ராஜாவின் பார்வையில் ஜெயகாந்தன்

வரும் ஏப்ரல் 24... ஜெயகாந்தனுக்கு 75-வது பிறந்த நாள்.

தமிழ் இலக்கிய உலகத்தைத் தன் எழுத்து வன்மையால் அதிரவைத்த கலைஞனைக் கௌரவப்படுத்த, ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார் இளையராஜா.

‘`அப்போ எனக்கு பதினாறு வயசு. அப்பவே, எங்க அண்ணன் பாவலர் என்னை கம்யூனிஸ்ட் கட்சியின் உண்டியலில் போட்டுவிட்டார். மேடைகளில் அரசியல் பாட்டுக் கச்சேரி நடத்திட்டிருந்த காலம். அந்த மேடைகளில் புரட்சிகரமான கருத்துகளை அதிரவைக்கும் குரலில் எவருக்கும் அஞ்சாமல் முழங்கிக்கொண்டிருந்த ஜெயகாந்தனை, அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். சபைகளில் சிங்கம் போல இருப்பார். அப்போதெல்லாம், பேச்சாளரும் கச்சேரிக் கலைஞர்களும் ஒரே வீட்டில் தங்குவது போலத்தான் ஏற்பாடு செய்வார்கள். மீட்டிங் முடிந்ததும் அந்த வீட்டில் தனிக் கச்சேரி ஆரம்பிக்கும். இப்படி, போகும் இடமெல்லாம் இவருடன் ஒரே இடத்தில் தங்கி, சாப்பிட்டு, எளிமையாகப் பழகிய காலம் ஒன்று எனக்கு உண்டு. தனிமையில் அவருடன் பழகிப்பார்த்தால் புரியும்... அவர் தங்கம்!” என்று கண்ணீர்த் துளிகளைத் துடைக்கிறார் இளையராஜா.

‘`சென்னைக்கு வந்து சேர்ந்து, நானும் அண்ணன் பாஸ்கரும் பாரதிராஜாவோடு அலைந்த காலத்தில், இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனைச் சந்தித்துத் தோல்வி கண்டோம். அப்போதுதான், ‘ஜெயகாந்தனை சும்மா சந்தித்தால் என்ன?’ எனத் தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குச் சென்றோம். காபி கொடுத்து உபசரித்தார். `என்ன?' என்பதுபோல் பார்த்தார். ‘எல்லாம் உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்திருக்கோம் தோழர்’ என்று ஒரு பேச்சுக்காகச் சொன்னோம். காரணம், எங்களை அரை டிராயர் போட்ட பையன்களாகப் பார்த்தவர் அவர். திடீரென மேடையில் உரத்த குரலில் பேசுவதைப் போல ‘என்னுடைய அனுமதி இல்லாமல், என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? நீங்கள் உங்களை நம்ப வேண்டும்!’ என கர்ஜித்துவிட்டு அமைதியானார்.

எங்களுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கிவிட்டன. நாங்கள் வெளியே வந்தவுடன் விழுந்து விழுந்து சிரித்தோம். ‘என்னய்யா கம்யூனிஸ்ட் கட்சிக்காரன்... ஒப்புக்காவது அப்படியா... பரவாயில்லையேனு சொல்லியிருக்கலாம். எதிர்க்கட்சி ஆளுங்க மாதிரி தாளிச்சுட்டானே!’ என்றார் பாரதிராஜா. இருந்தாலும் ஜே.கே சொன்ன வார்த்தைகள்தான் சினிமாவில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்று எங்களை உசுப்பிக்கொண்டே இருந்தன!” என்று சிரித்த ராஜாவைப் பார்த்தார் ஜெயகாந்தன்.

‘`அப்போ இவரு சினிமாவைத் தேடி வந்தாரு... அப்புறம் இவரைத் தேடி சினிமா வந்தது!” என்று குலுங்கிச் சிரித்தார் ஜெயகாந்தன்.

``இளையராஜாவை நான் ஏன் மதிக்கிறேன்னா, சும்மா ப்பீப்பீனு ஊதி விளையாடிக்கிட்டு கேணப் பசங்களா இருந்தவங்ககிட்ட `நல்லா ஆடுங்கடா'னு இசையைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்காரு. எல்லாவற்றையும் மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பவன்தான் பொதுவுடைமைவாதி. ராஜாவின் இசையை உலகமே ரசிக்கிறது. நான் முதன்முதலில் எல்லோருடன் சேர்ந்து ரசிச்சேன். ‘இளையராஜாவை நான்தான் இசைத் துறையில் பெரிய ஆளாக்கினேன்’னு சொல்றதுக்கு யாருக்கும் யோக்கியதை கிடையாது. அது அவருக்குள்ளேயே இருக்கு. கலைஞர்களை யாரும் உருவாக்குவதில்லை. அவர்களை மக்கள் கண்டுகொள்கிறார்கள். அப்புறம் சொந்தம் கொண்டாடுகிறார்கள்!” என்று ராஜாவின் தோள் மேல் கையை வைத்து நெகிழ்ச்சியாக அழுத்தினார் ஜெயகாந்தன்.

“நட்பு வளர்வது என்பது, உள்ளத்தால் மனிதனை இனங்கண்டுகொள்வது. அதற்கு மனநிலைதான் முக்கியம். உயர்ந்த மனம் உள்ளவர்கள் உயர்ந்த பொருளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இப்படித்தான் இவரைப் பற்றி ஆவணப்படம் தயாரிக்கணும்னு விரும்பினேன்” என்று ஜே.கே-வின் முகம் நோக்கி நட்பாகச் சிரித்தார் ராஜா.

“எவ்வளவோ கதைகள் எழுதியிருக்கிறேன். காசுதான் சேரலை. ஜனங்களோட ரசனையும் வரவேற்பும்தான் என் பெரிய சொத்து. ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனாகவே வாழ்ந்தவன் நான். தலைவர் ஜீவா மீது எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை. அவரிடமே விவாதம் செய்வேன். என்னை `அடங்காப்பிடாரி'னு சொல்வார். ‘தமிழ் பேசாத, தமிழ் தெரியாத தமிழர்கள், உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் இல்லை’னு சொல்வார். ‘திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிக்கும் தமிழன் உருப்பட மாட்டான். சிறந்த தமிழனாக உன்னை உருவாக்கிக்கொள்ளாமல், நீ சிறந்த கம்யூனிஸ்ட்டாகவே முடியாது’ என்று தமிழர்களை நோக்கித்தான் சொன்னார்.

ஒரு தடவை கருணாநிதி, ‘நான் பெரியாரையும் அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால், நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாகி இருப்பேன்’னு சொன்னார். இதில் என்ன கூத்து தெரியுமா... நான் பெரியாரையும் அண்ணாவையும் பார்த்ததால்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். அவரவர் பார்வையில்தான் மதிப்பீடு எல்லாம்!” என்று சொல்லிவிட்டு, மடக்கி வைத்திருந்த காலைச் சற்றுத் தளர்த்திவிட்டு, பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடிக்கிறார்.

ஜெயகாந்தனின் உடல்நிலை பற்றி விசாரிக்கிறார் இளையராஜா. கை விரல்களை மடக்கி நீட்டிக் காண்பிக்கும் ஜெயகாந்தன், “டாக்டர் கேட்டுக்கிட்டதால் சில பழக்கங்களை விட்டுட்டேன். நான் நல்லவனா, கெட்டவனா? கெட்டவன் என்றால், இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த சலுகைதான் காரணம். நல்லவன் என்றாலும் இந்தச் சமூகம்தான் காரணம். சமூகம் கொடுப்பது என்ன? நான் இந்தச் சமூகத்துக்கு என்ன திருப்பிக் கொடுக்கப்போகிறேன்? என்னை இந்தச் சமூகம் எப்படிக் கெடுத்ததோ, அப்படியே நான் இந்தச் சமூகத்தைக் கெடுப்பதாக உத்தேசம்!” என்று குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்.

“இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை என்று என்னிடம் யாராவது கேட்டால், இன்னும் நான் எழுதிக்கொண்டிருந்தால், இதற்கு முன்னர் நான் சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம்' என்பேன்” என்ற ஜே.கே-வை இடைமறித்த ராஜா, ‘`உங்க விஷயம் அப்படி... நான் இன்னும் சாதிக்கவே இல்லை. இனிமேல்தான் இசையில் புதிய விஷயங்களைச் செய்யவேண்டும்!” என்று பணிவுகாட்ட, “உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறாங்க. நான் எழுத ஆரம்பிச்சா, வீடு புகுந்து அடிப்பாங்க. யாரையும் திருத்த வேண்டும்னு நான் எழுதலை. அதுவா மாறும், அதுவா திருந்தும்கிற ஆவல் உண்டு. அதை எல்லாம் முன்கூட்டிச் சொல்ல வேண்டும் என்றுதான் எழுதினேன்.

பொதுவா, அந்த மாற்றங்கள் பெண்கள் மத்தியில்தான் நிகழும் என்று நினைத்தேன். ஆனால், அது இவ்வளவு விபரீதமாக மாறும் என்று நினைக்கவில்லை” என்ற ஜெயகாந்தன், சில விநாடிகளுக்குப் பிறகு அமைதியைக் கிழிக்கிறார்.

“ `ஏம்மா மாராப்பு போடலை?’ன்னு கேட்டுப் பாருங்க. ‘எதுக்குத் தொடையைக் காட்டுறே?’ன்னு கேட்டுப் பாருங்க. ‘என் தொடை... நான் காட்டுறேன்’னு பதில் வரும்.

`ஏழ்மையின் காரணமாக, வீடு இல்லாத ஒரு குடும்பம் பனகல் பார்க் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்தி, வெட்டவெளியில் ஆசையில் கூடி, எதிர்காலச் சந்ததிக்கு அவள் வயிற்றில் விதை போட்டான்'னு முன்ன ஒரு சமயம் எழுதியிருந்தேன். இப்போ என்ன நடக்குது... எல்லா வசதியும் இருக்கிறவன் அதையே வீதியில் காருக்குள்ள பண்றான். நான் நினைத்த மாற்றம் இதுவா?” என்கிறார் வருத்தம் சொட்டும் குரலில்.

- பொன்ஸீ, படங்கள்: கே.ராஜசேகரன் 23.4.2008 தேதியிட்ட இதழிலிருந்து...

‘‘தன் வாழ்நாள் முழுவதையும் எழுத்தாலும் பேச்சாலும் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்குத் தொடர்ந்து ஜே.கே ஆற்றிவரும் மேம்பாடான விஷயங்களை ஒரு தீற்றல்போலக் காட்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அவருடைய பேச்சைக் கேட்காமல் விட்டுவிட்டோமே... எழுத்தை இன்னும் படிக்காமல் இருக்கிறோமே என்று ஓர் ஏக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆவணப்படத்தின் நோக்கம்!’’ என்கிறார் இதன் இயக்குநர் ரவிசுப்ரமணியன்.