எளிய மனிதர்களின் நெஞ்சில்தான் நேர்மை குடியிருக்கிறது என்பதற்கு உதாரணமாக வந்தார்கள் அவர்கள்!

கடந்த வாரம், ஒரு காலை நேரம். கணவனும் மனைவியும் கூடவே ஒரு பத்து வயது மகனுமாக, விகடன் அலுவலகத்துக்கு வந்தார்கள். கணவரின் கையில் ஒரு பச்சை நிறப் பை, அதில் சில பேப்பர்கள். அவரது மனைவியின் பிடியில் இருந்த மகன் மிரள மிரள விழித்தபடி இருந்தான்.

``என்ன பிரச்னை... ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?’’ என்று பேசினால், அவர்கள் எழுப்பிய கோரிக்கை நம்மைச் சிலிர்க்கவைத்தது!

``ஐயா... இந்த ஒரு லட்ச ரூபாயை அரசாங்கத்துக்கிட்டே சேர்க்கணும். அதுக்கு உங்க உதவி வேணும்!’’

``என்ன பணம் இது... எதுக்காக இதை அரசிடம் ஒப்படைக்கணும்?’’

``ஐயா... சுனாமி வந்தப்போ கடல் தண்ணி எங்க புள்ளையை இழுத்துட்டுப் போயிருச்சு. பிள்ளையைப் பறிகுடுத்துட்டு நின்ன எங்களுக்கு கவர்மென்ட் கொடுத்த நிவாரணப் பணம் இது. செத்துப் போயிட்டான்னு நினைச்ச எங்க புள்ளை, இப்போ திரும்பக் கிடைச்சுட்டான். அதனால, அரசாங்கம் குடுத்த பணத்தைத் திருப்பிக் குடுக்கணும். அதுக்கான வழிமுறைகள் எங்களுக்குத் தெரியலைங்க. அதான், உங்க உதவி கேட்டு வந்திருக்கோம்’’ என அவர்கள் சொல்லச் சொல்ல வியப்பின் உச்சிக்குப் போனோம்.

வறுமைக்கோட்டில் இருக்கும் குடும்பம். தவிரவும், சுனாமியில் தங்கள் வீடு, சொத்து, சொந்தபந்தம்... என எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள். ஆனாலும், அவர்களின் இதயம் அத்தனை சுத்தம்.

குடும்பத் தலைவர் ஜெயக்குமார் சொல்ல ஆரம்பித்தார்...

``சீர்காழிக்குப் பக்கத்துல இருக்கிற தொடுவாய்தான் எங்க சொந்த ஊர். கடற்கரையோரமா வீடு கட்டி, கடல்ல மீன் பிடிச்சு வித்து, அதுல வர்ற வருமானத்துலதான் வாழ்ந்துட்டிருந்தோம்.

சுனாமி வந்த அன்னிக்குக் காலையில இவன்... எங்க மூத்த பையன் உதயகுமார், வீட்டுக்கு முன்னால கிடந்த படகுல விளையாடிட்டிருந்தான். நான் வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தேன்.

என் மனைவி ராஜவள்ளி உள்ளே சமைச்சிட்டு இருந்தா. குபீர்னு தூரத்துல கடல் பொங்கி வர்றதைப் பார்த்தேன். கண் மூடிக் கண் திறக்கிறதுக்குள்ள கடல் தண்ணி பனை மர உயரத்துக்குப் பாய்ஞ்சு வந்து எங்க வீட்டையே பேர்த்துத் தரைமட்டமாக்கிட்டுப் போயிருச்சு. கடல் தண்ணி ராஜவள்ளியை இழுத்துட்டுப்போய் ஊருக்கு வெளியே கொண்டுபோட்டுடுச்சு. நான் என் மகனைக் காப்பாத்துறதுக்காக ஓடிப் போனவன், அப்படியே படகோடு சேர்த்து என்னையும் கடல் இழுத்துட்டுப்போச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் கரையில வந்து எறிஞ்சது. சுதாரிச்சுப் பார்த்தப்போ, உதயகுமாரைக் காணலே... அய்யோனு அலறினேன். ஊர்க்காரங்களோட சேர்ந்து காணாமப்போன எம் புள்ளையத் தேடினேன். கிடைக்கலை. என் இரண்டாவது மகன் அப்போ ஊருக்கு வெளியே இருந்ததால், எந்த ஆபத்தும் இல்லாம தப்பிச்சான். மத்தபடி தரங்கம்பாடியில இருக்கிற என்னோட அம்மா, அண்ணன் குழந்தைங்கனு எல்லோரும் கடலுக்குள்ள போயிட்டாங்க.

அப்புறம் அதிகாரிங்க வந்தாங்க. அரசியல்வாதிங்க வந்தாங்க. ஆறுதல் சொன்னாங்க. ஊர்ல இறந்துபோனவங்க பட்டியலில் எம் புள்ளை பேரையும் சேர்த்தாங்க. ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு குடுக்கிறதா அரசாங்கம் சொல்லுச்சு. புள்ளையே போனதுக்கு அப்புறம் அந்தப் பணத்தை வாங்கணுமானு அழுகையா வந்தது எனக்கு. `சரிப்பா... உன் பிள்ளைதானே போயிட்டான். மிச்சம் இருக்கிற உன் குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காவது அரசாங்கம் தர்ற உதவித் தொகையை வாங்கிக்கோ'னு ஊர்க்காரங்க சமாதானம் பண்ணினாங்க.

எங்க ஊர்ல என் பையனையும் சேர்த்து மொத்தம் பதினாலு பேர் சுனாமிக்குப் பலியாயிட்டாங்கனு பதிவுபண்ணாங்க. அரசாங்கமும் எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை நிவாரண நிதியா பேங்க்ல போட்டு, செக் புத்தகத்தைக் கையில குடுத்தாங்க. அந்தப் புத்தகத்தைப் பார்க்கறப்ப எல்லாம் எங்க பையன் நினைப்புதான் வரும். அதுலேர்ந்து பணத்தை எடுக்கவே தோணாது எனக்கு. ராவும் பகலுமா பையன் நினைவாவே அழுதுட்டிருந்தோம்.

யார் யாரோ வந்து எங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டுப்போனாங்க. எங்க குடும்ப நண்பர் கேசவன் மட்டும், `உன் பையனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காதுய்யா. உன் முன்னாடி ஜம்முனு வந்து நிக்கப்போறான் பார்த்துட்டே இரு'னு அடிக்கடி சொல்வார். எங்களுக்குத் தைரியம் சொல்றதுக்காகச் சொன்னாரோ என்னவோ... அவர் வாக்கு அருள்வாக்கு மாதிரி பலிச்சிருச்சுங்க. கடைசியில அவர்தான் எங்க புள்ளையைக் கண்டுபிடிச்சு எங்ககிட்ட ஒப்படைச்சார்’’ என்று குரல் தழுதழுத்த ஜெயக்குமார், அருகில் இருந்த உதயகுமாரைக் கட்டி அணைத்தபடி அழத் தொடங்க, ராஜவள்ளி தொடர்ந்தார்...

``சீர்காழியில இருக்கிற கேசவன் அண்ணன் 5-ம் தேதி சனிக்கிழமை அன்னிக்கு, `உங்க பையன் உசுரோட இருக்கான். வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்டுக்கு வாங்க'னு தகவல் அனுப்பினார். எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிட்டே பஸ் பிடிச்சு வேளாங்கண்ணி ஓடினோம். எங்க புள்ளை எதையோ பறிகொடுத்தவன் மாதிரி வெறிச்சு நின்னுட்டிருந்தான். `என் சாமீனு ஓடிப் போய் அவனைக் கட்டிக்கிட்டு அழுதேன். அவன் என்னை உதறிட்டு ஓடினான். துரத்திப் பிடிச்சா, மிரள மிரளப் பார்த்தான். அவன் உடம்பெல்லாம் நடுங்குது. திடீர் திடீர்னு கத்தினான். அவனைச் சமாதானப்படுத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. ரொம்ப நேரத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் சமாதானமானான். அப்புறம் அவனை அழைச்சுட்டு எங்க ஊருக்கு வந்தோம்.

இந்தப் புள்ளை செத்துப்போச்சுனு சொல்லித்தானே அரசாங்கம் எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் குடுத்தாங்க. இப்ப பையன் உசுரோட கிடைச்சுட்டானே, இனிமே அந்தப் பணம் எதுக்கு? அதனால, அந்தப் பணத்தைத் திரும்பக் குடுத்துரலாம்னு முடிவுசெஞ்சோம். விஷயம் கேள்விப்பட்டு ஊர் சனங்க திட்டினாங்க. `உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? வீடு, வாசல்னு எல்லாத்தையும் இழந்திருக்கீங்க. அப்புறம் ஏன் வந்த பணத்தை கவர்மென்ட்டுக்குத் திரும்பக் கொடுக்கிறீங்க? பேசாம நீங்களே வெச்சுக்கோங்க. அரசாங்கம் உங்களை ஒண்ணும் சொல்லாது'னு சொன்னாங்க.

ஆனாலும் மனசு கேட்கலீங்க. ஊருக்குத் தெரியாமல் கிளம்பி நாகப்பட்டினம் கலெக்டர் ஆபீஸுக்குப் போனோம். விஷயத்தைச் சொல்லிப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கிறதா சொன்னோம். அப்ப கலெக்டர் இல்லை. அவருக்குக் கீழ இருந்தவங்க. `பணத்தை வெச்சுக்கோங்க. யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க'னு சொல்லி, எங்களைத் திருப்பி அனுப்பிட்டாங்க. மேற்கொண்டு என்ன பண்றதுன்னு தெரியலை. கேசவன் அண்ணன்கிட்டே விஷயத்தைச் சொன்னோம். அவர்தான் விகடன் ஆபீஸுக்குப் போவோம்னு உங்ககிட்ட கூட்டிட்டு வந்தார். இந்தப் பணத்தை எப்படியாவது கவர்மென்ட்டுக்கிட்ட திருப்பிக் குடுத்துடணுங்கய்யா’’ என்றார் ராஜவள்ளி.

மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிற உதயகுமாரிடம், ``அன்னிக்கு என்னப்பா நடந்தது?' என்று

கேட்டோம். தட்டுத் தடுமாறிப் பேசினான்... ``பெரிய அலை வந்துச்சா... என்னைத் தென்னை மரத்து மேல கொண்டுபோய் விட்டுடுச்சு. அங்கேயே கெடந்தேன். அப்புறம், தண்ணியெல்லாம் கடலுக்குப் போனப்புறம் மெதுவா கீழே இறங்கி வந்தேன். என் வீட்டைக் காணோம். யாரையுமே காணோம். அழுதுட்டே நின்னுட்டிருந்தேன். ஒரு பஸ் வந்துச்சு.அதுல ஏறினேன். பஸ் வேளாங்கண்ணிக்குப் போச்சு. அங்கே தேவிங்கிற ஒரு அக்கா எனக்குச் சோறு போட்டாங்க. அந்த அக்கா வேளாங்கண்ணி கோயில்ல வேலை பார்க்கிறாங்க. என் ஊரு எதுனு கேட்டாங்க. எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை. என்னை அவங்ககூடவே வெச்சுக்கிட்டாங்க...’’ என்று சொல்லும்போதே உதயகுமாரின் உடம்பு அவ்வப்போது திடுக் திடுக் என்று தூக்கி வாரிப்போட்டது.

உதயகுமாரை உடனடியாக பிரபல மனநல மருத்துவர் அசோகனிடம் அழைத்து சென்றோம். சிறுவனைப் பரிசோதித்த டாக்டர், ``சுனாமி அதிர்ச்சியிலிருந்து இந்தப் பையன் இன்னும் மீளவில்லை. இவனுக்கு இப்போதைய தேவை நிம்மதியான ஓய்வும் அமைதியான சூழ்நிலையும்தான்’’ என்று தேவையான மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார். நடந்த பயங்கரத்தின் பாதிப்பிலிருந்து உதயகுமார் மீளும் வரை அவனை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவனது பெற்றோரிடம் விளக்கிச் சொன்னார் டாக்டர்.

சீர்காழி தாசில்தார் மூலமாக உதயகுமார் குடும்பத்துக்குத் தமிழக அரசு வழங்கிய நிவாரணத் தொகை ஒரு லட்ச ரூபாயை நாகப்பட்டினம் ஆட்சியர் ராதாகிருஷ்ணன் மூலமாக மீண்டும் அரசிடமே சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இறந்துபோனதாக நினைத்த மகன் திரும்பக் கிடைத்ததுபோல, இவர்கள் இழந்த அந்தப் பழைய சந்தோஷமான வாழ்க்கையும் திரும்பக் கிடைக்கட்டும்... கிடைக்கும்!

- எஸ்.சரவணகுமார், கரு.முத்து.

படங்கள்: கே.ராஜசேகரன், டி.கலைச்செல்வன், பொன்.காசிராஜன்.

20-3-05, 3-4-2005 தேதிகளிட்ட இதழ்களிலிருந்து

இது நேர்மைக்குக் கிடைத்த பரிசு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ராதா கிருஷ்ணனைச் சந்திக்க, அந்தக் குடும்பத்தை அழைத்துச் சென்றிருந்தோம். `உதயகுமார் குடும்பத்தினரின் நேர்மையையும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிய விகடனையும் பாராட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரு வாழ்த்துச் செய்தியை உதயகுமார் குடும்பத்தாருக்கு வழங்கினார் ராதாகிருஷ்ணன்.

உதயகுமாரை அணைத்துக்கொண்டு, ``நீ நாகப்பட்டினம் வந்தா என் வீட்டுக்கு வா’’ என்றார். உதயகுமாரின் தாய் ராஜவள்ளி உணர்ச்சிவசப்பட்டவராக கையெடுத்துக் கும்பிட...

ராதாகிருஷ்ணன், ``இந்தப் பணத்தை நீங்க திருப்பிக்கொடுத்துட்டாலும், உங்ககிட்ட இருக்கற நேர்மை, இது மாதிரி பத்து மடங்கு பணத்தைச் சம்பாதிச்சுக் கொடுக்கும்’’ என்று வாழ்த்தினார். அவர் சொன்னது நடந்தது.

இவ்வளவு பெரிய துக்கத்திலும் தனது மகன் கிடைத்துவிட்டான் என்று அரசாங்கப் பணத்தை திருப்பிக்கொடுக்க முன்வந்த உதயகுமார் குடும்பத்தாரின் நல்ல மனதைப் பாராட்டி, `உதயகுமாருக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்' என்று பாசமழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள் விகடன் வாசகர்கள். வெளிநாடுகளிலிருந்து உதவிக் கரங்கள் நீளத் தொடங்கிவிட்ட நிலையில் உதயகுமாரின் கிராமமான தொடுவாய் சென்றோம்.

சுனாமி அதிர்ச்சியிலிருந்து தொடுவாய் இன்னும் முழுமையாக மீளவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் மணல் மேடுகள். அங்கே அரசு ஒதுக்கிக்கொடுத்துள்ள தற்காலிகக் குடிசையில்தான் மக்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

அரசு கொடுத்த அரிசி, மளிகைச் சாமான்களை வைத்து கடலை வெறித்துப் பார்த்தபடியே நாட்களை நகர்த்தி வருகிறார்கள். உதயகுமார் குடும்பத்தின் நேர்மைக்குப் பரிசாக வந்து குவியத் தொடங்கியிருக்கும் பணம் பற்றி ஊர்க்காரர்களிடமும் உதயகுமாரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்தோம்.

