சீஸ் சூப்

தேவையானவை: சீஸ் க்யூப் - 3, வெள்ளரிக்காய் - 1, வெங்காயம் - 1, குடைமிளகாய் - பாதி அளவு, பால் - ½ கப், வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை -
2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், வெள்ளரிக்காய் சேர்த்து வதக்கி, உப்புடன் இரண்டு கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்ததும் வடிகட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய நீர், பால், சோளமாவைச் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். துருவிய சீஸையும் மிளகுத்தூளையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

பலன்கள்: கலோரியும் புரதமும் நிறைந்த சூப் இது. கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி12 ஆகியவை நிறைந்துள்ளன. சருமத்தைப் பொலிவாக்கும். முதுமையான தோற்றத்தைப் போக்கும். கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும்.

ராகி வேர்க்கடலை அல்வா

தேவையானவை: கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, வெள்ளைப் பூசணி - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - சிறிதளவு முந்திரி - 5, சர்க்கரை - ¼ கிலோ, நெய் - ½ கப், பால் - ஒரு கப்.

செய்முறை: கேழ்வரகு மாவை, வாசம் வரும் வரை நன்றாக வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய பூசணித்துண்டுகளைச் சேர்த்து, வேகவிடவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் தோல் நீக்கிய வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், முந்திரித் துண்டுகளை வறுத்து அல்வாவில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்: நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனியாகச் செய்து தர, உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

சைனஸ்: நம் மூக்கைச் சுற்றிலும் ஐந்து ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இவற்றை `பாராநாசல் சைனஸ்' (Paranasal Sinuses) என்கிறோம். நமது மூக்கின் உட்புறத்தை ஈரப்பதத்துடன் வைத்திருந்து, நோய்க் கிருமிகள், தூசு போன்றவற்றை உடலின் உட்புறம் நுழையாதவாறு தடுக்கிறது. இந்த சைனஸ் பைகளில் தொற்று ஏற்படுவதை `சைனசிட்டிஸ்' (Sinusitis) என்கிறோம்.

சைனஸைத் தவிர்க்கும் உணவுகள்: சைனஸால் மூக்கில் நீர் வழிந்தால், சிக்கன் சூப் பருகலாம். மிளகு, பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கொள்ளு ரசம், கழிவுகளை அகற்றும்; கொழுப்பைக் குறைக்கும். புரோபயாட்டிக் நிறைந்தது என்பதால், தயிரைச் சாப்பிடலாம்.