``பட்டாம்பூச்சி மாதிரிங்க அவ. நாங்கள்லாம் அவளை `பட்டர்ஃப்ளை'னுதான் கூப்பிடுவோம். அவ ரெண்டாவது படிக்கிற குழந்தைதான். ஆனா, பேச்சுல அவ்வளவு தெளிவு. மலர்ந்த பூ மாதிரி சிரிப்பா. அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும். பள்ளியில் எல்லா ஆசிரியைகளுக்குமே அவளைப் பிடிக்கும். அவளுக்கு இப்படி நடந்திருக்கும்னு எங்களால் கற்பனைகூடச் செய்ய முடியலை'' - ஹாசினி படித்த நாராயணா பள்ளி ஆசிரியைகள் அடக்க முடியாமல் அழுகிறார்கள்.

``இங்கே ஒட்டியிருக்கிற ஓவியங்கள் அவ வரைஞ்சதுதான். அவளுக்கு தம்பி மேல அவ்வளவு ப்ரியம். அவன், அக்காவுக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாம திகைச்சு நிற்கிறான். இவங்களை எல்லாம் எப்படித் தேற்றுறதுன்னே தெரியலை''

- புலம்புகிறார் ஹாசினியின் உறவுக்காரர்.

அந்த வீட்டின் முன்பு ஏராளமான பெண்கள் திரண்டு நிற்கிறார்கள். சிலர் ஹாசினியின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதறுகிறார்கள். சிலரிடம் கோபம் தகிக்கிறது.

``எங்களுக்கும் பொம்பளைப் பசங்க இருக்கு. இந்த மாதிரி பொறுக்கியை எல்லாம் ஜெயில்ல போட்டு, எங்க வரிப் பணத்துல சோறு போடக் கூடாது. உடனே அவனைத் தூக்குல போடணும்'' என்று வெடிக்கிற பெண்களைச் சமாதானம் செய்கிறது காவல் துறை.

ஹாசினியின் அப்பா ஸ்ரீனிவாஸ் பாபு, சோர்ந்துபோய் அமர்ந்திருக்கிறார். ஒரு வார்த்தை பேசினால்கூட அவருக்குக் கண்ணீர் கொட்டுகிறது. ``ஹாசினி போய்ட்டா... ஹாசினி போய்ட்டா...'' என்ற வார்த்தைகள் மட்டும் இடைவிடாமல் அவரிடமிருந்து வருகின்றன. உள்ளே, அம்மா ஸ்ரீதேவிக்கு குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்கிறது. ஹாசினிக்கு நேர்ந்ததைக் கேள்விப்பட்டு மயங்கி விழுந்தவர்தான். லேசாக விழிப்பு வந்தாலும் `ஹாசினி' எனக் கத்திக் கதறித் துடிக்கிற அவருக்கு ஆறுதல் சொல்ல எவரிடமும் வார்த்தைகள் இல்லை.

அந்த அழகு தேவதையின் உடல் என சில கரித்துகள்களைச் சுமந்துவருகிறது ஆம்புலன்ஸ். அத்தனை துயரங்களும் அழுகையாக வெடிக்கின்றன. பாதுகாப்புக்காக நின்ற காவலர்களும் சேர்ந்து அழுகிறார்கள்.

சென்னை மதனந்தபுரம் மாதா நகரில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறது ஸ்ரீனிவாஸ் பாபுவின் குடும்பம். அவருக்கு, சோழிங்கநல்லூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை. மனைவி ஸ்ரீதேவி, ஆசிரியை. இரண்டு பிள்ளைகள். ஹாசினிக்கு ஏழு வயது. மொத்தம் ஆறு வீடுகள்கொண்ட அந்தக் குடியிருப்புக்கு 10 மாதங்களுக்கு முன்புதான் குடிவந்திருக்கிறது ஸ்ரீனிவாஸ் பாபு குடும்பம். ஸ்ரீதேவி ஆசிரியையாக வேலைசெய்யும் பள்ளியிலேயே பிள்ளைகளும் படித்தார்கள்.