``ஐயா சாமி... என் மகன் எனக்கு உசுரோட திரும்பக் கிடைச்சதே நான் பண்ணின புண்ணியம்யா! இதோ இந்த இடத்துலதான் கடலோரமா எங்க உதயகுமார் விளையாடிட்டிருந்தான். திடீர்னு பனை மர உசரத்துக்கு அலை வந்து அதுல எங்க குடும்பமே சிதறிப்போச்சு. அப்புறம் எங்க குடும்பத்துல உள்ள ஒவ்வொருத்தரா பொழச்சு, ஒண்ணா சேர்ந்தோம். கடலம்மாதான் எங்களை மார்ல போட்டு வளர்க்கிற தாயி.

சுனாமி வந்தப்ப வீட்டுல இருந்த ஒன்பதாயிரம் ரூபாயும், எட்டு பவுன் நகையும் கடலோட போயிருச்சு. அதுக்காக நாங்க வருத்தப்படவேயில்ல. ஏன்னா... கடலம்மா கொடுத்ததை அவளே எடுத்துக்கிட்டானு இருந்துட்டோம். ஆனா, உதயகுமார் காணாமப்போனதும் மனசு உடைஞ்சுபோச்சுங்க. மறுபடியும் அவனைக் கண்ணால பார்த்ததும்தான் எங்களுக்கு உசுரே வந்தது. கும்புட்ட சாமி எங்களைக் கைவிடலை.

மகன் திரும்பக் கிடைச்சதும், உடனே கலெக்டரய்யா கொண்டுவந்து கொடுத்துட்டுப் போன பணம் நினைவுக்கு வந்தது. மகனையும் வெச்சுக்கிட்டு அந்தப் பணத்தையும் வெச்சுக்கிட்டு நாங்க பட்டபாடு இருக்கே. மனசால ரொம்பத் தவிச்சுப்போய்ட்டோம். இப்ப உங்க மூலமா பணத்தை கலெக்டரய்யாகிட்ட கொடுத்த பிறகுதான் தூக்கமே வந்தது’’ - நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் உதயகுமாரின் தந்தை ஜெயக்குமார்.

அருகிலேயே இருந்த உதயகுமாரின் தாய் ராஜவள்ளி, ``கலெக்டர் வாக்கு இன்னிக்கு விகடன் மூலமா பலிச்சுருச்சு. எங்கயோ கடல் கடந்து வாழுறவங்க. எங்களுக்காக இம்புட்டுப் பணம் கொடுக்குறாங்கன்னா, இந்தக் கடல் மாதிரியே அந்த மனுஷங்களும் சாமிதான். எவ்வளவு அழிவு வந்தாலும் மனுஷன் மனசுல ஈரம் இருக்கிற வரைக்கும் இந்த உலகம் அழியாதுனு புரிஞ்சிக்கிட்டோம்யா, காசைவிட நீங்க தந்த நம்பிக்கை பெருசு’’ - கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீரை நன்றியாக்கினார் அந்தத் தாய்.

சுனாமி அதிர்ச்சியிலிருந்து உதயகுமார் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறார். மனநல மருத்துவர் அசோகன் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார். மெதுவாக உதயகுமாரிடம் பேச்சுக் கொடுத்தோம்...

``பெரிய படிப்பு படிச்சு பெரியாளா வரணும்னு ஆசை சார். அப்பா தனியாளா கஷ்டப்படறாரேனு கடலுக்கு மீன் பிடிக்கப் போயிட்டிருந்தேன். இனிமே நான் படிக்கப்போறேன். நான் காணாமப் போனவுடனே அப்பா - அம்மா இவ்வளவு கலங்கிப் போயிட்டாங்களே. அவங்களை உட்காரவெச்சு சோறு போடணும் சார். படிச்சு இந்த கலெக்டர் மாதிரி நானும் கலெக்டர் ஆவேன். அதுக்கு இந்தப் பணம் ரொம்ப உதவியா இருக்கும்’’ - உதயகுமாருக்குக் குரல் தழுதழுக்கிறது. அதைப் பார்த்துப் பெற்றவர்களும் கண் கலங்குகிறார்கள்.

இந்த அழுகை, துக்கம் அல்ல... சந்தோஷம்!