134... 130... 122... என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கவுன்ட் சென்ற வாரம் முழுக்க பிரேக்கிங் நியூஸாக நிமிடத்துக்கு ஒருமுறை பூச்சாண்டி காட்டிய சூழலில், 3... 2... 1... 0 என்ற கவுன்ட் டவுண் உடன் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவிய சரித்திர நிகழ்வு, சரிவர கவனம் பெறவில்லை. ராக்கெட்டை வெற்றிகரமாக மேலே அனுப்பியதற்காகப் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடவேண்டிய நாம், உச்ச நீதிமன்றம் ஒரு குற்றவாளியைச் சிறைக்கு அனுப்பிய குஷியில் கொண்டாடிக்கொண்டிருந்தோம். ஆனால், `‘விராட் கோஹ்லிபோல நாங்களும் செஞ்சுரி அடித்துள்ளோம் விண்வெளியில்!’' என இஸ்ரோவின் இயக்குநர்களில் ஒருவரான தபன் மிஸ்ரா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். உண்மையிலேயே இஸ்ரோ செய்திருக்கும் சாதனை என்ன?

1993-ம் ஆண்டு செப்டம்பர் 23. இஸ்ரோ செயற்கைக்கோளைச் சுமந்து செல்வதற்கு என தனது முதல் பி.எஸ்.எல்.வி (போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள்) ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. முதல் முயற்சியே படுதோல்வி. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஏவப்பட்ட இன்னொரு பி.எஸ்.எல்.வி ராக்கெட், பகுதியளவில் தோல்வியடைந்தது. அந்த இரண்டு முயற்சிகள் தவிர, இதுவரை 37 முறை பி.எஸ்.எல்.வி-யால் வெற்றி பெற்றிருக்கிறது இஸ்ரோ.

2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி ஏவப்பட்ட `பி.எஸ்.எல்.வி-சி37', இஸ்ரோவின் 39-வது பி.எஸ்.எல்.வி மிஷன். அதில் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி, விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது என்பது வேறு எந்த நாடும் நிகழ்த்தியிராத உச்சபட்ச சாதனை.

அந்தப் புதன்கிழமை காலை 9:28-க்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் முதல் தளத்தில் `பி.எஸ்.எல்.வி-சி37' கிளம்பியபோது எழுந்த வெப்பத்தைவிட, விஞ்ஞானிகள் குழுமியிருந்தக் கூடத்தின் வெப்பநிலை அதிகமாகத்தான் இருந்திருக்கக்கூடும். காரணம், 104 மடங்கு டென்ஷன். 714 கிலோ எடைகொண்ட கார்ட்டோசாட்-2டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவது சி37-ன் தலையாய பணி. அதனுடன் ஐ.என்.எஸ்-1ஏ, ஐ.என்.எஸ்-1பி என்ற இரண்டு இந்திய நானோ செயற்கைக் கோள்களை இணைத்துக் கொண்டார்கள். தவிர, கூடுதலாக 600 கிலோ எடையைக் கொண்டு செல்லும் திறனும் சி37-க்கு இருந்தது.

இஸ்ரோ, ‘இங்கே சிறந்த முறையில் செயற்கைக்கோள்கள் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்’ என்று வணிகரீதியாகத் தனது வாசலைத் திறந்து அழைத்தது. சர்வதேச தனியார் நிறுவனங்களும், சொந்தமாக ராக்கெட் ஏவும் அளவுக்கு வசதியற்ற நாடுகளும் பிற தேசங்களின் ராக்கெட்டுகளில் தங்களுக்கான செயற்கைக்கோள்களைப் பொருத்தி அனுப்புவது வழக்கமே. அதற்கான குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் அந்தக் கட்டணத்தொகை குறைவு. ஆக, சர்வதேச அளவில் இஸ்ரோவுக்கான வாடிக்கையாளர்கள் ஆதரவு அதிகம் உண்டு.

இந்த 104 செயற்கைக்கோள்களில் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான், இஸ்ரேல் நாடுகளின் நானோ செயற்கைக்கோள்கள் தலா ஒன்று, அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 96 நானோ செயற்கைக்கோள்கள் என கவுன்ட் எகிறியது.

மணிக்கு 17,000 மைல்கள் வேகத்தில் செல்லும் ஒரு ராக்கெட்டிலிருந்து 104 செயற்கைக்கோள்களை ஒன்றன் பின் ஒன்றாக நிலைநிறுத்துவது என்பது அதிகபட்ச ரிஸ்க். செயற்கைக்கோள்களை வெளியேற்றும் கோணம், திசைவேகம், காலம் என எதில் தவறு நேர்ந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறிவிடும்.

`பி.எஸ்.எல்.வி-சி37' கிளம்பியதிலிருந்து 17 நிமிடம் 29-வது நொடியில் கார்ட்டோசாட்-2டி அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்து ஐ.என்.எஸ்-1ஏ, ஐ.என்.எஸ்-1பி. பிறகு, குறிப்பிட்ட இடைவெளிகளில் மீதமுள்ள 101 நானோ செயற்கைக்கோள்களும் சற்றும் பிசகின்றி வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. புவியிலிருந்து 524 கி.மீ தூரத்தில் 28 நிமிடம் 42 நொடியில் மொத்த மிஷனும் சுபம்.