``இந்த அப்பார்ட்மென்ட்ல ஏழெட்டுக் குழந்தைங்க இருக்காங்க சார். எல்லாருமே பார்க்கிங்ல விளையாடுவாங்க. அவங்களை ஹாசினிதான் பாத்துக்குவா. சின்ன வயசுலேயே ரொம்பப் பொறுப்பா இருப்பா. இரண்டாவதுதான் படிச்சாலும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்... என மூணு மொழிகளும் பேசுவா. ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டா. ஓவியம் வரைவதில் அவ்வளவு ஆர்வம்...'' - ஸ்ரீனிவாஸால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

``மேல் தளத்துல மூணு வீடுகள் இருக்கு. ஒரு வீட்டுல ரெண்டு பசங்க. ஒருத்தன் டிப்ளோமா இன்ஜினீயரிங் முடிச்சுட்டு தரமணியில் வேலைசெய்றான். அவன் பேர் தஷ்வந்த். அந்தப் பையன் கேட்டைத் திறந்துபோட்டுட்டுப் போய்டுவான். அதிகமா சவுண்ட் வெச்சுப் பாட்டு கேப்பான். நாங்க கம்ப்ளெய்ன்ட் பண்ணுவோம். மற்றபடி அந்தக் குடும்பத்தோடு, வேறு யாருக்கும் தொடர்பே இல்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஹாசினி, மேல ஒரு வீட்டுல பிள்ளைகளோடு விளையாடிட்டு இருந்தா. மேலதானே இருக்காங்கனு நாங்க மார்க்கெட் போயிட்டோம். வந்து பார்த்தா அவளைக் காணோம். `நாங்க ஹோம்வொர்க் பண்ண உட்கார்ந்துட்டோம். ஹாசினி அப்பவே கீழே போயிட்டாளே'னு அந்தக் குழந்தைங்க சொன்னாங்க. ஏதோ விபரீதம் நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கிட்டோம். ஃப்ளாட்ல இருக்கிற சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தோம். எங்களால் ஹாசினி எங்கே போனாள்னு கண்டுபிடிக்க முடியலை. ஆனா, தஷ்வந்த் என்கிற இவ்வளவு பெரிய கொலைகாரன், இந்த ஃப்ளாட்டுக்குள்ளேயே இருப்பான்னு நாங்க கற்பனைகூட செய்யலை'' கதறும் ஸ்ரீனிவாஸ் பாபுவை உறவினர்கள் தேற்றுகிறார்கள்.

தஷ்வந்துக்கு வயது 22. நைட் ஷிஃப்ட் வேலை என்பதால், பகலில் பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருப்பான். டென்னிஸ் கோச்சாகவும் இருந்திருக்கிறான். பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துப் பேசுவானாம். குழந்தைகளை ஈர்ப்பதற்கு என்றே நாய்க்குட்டி ஒன்றையும் வளர்த்திருக்கிறான்.

தன்னோடு விளையாடிய பிள்ளைகள் ஹோம்வொர்க் செய்ய உட்கார்ந்ததும், வீட்டுக்குச் செல்ல படியில் இறங்கிய ஹாசினியிடம், நாய்க்குட்டியைக் காட்டி தன் வீட்டுக்குள் அழைத்திருக்கிறான் தஷ்வந்த். கள்ளம் கபடம் இல்லாமல் நாய்க்குட்டியின் பின்னால் ஓடிய அந்தப் பிஞ்சை, சீரழித்திருக்கிறான். வக்கிரத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சத்தம்போட்டதால் முகத்தில் பெட்ஷீட்டை வைத்து அழுத்த, துவண்டு முடிந்துபோனாள் ஹாசினி.

தஷ்வந்த் அடுத்து செய்ததுதான் இன்னும் கொடூரம். பதற்றமே இல்லாமல் ஹாசினியின் உடலை ஒரு பேக்கில் வைத்து தோளில் சுமந்துகொண்டு வெளியே வந்திருக்கிறான். தன் பைக்கில் சென்று, ஒரு பாட்டிலில் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, அனகாபுத்தூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், ஹாசினியின் உடலைத் தீவைத்து எரித்துவிட்டு வீட்டுக்கு கேஷுவலாக வந்துவிட்டான். சம்பவம் நடந்த சமயத்தில், பையோடு வெளியில் சென்ற தஷ்வந்த், திரும்பவும் வீட்டுக்குள் வரும்போது பை இல்லாமல் இருந்ததை சிசிடிவி வீடியோவில் பார்த்து, அதையே லீடாக வைத்து அவனை வளைத்திருக்கிறது காவல் துறை.

“நாங்க ஹாசினியைக் காணோம்னு எல்லா இடங்களிலும் தேடிக்கிட்டிருந்தோம். அந்தப் பையனும் வந்து எங்ககூடத் தேடினான். 100-க்கு போன்பண்ணி `குழந்தையைக் காணோம்’னு கம்ப்ளெய்ன்ட் செஞ்சதும் அவன்தான். சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்துக்கிட்டிருந்தப்போ, கூடவே நின்னு `ஜூம் பண்ணுங்க, லெப்ட் திருப்புங்க’னு ரொம்ப ஆர்வமா தேடின மாதிரி நடிச்சான். அதுமட்டும் இல்லாம, ஒரு டிவி சேனல் ரிப்போர்ட்டரைக் கூட்டிக்கிட்டு வந்து, `குழந்தையைக் காணோம். தகவல் தெரிஞ்சா தொடர்புகொள்ளுங்க’ன்னு பேட்டியும் கொடுத்தான். அவன் மேல எங்களுக்கு சந்தேகமே வரலை. ஆனா, தொடக்கத்துல இருந்தே அவனோட வீட்டைக் குறிவெச்சுத்தான் போலீஸ் விசாரிச்சது. வெளியில தேடாம இங்கேயே விசாரிக்கிறாங்களேன்னு எங்களுக்குக்கூட வருத்தமா இருந்தது. இவ்வளவு பெரிய குற்றத்தைப் பண்ணிட்டு எந்தப் பதற்றமும் இல்லாம, எப்படி அவனால் எங்ககூட நிற்க முடிஞ்சதுன்னு நினைக்கும்போது அதிர்ச்சியா இருக்கு'' என்கிறார் ஸ்ரீனிவாஸ் பாபுவின் உறவினர் மாருதி.

தஷ்வந்துக்கு குழந்தைகள் மீது எப்போதும் ஈர்ப்பு இருந்திருக்கிறது. மாதத்துக்கு ஒரு மொபைல், வருடத்துக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என வளமாகவே இருந்திருக்கிறான். தஷ்வந்தின் செயல்பாடுகள் காரணமாக, இதுவரை ஆறு வீடுகள் மாறியிருக்கிறது அந்தக் குடும்பம். டென்னிஸ் பயிற்சிபெற வந்த சிறுமியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சித்தது தொடர்பான ஒரு புகார் ஏற்கெனவே இவன் மேல் இருந்திருக்கிறது.

``பாலியல் குற்றவாளிகளைப் பார்த்து அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாது. நம் வீட்டுக்குப் பக்கத்திலோ, பள்ளியிலோ, நம் வீட்டிலேயேகூட இருக்கலாம். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளில் 80 முதல் 90 சதவிகிதக் குற்றங்கள், குழந்தைகளுக்குத் தெரிஞ்சவங்க மூலமாதான் நடக்குது. நிறைய சம்பவங்களில் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களே காரணமா இருக்காங்க. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே பெருமளவு பாதிக்கப்படுறாங்க. சொன்னால் நம்ப மாட்டார்கள் என்ற எண்ணம், பயம், உறவுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சம்... என, பல காரணங்களால் குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்துவதில்லை. முதல்ல குழந்தைகளை நம்பணும். அவங்க பேசுறதை காதுகொடுத்து கேட்கணும். `உன் உடலுக்கு நீதான் பொறுப்பு. அதைத் தொட யாருக்கும் உரிமை இல்லை. உன் உடலை யாரும் தொட்டால் அது பற்றி வெளியில் பேசலாம். அதற்கு நீ காரணம் அல்ல. தவறு செய்தவர்களே காரணம்' என்ற தெளிவை குழந்தைகளிடம் உருவாக்கணும்'' என்கிறார் குழந்தைகள் உரிமை மற்றும் முன்னேற்ற மைய இணை இயக்குநர் ஸ்டெக்னா ஜென்ஸி.

2014-ம் ஆண்டில் இந்தியாவில் 8,904 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு, அது 14,913-ஆக அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றி குறிப்பிட்டுச் சொல்ல அரசுகளிடம் எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. பாலியல் வன்முறைக்கு உள்ளாகி குழந்தைகள் உயிரிழக்கும்போதுதான் இந்த விவகாரங்கள் பெரிதாகி வெளியே வருகின்றன. ஆனால், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அறிக்கைபடி, இந்தியாவில் பிறக்கும் மூன்றில் இரண்டு குழந்தைகள், உடல்ரீதியான தீங்கிழைத்தலுக்கு உள்ளாகின்றனர்.

``குழந்தைகள், குரலற்றவர்கள். அவர்களால் எதிர்ப்புக் காட்ட முடியாது என்பது ஓர் உலகளாவிய மனோபாவம். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை முதல், நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் போர் வரை எல்லாவற்றிலும் குழந்தைகள்தான் முதல் பலிகடா ஆவார்கள். இன்னொரு காரணம், வக்கிர எண்ணம். குழந்தைகளைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல் ரகம் பீடோபைல்ஸ் (pedophiels). இது ஒருவிதமான, வக்கிர மனச்சிக்கல் நிலை. இந்தப் பாதிப்பு இருப்பவர்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே குறிவைப்பார்கள். இன்னொரு வகை opportunistic abuser. இவர்களை `சைல்டு மொலெஸ்டர்' (Child molester) என்றும் அழைப்பார்கள். இவர்கள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது குழந்தைகளைப் பயன்படுத்திக்கொள்வார்கள். மூன்றாவது ரகம், Professional perpetrators. எப்போதும் குழந்தைகள் தங்களுடனேயே இருக்கும் சூழலை இவர்கள் அமைத்துக்கொள்வார்கள். இந்த மூன்று பிரிவினரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. நம்முடனே வாழ்பவர்கள்தான். அவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது. குழந்தைகளோடு பழகுவதைவைத்தே தெரிந்துகொள்ள முடியும்.

தஷ்வந்த், இரண்டாவது அல்லது மூன்றாவது வகையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். பாலுணர்வைக் கையாளத் தெரியாததன் விளைவு இது. நிச்சயமாக இது முதல் முறை அல்ல. பல முறை ஹாசினியிடம் அவன் தவறாக நடக்க முயற்சி செய்திருப்பான். 22 வயதுப் பையன் 7 வயதுப் பெண்ணை ஒரு பாலியல் பிண்டமாகப் பார்க்கிறான் என்றால், அவன் படித்த படிப்பு என்னதான் கற்றுக்கொடுத்தது? பாலியல் விழிப்புஉணர்வே இல்லாத சமூகத்தில்தான் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தகுந்த பாலியல் புரிதலை உருவாக்கியே தீர வேண்டும். அதை மறைமுகமாகவே அணுகியதன் விளைவுதான் தஷ்வந்தின் இந்தக் கோரச் செயல்'' என்கிறார் ஸ்டெக்னா ஜென்ஸி.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் 2012-ம் ஆண்டில் போக்ஸோ (Protection of Children from Sexual Offences Act -POCSO) சட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்தச் சட்டப்படி குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை அளிக்கலாம். அதிகபட்சம் ஓர் ஆண்டுக்குள் விசாரணை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் செயல்படுத்துவதும் மேம்படுத்துவதும் மாநிலங்களில் உள்ள குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் பணி. அதுமட்டும் அல்ல. கல்வி உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகளையும் இந்த ஆணையம்தான் கண்காணிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்த ஆணையத்துக்கு இப்போது தலைவரே இல்லை.

``ஒரு குற்றம் நடக்கும்போது அதுகுறித்து ஆவேசமாகப் பேசுகிற நாம், பிறகு அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நம்மைப் போலவேதான் அரசின் செயல்பாடுகளும் இருக்கின்றன. `பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்துசெய்வோம்’ என்றார்கள். இதுவரை ஓர் ஆசிரியரின் சான்றிதழ்கூட ரத்துசெய்யப்படவில்லை. வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, `இவன் ஒரு பாலியல் குற்றவாளி, உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்' எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். ஆனால் இங்கு, பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். போக்ஸோ சட்டப்படி பதிவுசெய்யப்படும் வழக்குகளில், ஐந்து சதவிகித வழக்குகளில்கூட குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை'' என்கிறார் குழந்தைகள் நல உரிமை ஆர்வலர் தேவநேயன்.

