Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

அன்னாசி - எலுமிச்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப்பழத் துண்டுகள் - 4 (வட்டமாக வெட்டியது), சிறிய எலுமிச்சைப் பழம் - 1, நாட்டுச் சர்க்கரை,
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: அன்னாசிப்பழத் துண்டுகளுடன், நாட்டுச் சர்க்கரை கலந்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும்.  எலுமிச்சைச் சாறு கலந்து, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.

பலன்கள்:
வைட்டமின்-சி சத்து நிறைந்தது. இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் முதலான தாதுஉப்புகள் இதில் நிறைந்துள்ளன.

ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும்.

இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸைக் குடிக்கக் கூடாது. உடல்நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம்.

காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

உணவு நல்லது வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்

தேவையானவை:
கார்ன் - 100 கிராம், அன்னாசிப்பழம் - 100 கிராம், பூண்டு - ஒரு பல், வால்நட் - 4, துளசி இலை - 5, எலுமிச்சம் பழம் - 1, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். மிளகு, வால்நட், பூண்டு, துளசி இலை இவற்றை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாறு கலந்து, மையமாக அரைத்து, சாஸ் போல் தயாரிக்கவும். அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி சோளத்தைச் சேர்க்கவும். இதில் சாஸ் (அரைத்த விழுது) சேர்த்துக் கலக்கியோ, அல்லது அன்னாசிப்பழம், சோளத்தைச் சாஸில் முக்கியோ சாப்பிடலாம்.

பலன்கள்: அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துகள் உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்திறனை ஒழுங்குப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது மூளைச் செல்களைத் தூண்டி, உற்சாகத்தைத் தரும். இதயத் தசைகளின் செயல்திறனை மேம்படுத்தும். மிளகு, பூண்டு, துளசி என உடலுக்கு நலம்தரும் மூலிகை நிறைந்த மருத்துவ சாலட் இது.

உணவு நல்லது வேண்டும்!

புற்றுநோய்: நமது உடலில் பல்லாயிரம் கோடிச் செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் புற்றுநோய்ச் செல் வளர ஆரம்பிக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல், அலட்சியப்படுத்தும்போது புற்றுசெல்கள் பெருகி, உடலில் கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோயை நாம் தடுக்க முடியும்; தவிர்க்க முடியும். புற்றுநோயைத் தடுக்க நாம் பெரிதாகச் செலவுசெய்து, மாத்திரை மருந்துகள் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்வியல்முறை மாற்றம் மூலமாகவே பெரும்பாலான புற்றுநோய்களைத் தடுத்துவிட முடியும்.

உணவுகள்:
மஞ்சள், பூண்டு, இஞ்சி, எள், பட்டை, மிளகு, வெள்ளரி, முளைகட்டிய பயறு, முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி, கேரட், தக்காளி, வெங்காயம் - வெங்காயத்தாள், கீரைகள், காளான், சிட்ரஸ் பழங்கள், கிவிப்பழம், ஆப்பிள், சோளம், செர்ரி, மாதுளை, பேரீச்சம் பழம், பாதாம், புரோக்கோலி, கிரீன் டீ, முட்டை, மீன், ஆலிவ் எண்ணெய், அவகேடோ, டார்க் சாக்லேட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வில்வப் பழச்சாறு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism