பொதுவாக, அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுவதுதான் கடந்தகால அ.தி.மு.க அரசின் இயல்பாக இருந்தது. இப்போதோ, முதலமைச்சர்கள் அடுத்தடுத்து மாற்றப்படுகிறார்கள். தேர்தல் முடிந்து ஒரு வருடம்கூட முழுமையடையவில்லை. ஜெயலலிதா மரணமடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆகி, சசிகலா முதலமைச்சர் ஆக முயற்சித்து, இப்போது பல களேபரங்களுக்குப் பிறகு, எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆக, ஓர் ஆண்டில் மூன்று முதலமைச்சர்கள். எஞ்சியிருக்கும் நான்கு வருடங்களை நினைத்தாலே மனம் பீதிக்குள்ளாகிறது.

பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் என்பது தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை விதி. அதன் அடிப்படையில் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது `சட்டப்படி' சரி. ஆனால், தார்மிகப்படி..? தேர்ந்தெடுக்கப்படும்போதே மக்களால் இவ்வளவு வெறுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் என்பது இதற்கு முன் இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லை.

`சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி செய்ததாக பரப்பன அக்ரஹாரச் சிறையில் அடைக்கப்பட்ட

சசிகலாவின் பினாமி ஆட்சிதான் இனி நடக்கப்போகிறது' என்ற எண்ணமே மக்களின் இந்த வெறுப்புக்குக் காரணம். `அந்த எண்ணம் தவறு. இந்த ஆட்சி சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும்தான் நடைபெறும்' என்ற நம்பிக்கையை எடப்பாடி கே.பழனிசாமி அளிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில், இந்த ஆட்சி அமைவதற்கான அடிப்படையே ஜனநாயக மீறலாகவே அமைந்திருக்கிறது. கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டு `கவனிக்கப்பட்டதும்' அதிலும் சில எம்.எல்.ஏ-க்கள் அங்கிருந்து `தப்பி வந்ததும்' மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் `பாதுகாப்பாக' வாகனங்களில் அழைத்துவரப்பட்டு வாக்களித்ததும் சமகால ஜனநாயகக் களங்கம். ஆட்சியைத் தக்கவைப்பதற்கே இத்தனை அராஜகங்கள் என்றால், எதிர்கால எடப்பாடி ஆட்சி எப்படி இருக்கும்?

இன்னொருபுறம் எதிர்க்கட்சியான தி.மு.க-வோ சட்டமன்றத்தில் நடத்திய அமளிகளால் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்து சட்டமன்றத்திலும் வெளியிலும் அமைதி அரசியலை மேற்கொண்டு கண்ணியத்தைக் கடைப்பிடித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகரைப் பிடித்துத் தள்ளிவிட்டு, மாட்சிமை நிறைந்த அவரது நாற்காலியில் ஒருவர் மாற்றி ஒருவர் உட்கார்ந்து விளையாடிய காட்சி எல்லாம் பயங்கரம்.

இப்போது, சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் மட்டுமே சிறையில் இருந்தாலும், இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி, மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாதான். ஆனால், இதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமலே அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும் மாறி மாறி ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்கின்றனர்; சவால்விடுகின்றனர்; கண்ணீர்விடுகின்றனர்; கண்களை மூடித் தியானிக்கின்றனர். `அம்மா ஆட்சி தொடர வேண்டும்' என்பதுதான் இரு அணியினரின் கூற்றாகவும் இருக்கிறது. `குடும்ப அரசியலை எதிர்ப்போம்' எனச் சொல்லிக்கொண்டே ஓ.பன்னீர்செல்வம், இதுவரை அரசியலில் ஈடுபடாத மக்கள் பிரச்னைகள் என்றால் என்ன என்றே தெரியாத ஜெ.தீபாவை முன்னிறுத்துகிறார்.

இப்படி நம்மைச் சுற்றி சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் நடந்தாலும், தீமையிலும் ஒரு நன்மை நடந்துவிடாதா... வறட்சி, விவசாயிகளின் தற்கொலை, `நீட்' நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு, மணல் கொள்ளை, தாதுமணல் சூறையாடல் போன்ற தமிழ்நாட்டின் ஆதாரப் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடாதா என மக்கள் ஏங்குகிறார்கள். தற்காலிக அரசியலுக்காக 500 டாஸ்மாக் கடைகளை மூடியதுபோல, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக ஓர் அற்புதம் நிகழ்ந்துவிடாதா?