`குழந்தைகளைத் தேசத்தின் சொத்து’ என்கிறது தேசியக் கொள்கை. ஆனால், இங்குதான் மூன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஹாசினியைப் போல எவ்வளவோ குழந்தைகள் தினமும் யாரோ ஒரு காமுகனால் துன்புறுத்தப்படுகிறார்கள். சில மணி நேரப் பதைப்பதைப்புடனே அவற்றைக் கடந்து, தம் வாழ்க்கைக்குள் மூழ்கிப்போய்விடுகிறது சமூகம். எங்கோ ஒரு வீடு என்ற நிலை தாண்டி, நம் தெரு, நம் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கிறது இந்த விபரீதம். கற்றுக்கொடுக்க வேண்டியது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல; குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்துதல், அவர்களின் உரிமையை மதித்தல், பாலின பேதம் இல்லாமல் வளர்த்தல் எனப் பெரியவர்கள் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன. ஒட்டுமொத்தச் சமூகமும் இணைந்து நின்றால் மட்டுமே, இனி ஒரு ஹாசினி பலியாகாமல் காப்பாற்ற முடியும்.

பாலியல் சித்ரவதைக்கான அறிகுறிகள்

பெரும்பாலான பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட சித்ரவதைகளை வெளியே சொல்வதில்லை. சில அறிகுறிகள், நடவடிக்கை மாற்றங்கள் மூலம் அந்த நிலையைக் கண்டறியலாம். ஆனால், இந்த அறிகுறிகள் இருந்தாலே அதுதான் காரணம் எனக் கருதத் தேவையும் இல்லை.

* நடப்பதிலோ, உட்காருவதிலோ சிரமப்படுதல்.

* சிலரின் பெயரைச் சொன்னாலே மிரள்வது. மன உளைச்சலால் ஏற்படும் உடல்நலக் குறைவு, சாப்பாட்டை வெறுத்து ஒதுக்குவது.

* சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம்.

* பாலுறுப்பில் திரும்பத் திரும்ப ஏற்படும் நோய்த்தொற்று.

* படிப்பில் ஏற்படும் பாதிப்புகள், திடீரென மதிப்பெண்கள் குறைவது, ஞாபகசக்திக் குறைபாடு, விளையாட்டில் ஆர்வம் காட்டாமை, மனச்சோர்வு.

* திடீரென புதிய பொருள்கள், பணம் வைத்திருப்பது.

* வயதுக்குப் பொருத்தமற்ற பாலுறவு பற்றிய பேச்சு, நடவடிக்கை.

குழந்தைகள் மீது ஈர்ப்பு ஏன்?

- மனநல மருத்துவர் திருநாவுக்கரசு

“சமூக ஊடகங்கள், இணையதளங்களின் தாக்கம் இளம்தலைமுறையைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அவற்றைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். கையாளத் தெரியாதவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். குழந்தைகள் வன்புணர்வை பல வலைதளங்கள் கற்றுத்தருகின்றன. டீன் ஏஜைக் கடந்த இளைஞர்களை அவை அதிகம் பாதித்திருக்கின்றன. குழந்தைகளை மிரட்டி எளிதில் பணியவைத்துவிட முடியும் என்ற எண்ணம். ஆனால், அவன் உடலை எடுத்துச்சென்று எரித்ததைப் பார்க்கும்போது, அவன் அனுபவப் பின்னணியுள்ள குற்றவாளியாகவே தெரிகிறான். திட்டமிடப்பட்ட குற்றமாகவே இதைக் கருதவேண்டியிருக்கிறது. பலமுறை அவன் முயற்சி செய்திருக்க வேண்டும். அவன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.''

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகம் நடக்கும் மாநிலங்களில், கர்நாடகம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்துக்கு மூன்றாம் இடம். இங்கு 2015-ம் ஆண்டில் 125 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். பணிசெய்யும் இடத்தில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது.