆக மாறியிருக்கும்.

டீ டைம் என்பது, ஒரு மணி நேரமாகவும், லன்ச் டைம் என்பது இரண்டரை மணி நேரமாகவும் நீளும். இஷ்டப்பட்டால் நடுநடுவே வேலை நடக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அலுவலகம் முடிய அரை விநாடி இருக்கும்போதே சீறிப்பாயும் நம் பைக்குகளின் பங்க்சுவாலிட்டி அகில உலக ஹெச்.ஆர்-கள் சங்கங்களுக்கே ஆச்சர்யம் தரக்கூடியவை.

குட்மார்னிங் ஆபீசர்ஸ்

முதல் வாரம் : ஆபீஸுக்குள் நுழையும்போதே `பாகுபலி’யைக் கண்ட கட்டப்பாவைப் போல பார்க்கும் எல்லோரையுமே குனிந்து வணங்கி பம்மல் கே.பன்னீர்செல்வமாகவே வாழ்வோம். வாட்ச்மேன் தொடங்கி ஆபீஸ் பாய் வரை இதில் யார் சீனியர்... யார் ஜூனியர் எனப் புரியாமல் எல்லோருக்கும் ஒரே சீராகப் பாயும் நம் வந்தனங்கள். போலீஸ் பரேடுக்குள் நுழைந்த அக்யூஸ்ட் போல அலுவலகத்தில் நுழையும்போதே ஒவ்வொருவரையும் அச்சத்தோடு அணுகுவோம். `ஒருவேளை இவன்தான் அப்ரைஸல் போடுவானோ... இவன்தான் புரமோஷன் குடுப்பானோ!' என லேசான முறைப்புகளும்கூட அல்லுவிடும். இந்த அச்சம் முற்றிப்போய் பக்கத்து ஆபீஸ் பையனுக்கு எல்லாம் `அண்ணே வணக்கண்ணே’ என பயமுறுத்துவோம்.

30-வது வாரம்: எதிரில் கம்பெனி சி.இ.ஓ-வே வந்தாலும் டிராஃபிக் போலீஸ் மடக்கும் லைசென்ஸ் இல்லாத பைக்காரன்போல அப்படியே கண்டும்காணாமல் `குக்கூ’ தினேஷ் போலவே கடந்து செல்வோம். அதையும் மீறி அந்த நபர் ஸ்மைலி ஃபேஸோடு `ஹாய் ப்ரோ... ஹவ்ஸ் லைஃப்?' எனப் பேச்சுக்கொடுத்தால், `ஒப்புக்கொண்ட்ரா' என்றுதான் நமக்குக் கேட்கும். மிகுந்த சலிப்புடன், `இவனுக்கெல்லாம் வணக்கம் சொல்லவேண்டியிருக்கு பாரு. காலக்கொடுமை’ என இடுப்புக்கு மேல் கைகள் உயராமல் அப்படியே `ஆங்' என்று கேப்டன் போல ஒரு சல்யூட்டைப் போட்டுவிட்டு ஃப்ளைட் பிடிக்கப்போகும் பிரதமர் போல சிட்டாகப் பறப்போம்.

சார், வேலை இருக்கா?

முதல் வாரம்: என்ன வேலைசெய்வது என்றே புரிபடாமல் ஒரு வாரம் மென்டலாகித் திரிவோம். `அய்யோ! நாம வேலையே பார்க்காம இருந்தா நம்மளை கட்டம் கட்டிடுவாங்களோ!' என மைண்ட்வாய்ஸ் டி.டி.எஸ்-ல் அலற, அச்சத்தில் ஒவ்வொரு டேபிளாகப் போய், `ஐயா... நான் மாது வந்திருக்கேன். வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க' என பிட்டைப் போடுவோம். அவர்களோ `அடுத்த டேபிள் பாருப்பா’ என விரட்டுவார்கள். இருந்தாலும் `மாடிப்படி மாது... மாரல் சயின்ஸை விட்டுராதடா' என டேபிள் டேபிளாக வேலை கேட்டு அலைவோம்.

30-வது வாரம்: ஏற்கெனவே நூறு வேலைகள் பெண்டிங்கில் கிடந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லாமல், `ப்ரோ, வாட் அபௌட் எ காபி?’ என எந்நேரமும் மற்றவர்களைப் போட்டு நொய் நொய் எனத் தொந்தரவு பண்ணிக் கொண்டிருப்போம். வேலையே இல்லை என்றாலும் அதைப் பற்றி எங்கும் மூச்சு விடாமல் கமுக்கமாக இருந்து கம்பி நீட்டுவோம்.

காமெடியைப் பார்க்கவிடுங்கய்யா!

முதல் வாரம்: `எக்ஸ்க்யூஸ்மி, இங்கே ஃபேஸ்புக் பார்க்கலாம்... லைட்டா லைக் போட்டுக்கலாமா?’ எனப் பம்மிக்கொண்டே பிரௌஸரைத் திறப்போம். `இவடே மலையாள சாங்ஸ் யூ-டியூப் பார்க்கலாமா... வேண்டாமா?’ என டாஸ் போட்டு முடிவெடுப்போம். பின்னால் சிசிடிவி கேமரா இருந்தால் அதில் சிக்காதபடி மானிட்டரை லேசாகத் திருப்பிக்கொண்டு படம் பார்ப்போம். காதில் ஹெட்போன் மாட்டலாமா... டாரன்ட்டில் படங்கள் டவுண்லோடு பண்ணலாமா என்பது எல்லாம் தெரியாமல் மண்டை காயும்.

30-வது வாரம்: டீம் லீடர் வந்து பின்னால் நின்றுகொண்டிருந்தாலும், `அட இருங்கஜி. அஞ்சு நிமிஷம்' எனக் `கலக்கப்போவது யாரு?’ காமெடியைப் பார்த்துக் கொக்கொக்கொக் என கோழி மாதிரி சிரிப்போம். தலைக்கு மேல் வேலை இருந்தாலும், புரட்சித் தோழிகளின் ஸ்டேட்டஸ்களுக்கு, `அவனுங்களை சும்மாவிடக் கூடாது தோழி. போலீஸைக் கூப்பிடுங்க தோழி. கமான்... கமான்... ' என்று கமென்ட்ஸ் போட்டு புரட்சித் தீ மூட்டி, குளுகுளு ஏசியில் குளிர்காய்வோம். காதில் எந்நேரமும் அலங்கரிக்கும் ஹெட்போன், காதலியின் கால்களுக்கு மட்டும்தான் தரை இறங்கும். இத்தனைக்கும் நடுவில் பத்து லேட்டஸ்ட் படங்கள் சத்தம் இல்லாமல் டாரன்டில் இறங்கிக் கொண்டிருக்கும். யூ-டியூப், ஃபேஸ்புக் எல்லாம் தடை விதித்தாலும் புராக்ஸியில் ஓப்பன் பண்ணி ஐ.டி டிபார்ட்மென்ட்டுக்கு அல்வா கொடுப்போம்... இன்ஜினீயர்டா!

வாட்ஸ்அப் வாடா

முதல் வாரம்: அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் நம்மைக் கோத்துவிட்டதும், நாம் எல்லோருக்கும் `ஹாய்' சொல்வோம். உடனே ஒட்டுமொத்த குரூப்பும் கிளம்பி வந்து உங்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கும். அப்படியே உச்சிக் குளிரும். `இந்த `வானத்தைப்போல’ ஆபீஸ்ல எப்படி நான் குடும்பம் நடத்தப்போறேன்?' என நெகிழ்ந்து மகிழ்ந்து நெஞ்சம் கலங்கும். ஆனால், உங்கள் எமோஷன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு `எல்லோருக்கும் நன்றி’ எனப் போடுவீர்கள். அதில் டீம் லீடர் தொடங்கி சகலரும் போடும் ஜோக்குகளுக்கும் வதந்திகளுக்கும் `வாவ்’, `அருமை’, `செம’ என எதையாவது போட்டுக்கொண்டே இருப்பீர்கள். குறைந்தபட்சம் லைக்கிடும் கை போட்டால்தான் உங்களுக்கு நிறைவாக இருக்கும்.

30-வது வாரம்: அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் டீம் லீடர் எதைப் போட்டாலும் இப்போதும் அதே `அருமை’, `சூப்பர்’, `வாவ்’களை அள்ளி அள்ளிப் போட்டாலும் மனசு கோபத்தில் பொங்கிப் பொசுங்கி வீங்கி வெடிக்கும். அத்தனை கோபத்தையும் அப்படியே கொண்டுபோய் டீம் லீடர் இல்லாத இன்னொரு சீக்ரெட்டான ஆபீஸ் குரூப்பில் போய்க் கொட்டுவீர்கள். மொக்கை போட்டுக் கொல்றார்பா எனக் கதறுவீர்கள்.

லன்ச் பெஞ்ச்

முதல் வாரம்: நம்மோடு உட்கார்ந்து லன்ச் சாப்பிட, ஒட்டுமொத்த ஆபீஸும் வாட்ச்மேன் தொடங்கி முதலாளி உள்பட காத்திருப்பதாக நினைப்போம். இவர்களில் யாரோடு உட்கார்ந்து சாப்பிடுவது என மனதுக்குள் இங்கி பிங்கி பாங்கி எல்லாம் போட்டும் முடிவெடுக்க முடியாமல், மன்மோகன் சிங் போல திணறுவோம். கடைசியில், பார்க்கப் பழம்போல் இருக்கும் ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தால், அந்த மனிதர் புளிச்சுப் புளிச்சு என முகத்திலேயே துப்பிக்கொண்டு பேசியபடி, தயிர்சாதத்தைப் புறங்கையில் வழியவிட்டு நாவால் நர்த்தனம் புரியும் பயங்கர உணவாளியாக இருப்பார். `அம்மோவ் காப்பாத்துங்கோ..!' எனத் தப்பித்து அடுத்த ஆளைக் கண்டுபிடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வரும்.

30-வது வாரம்: நமக்குனு நாலு நண்பர்கள், அவர்களோடு மட்டும்தான் லன்ச் என வாழ்க்கை மாறியிருக்கும். அது அலுவலக அரசியல்கள் அத்தனையும் விவாதிக்கப்படும் `நேர்படப்பேசு', `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிகள் நடக்கும் இடமாக மாறும். இந்த நான்கு பேரைத் தவிர அந்நியர் எவருக்கும் அங்கே அனுமதி இருக்காது. அத்துமீறினால் எதையாவது கேட்டுக் கலாய்த்து, டென்ஷனாக்கி விரட்டி அடிப்போம். உங்கள் கேங்கைக் கடந்து ஒருவர் சென்றாலே கிசுகிசுவென எதையாவது பேசி அந்த நபர், `நம்மளைப் பற்றித்தான் ஏதோ பேசுறாய்ங்க என்னவா இருக்கும்?' எனக் குழம்பி குழம்பியே சாவார். கேங்கில் இருக்கப் பிடிக்காமல் இரண்டு பேர் தனியாகப் பிரிந்து போய், தனி கேங் ஆரம்பித்து, தனியாக தயிர்சாதம் சாப்பிடுவார்கள்.

மீட்டிங்... சாட்டிங்!

முதல் வாரம்: சீனாவிலோ, அமெரிக்காவிலோ மீட்டிங் என யாராவது முணுமுணுத்தால்கூட முதல் ஆளாகக் கிளம்பிப் போய் மீட்டிங் ஹாலில் பேப்பர் பேடோடு அமர்ந்திருப்போம். வித் க்யூட் ஸ்மைலிங் ஃபேஸ். அணித்தலைவர் எதைக் கேட்டாலும் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் டணால் டணால் என வந்து விழும். தலைவர் உங்களைப் பாராட்டிப் பாராட்டி டயர்டாகி, `போதும் ப்ரோ...’ எனக் கதறும் அளவுக்கு நீங்கள் கத்துக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்குவீர்கள்.

30-வது வாரம்: காதுகளுக்குள் வந்து யாராவது, `அடேய்... மீட்டிங் வாடா' என அழைத்தாலும் கண்டும்காணாமல் அப்படியே காவிரித் தீர்ப்பு வந்த கர்நாடகா அரசு மாதிரி கடந்து செல்வீர்கள். `பாஸ் எப்பப்பாரு மீட்டிங் வெக்கிறாங்க. அங்கே வந்து `ஏன்டா வேலை பார்க்கலை?'னு கேட்குறாங்க. வேலை பார்க்கலாம்னு உக்காந்தா, மீட்டிங் கூப்பிடுறாங்க' என ட்விட்டரில் படித்த தத்துவங்களை, துணைக்கு வைத்துக்கொண்டு மீட்டிங்குக்கு கட் அடிப்போம். அப்படியே நம்மைக் கடத்திப்போய் மீட்டிங்கில் உட்கார வைத்தாலும் எல்லா நேரமும் ஆங்கிரிபேர்ட்ஸ் என மறைவான இடத்தில் அமர்ந்துகொண்டு கேம்ஸ் ஆடிக்கொண்டிருப்போம்.