Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

கம்பு குழிப் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு (மூன்றும் கலந்த கலவை) - 1 கப், உளுத்தம் பருப்பு - ¼ கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, தேங்காய்த் துருவல் - ¼ கப்.

தாளிக்க: கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கம்பு, உளுந்துக் கலவையுடன் வெந்தயம் சேர்த்து, ஐந்து மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். தாளிக்கவேண்டிய பொருள்களைத் தாளித்து, மாவில் கலக்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். குழிப் பணியாரச் சட்டியில் ஊற்றி, எண்ணெய்விட்டு இரண்டு முறை திருப்பிப் போட்டு, முறுகலானதும் எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது பொடியுடன் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

பலன்கள்: இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சுவையான நொறுக்குத்தீனி என்பதால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும்.

உணவு நல்லது வேண்டும்!

முலாம்-தர்பூசணி ஜூஸ்:

தேவையானவை: தோல் சீவி விதை நீக்கப்பட்ட தர்பூசணி, முலாம்பழத் துண்டுகள் - 1 கப், ஐஸ்கட்டிகள், தேன் - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணி, முலாம்பழம், தேன் மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, ஐஸ்கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்:
உடலுக்குக் குளுமையைத் தரும். மலச்சிக்கல் நீங்க, செரிமான மண்டலம் சீராகச் செயல்பட, உடலின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவும். பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, ஈ, கே, ஃபோலிக் அமிலம், ஃபோலேட், பீட்டாகரோட்டின் உள்ளன.

உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், வறண்ட சருமத்தைப் பொலிவாக்கவும், நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கவும் இந்த ஜூஸை அருந்தலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருப்பதால், வளர்சிதை மாற்றம் சீராக நடக்க உதவும். ரத்த அழுத்தம் சீராகவும், மன அழுத்தம் நீங்கவும், இதய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த ஜூஸை அடிக்கடி அருந்தலாம்.

உணவு நல்லது வேண்டும்!

ரத்தச்சோகை

 நம்முடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற சிவப்பு அணுக்கள் உள்ளன. இவைதான், உடல் முழுவதும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்கின்றன. இந்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும்போது ரத்தச்சோகை ஏற்படும். நம்முடைய உடலால் போதுமான அளவு ரத்தச்சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை, ரத்தம் வெளியேறுதல், குடல் புழுக்கள் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் போன்றவை ரத்தச்சோகை ஏற்படக் காரணம்.

உணவுகள்: பேரீச்சம்பழம், மாதுளம்பழம், உலர் அத்தி, வேர்க்கடலை உருண்டை, முட்டை, கீரைகள், பிரவுன் அரிசி, உலர்திராட்சை போன்றவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், போன்றவற்றை, வாரத்துக்கு மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். வாரத்துக்கு இரண்டு முறை மீன், கோதுமைப் புல் சாறு, அருகம்புல் சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும், வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ப, உணவின் அளவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.