Published:Updated:

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''
பிரீமியம் ஸ்டோரி
News
“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

நா.சிபிச்சக்கரவர்த்தி

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

``புகைப்படத் துறையில் நான் பல வருஷங்களா இருக்கேன். பிரபலங்களை வெச்சு காலண்டர்ஷூட்,

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

விளம்பரப் படங்கள், புகைப்பட ஆல்பங்கள்னு ஏகப்பட்ட விஷயங்கள் பண்ணிட்டேன். இதெல்லாமே என்னோட வழக்கமான வேலைகள்தான். இதுலேருந்து முழுக்கவே மாறி, புது விஷயம் ஒண்ணு பண்ணணும்னு தோணுச்சு. இந்த ஷூட்ல, எனது வழக்கமான ஸ்டைலை மாத்தி எடுக்கணும்கிற முடிவுல இருந்தேன். அப்படி நான் ரசிச்சு எடுத்ததுதான் இந்த ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி'' என ஆர்வமாகப் பேசுகிறார் புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன். புகைப்படங்கள் வழியாகப் பேசும் ரசனைக் கலைஞன்.

``ஒரு விளம்பரப் படப்பிடிப்புக்காக ஜெர்மனி போயிருந்தேன். அந்த வேலையை முடிச்சதும், ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி எடுக்கிறதுக் காகவே ஜெர்மனியிலிருந்து நெதர்லாந்துல இருக்கும் ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்குப் போனேன். அங்கே இருந்த அஞ்சு நாளும் தெருக்கள்ல இறங்கி விதவிதமா புகைப்படங்கள் எடுத்தேன். ஸ்ட்ரீட் போட்டோகிராஃபியோட அழகே ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு சம்பவமும் அந்தந்த நொடிக்கே உரியதா இருக்கும். உன்னிப்பா கவனிச்சா ஒவ்வொண்ணுமே ஒரு கதை சொல்லும். அதுல ஒரு அழகிய கவிதை இருக்கும். அதை எல்லாத்தையும் அப்படியே என் கேமராவுக்குள் பிடிச்சு, படங்களாக எடுத்து வந்துட்டேன். அதோட சின்னத் தொகுப்புதான் இந்தப் படங்கள்...

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

இதுல இருக்கும் சில போட்டோக்களை என்னால் மறக்கவே முடியாது. துறுதுறுனு இருக்கும் பசங்கள்ல தொடங்கி, வயசானவங்க வரைக்கும் எல்லாவிதமான மனிதர்களையும் க்ளிக் பண்ணினேன். காதலர்களின் ஒரு பார்வையிலேயே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். ஒரு பொண்ணு, ஒரு நாய்க்குட்டியின் மூக்கோடு தன் மூக்கை வெச்சு உரசிக் கொஞ்சும். இதுல சந்தோஷம் நிறைஞ்சிருக்கும். வயசான ஒரு தம்பதி, விடுதியில் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதுவே பல கதைகள் சொல்லும். இப்படி மனித உணர்வுகளைத்தான் இந்தப் புகைப்படங்கள்ல கொண்டு வந்திருக்கேன்.''

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

``தமிழின் செலிப்ரிட்டி புகைப்படக் கலைஞர்கள்ல நீங்க முதல் வரிசையில் இருக்கீங்க. பிரபலங்களுடனான உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்க?''

 ``இளையராஜா சாரைப் படம்பிடிச்சது எப்பவுமே மறக்க முடியாத அனுபவம். வழக்கமான ஸ்டைல்ல இல்லாம வித்தியாசமா இருக்கணும்னு அவருக்கு கோட் ஷூட் கொடுத்தோம். முதல்ல `இது எனக்குப் பொருந்துமா?'னு தயங்கினவர், படங்கள் பிரமாதமாக வந்ததும் உற்சாகமாகிட்டார். ராஜா சாருக்கும் புகைப்படக் கலை மேல ஆர்வம் நிறைய இருக்கு. `இது என்ன கேமரா... என்ன லென்ஸ்?'னு எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுப்பார். இளையராஜா சார்னாலே ரொம்ப சீரியஸா இருப்பார்னு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, அவர் செம ஜாலியான மனிதர். எதைப் பண்ணாலும் முழு ஈடுபாட்டோட பண்ணுவார். அன்பான மனிதர். அவ்வளவு அர்ப்பணிப்போட இருப்பார்.

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

சமீபத்தில் ஜோதிகாவை வெச்சு போட்டோஷூட் பண்ணேன். அவர் எந்த உடை, என்ன பொருள் பயன்படுத்தினாலும் அது பொண்ணுங்க மத்தியில் புது ஃபேஷனாகிடும். அதனால், உடை விஷயத்துல ரொம்பக் கவனமாக இருப்பாங்க. வித்தியாசமான அதே சமயம் பார்த்தவுடனே ஒரு ரிச் லுக் தரக்கூடிய காஸ்ட்யூம், கையில் குட்டியா ஒரு ஹேண்ட்பேக் கொடுத்து இப்போதைய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி ஷூட் பண்ணோம். அந்தப் படங்களுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். ஜோதிகாவுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.

“இளையராஜா சார் செம ஜாலி மனிதர்!''

அனிருத், மம்மூட்டி ரெண்டு பேருக்கும் கோட் கொடுத்து கேஷுவலா எடுத்த புகைப்படங்கள் எல்லாமே செம பிரமாண்டம். இப்படிப் பல பிரபலங்களைப் படம் எடுத்த அனுபவங்கள் எல்லாமே எப்போதுமே வாழ்வில் மறக்க முடியாதவை!''

``புகைப்படக் கலையே போதும்னு நினைச்சுட்டீங்களா... சினிமா ஒளிப்பதிவுக்கான வாய்ப்பு உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கே?''

``ஒளிப்பதிவாளர் ஆகணும்கிற கனவுதான் எனக்கு ஆரம்பத்துல இருந்தது. புகைப்படக் கலையில் இறங்கினதுக்கு அப்புறம்தான், இதுவே எவ்வளவு பெரிய கடல்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, சொல்ல முடியாது... என்னிக்காவது மனசுக்குள்ள ஸ்பார்க் வந்தா, அன்னிக்கே ஒளிப்பதிவுல இறங்கினாலும் இறங்கிடுவேன்.''