`இந்த ராக்கெட் ஏவலுக்கான மொத்த பட்ஜெட் 15 மில்லியன் அமெரிக்க டாலர். அதில் பாதிச் செலவு, 101 அயல்தேசச் செயற்கைக் கோள்களுக்கான ஏவுதல் கட்டணத்தில் சரிகட்டப்பட்டுவிட்டது' என்கிறார்கள். ஹாலிவுட்டின் `கிராவிட்டி' படத்துக்கான பட்ஜெட்டைவிட, இந்தியாவில் ஒரு ராக்கெட் மூலம் சில செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் செலவு குறைவு என்பது நிஜம். பெரும்பாலும் இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன என்பதும் நம் விஞ்ஞானிகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதற்கான விஷயம். பல லட்சங்களில் விலை கொடுத்து வாங்கவேண்டிய நவீன தொழில்நுட்பங்களை, இஸ்ரோவில் தாங்களாகவே குறைந்த செலவில் தயாரித்துக்கொள்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவுடன் ஒப்பிட்டால், தொழில் நுட்பத்தில் நாசா எங்கோ இருக்கிறது. தவிர, அமெரிக்காவில் விண்வெளியில் ராக்கெட்டுகளைச் செலுத்தும் பல தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. என்றாலும் விண்வெளித் துறையில் இந்தியாவின் அறிவுவளத்தை, இந்தியர்களின் உழைப்பைக் குறைந்த செலவில் தனக்கெனப் பயன்படுத்திக் கொள்கிறது அமெரிக்கா என்ற சர்ச்சை உண்டு. அதேசமயம் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற விண்வெளித் துறை சார்ந்த அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் மலிவுவிலை விண்வெளி வணிகத்தால் தங்கள் தொழில் பாதிக்கப்படு வதாகவும் குரலெழுப்பி வருகின்றன. ஆனால், சிறிய நாடுகளுக்கு இஸ்ரோவின் விண்வெளி சேவை, தேவை என்பதும் மறுக்க முடியாதது.

சர்வதேசப் பத்திரிகைகள் பலவும் இந்தியாவின் சாதனையை உச்சி முகர்ந்துள்ளன. ‘உண்மையான விண்வெளிப் பந்தயம் ஆசியாவில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விண்வெளி வணிகச் சந்தையில் மிக முக்கியமான சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது’ எனப் பாராட்டியிருக்கிறது நியூயார்க் டைம்ஸ்.

சீனாவுக்குத்தான் சற்றே புகைச்சல்போல. ‘வாழ்த்துகள் இந்தியா. இருந்தாலும் அமெரிக்கா, சீனாவைவிட இந்தியா விண்வெளித் துறையில் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறது. பிற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு அது முழுமையான வளர்ச்சியை அடையவில்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, விண்வெளியில் ஆய்வுமையம் அமைப்பது போன்ற முயற்சிகளை இந்தியா இன்னும் ஆரம்பிக்கவில்லை’ என்று அறிக்கை விடுத்திருக்கிறது சீனா.

பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் எல்லாம் ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடியவை மட்டுமே. இஸ்ரோவும் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் பெயர் ‘அவதார்.’ இஸ்ரோவின் அவதார் வெகுவிரைவில் விண்ணில் பாயும்.

பவர் பெண்கள்!

இஸ்ரோவின் 104 செயற்கைக்கோள்கள் சாதனையில் பெண்களின் பங்கு அதிகம். இந்தச் செயல்திட்டத்துக்காக மட்டும், ஏராளமான பெண்கள் பணிபுரிந்திருக்கின்றனர். அவர்களில் தமிழ்ப் பெண்ணான ஜெஸ்ஸி ஃபுளோராவிடம் பேசினோம்.

``நான் 34 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன். இங்கு வந்து சேர்ந்த புதிதில் மொத்தமே மூன்று பெண்கள்தான் வேலைபார்த்தார்கள். ஆனால், நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோவுக்குச் சொந்தமான மகேந்திரகிரி மையத்தில் மட்டும் இப்போது 78 பெண்கள் பணிபுரிகிறார்கள்.

எங்கள் வேலைக்கு இதுதான் நேரம் என்பதெல்லாம் கிடையாது. இந்தச் செயல்திட்டத்தில், பி.எஸ்.எல்.வி 2-வது கட்டத்துக்கான மின்னணு தொடர்பான வேலைகளை, எங்கள் குழு இரவு பகலாகச் செய்தது. நான் வீட்டுக்குச் செல்வதற்கே அதிகாலை 3 மணி ஆகிவிடும். நாங்கள் வேலைபார்க்கும் பகுதிகளில் காற்று பலமாக வீசும். இத்தகைய சூழலில் வேலைபார்ப்பது சற்று கடினமே. அதையெல்லாம் மீறி ஒரு விஷயம் ஜெயிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை'' என்கிறார்.

- ஷோபனா ரூபகுமார், படம்: ரா.ராம்குமார்

இதுவரை பி.எஸ்.எல்.வி மூலம் 226 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. அதில் 179 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள்.

இஸ்ரோ விஞ்ஞானிகளும் பணியாளர்களும் மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ‘ஐ.எஸ்.டி நேரம் என்பது, எங்களுக்கு இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் அல்ல; இஸ்ரோ ஸ்டாண்டர்ட் டைம். அது எப்போதும் இரண்டு, மூன்று மாதங்கள் குறைவான கால அவகாசத்தைக் கொண்டதே’ என்பது இஸ்ரோ மக்களின் வேடிக்கையான ஸ்டேட்மென்ட்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆறு கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள், இதுவரை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. பூமியில் உள்ள வளங்களைக் கண்டறிவதற்கும் கண்காணிப்பதற்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. கார்ட்டோசாட்-2டி, ஐந்து ஆண்டுகள் செயல்படும்.

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவின் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சித் திட்டங்களுக்கு என 23 சதவிகிதம் கூடுதல் தொகையை ஒதுக்கியிருக்கிறது.