Published:Updated:

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: பா.காளிமுத்து

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

`பொதுவாக, என் உடைக்கோ  வெளித் தோற்றத்துக்கோ நான் அதிக முக்கியத்துவம் தர மாட்டேன். ஆனால் `கபாலி' படம் பார்த்த பிறகு, `நாம் உடுத்தும் உடைக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறதா?!' என ஆச்சர்யப்பட்டேன். அப்போது முதல் என் உடைகளில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இது முன் கதை. இப்போது என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழ்நாட்டின் முன்னணி ஸ்டைலிஸ்ட் ஒருவர், என்னுடைய தோற்றத்தை மாற்ற வேண்டும். ஒரு காஸ்ட்யூம் டிசைனர், எனக்கான உடைகளை வடிவமைத்துக் கொடுக்க வேண்டும்' என்று தன் ஆசையை இமெயிலில் அனுப்பியிருந்தார், கீர்த்தனா. இவர், நாமக்கல்லில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்கிறார்.

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆடை வடிவமைப்பாளரான அனுவர்தனுக்கு, இது குறித்து வாட்ஸ்அப் தகவல் அனுப்பினோம். `தல நடிக்கும் `விவேகம்' பட வேலைகள்ல கொஞ்சம் பிஸி. இருந்தாலும், நிச்சயமாகப் பண்ணலாம்' எனக் குறிப்பிட்டு, இரண்டு தம்ஸ்அப் எமோஜிகளுடன் பதில் அனுப்பினார்.

த்ரிஷா, ஏமி ஜாக்சன், விஷால் என, தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் ஃபேவரிட் மேக்கப்மேன் ராஜுவும் இந்த `ஆசை'க்குத் தயாரானார். மேலும், `பாகுபலி' படத்தில் அனுஷ்காவின் ஹேர்ஸ்டைலிஸ்ட்டான மனோகரும், தன் ஷெட்யூலை அட்ஜஸ்ட் செய்துகொடுத்தார். இறுதியாக, அந்த நாளும் வந்தது.

வெள்ளை நிறக் கூழாங்கற்கள், அந்த மரப்பெட்டி முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து செதுக்கப்பட்ட ஒரு மரம், கிளை பரப்பி இருந்தது. அதைத் தாண்டி உள்ளே நுழைந்தால், அழகான சாம்பல் நிற சோபா... அனுவர்தனின் அலுவலகம்.

கீர்த்தனாவுக்கு, பரவசம் தலைக்கேறியது. `மேக்கப் எப்படி இருக்கும், காஸ்ட்யூம்ஸ் எனக்கு சரியா இருக்கும்ல, அனு மேடம் நல்லா பேசுவாங்கள்ல?' என ஏகப்பட்ட கேள்விகளுடன் காத்திருந்தார். முதலில், கையில் கறுப்பு நிறச் சிறு பெட்டியுடன் இரண்டு பேர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த அனுவர்தனின் உதவியாளர் பிரபு, ``இவங்கதான் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலிஸ்ட்'' என அறிமுகப்படுத்தினார்.

“சார், நீங்கதான் த்ரிஷாவுக்கு மேக்கப்னு கேள்விப்பட்டேன். உண்மையா சார்?” என்று குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் ராஜுவைப் பார்த்துக் கேட்டார் கீர்த்தனா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

“ஆமாம். த்ரிஷாவுக்கு `கில்லி' படத்துல இருந்து நான்தான் மேக்கப்மேன். இப்போ, முழுக்க முழுக்க உதயநிதி சார் படங்கள்ல பிஸியா இருக்கேன். மேக்கப்பைப் பொறுத்தவரைக்கும் முகத்தில் இருக்கும் பாகங்களைச் சின்னச் சின்னதா மாற்றம் செய்தாலே போதும். அதெல்லாம் சேர்ந்து சிறப்பான அழகைக் கொடுக்கும்” என்று ராஜு சொல்லும்போதே, ``ஹே... ஹாய்! வெல்கம் கீர்த்தனா. போட்டோவுல பார்த்ததைவிட, நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க” என்று கீர்த்தனாவுடன் கைக்குலுக்கினார் அனுவர்தன்.

சில நிமிடங்கள் கீர்த்தனாவை அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தவர், “உங்க போட்டோவைப்

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

பார்த்து ஒரு வெஸ்டர்ன் டிரெஸ் ரெடி பண்ணியிருந்தேன். சின்ன கவுன் மாதிரி அழகா இருக்கும். ஆனா, இப்ப உங்களை நேர்ல பார்க்கும்போது டிரெடிஷனல் உடைகள்தான் நல்லாயிருக்கும்னு தோணுது. புடைவை உங்களுக்குப் பிடிக்கும்தானே?” என்று அனுவர்தன் கேட்க, டபுள் உற்சாகமான கீர்த்தனா, ``ரொம்பப் பிடிக்கும்'' என்றார்.

“சூப்பர்! அழகான புடைவையில் உங்களுக்கு ஒரு க்ளாசிக் லுக் கொடுத்திடலாம்” என்ற அனுவர்தன், “ராஜு... மேக்கப் கொஞ்சம் நேக்கடா இருக்கட்டும். அதிகப்படியா இருக்க வேண்டாம். சில்வர் ஆன்டிக் ஜுவல்லரிதான் போடப்போறேன். அதுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிடுங்க” என்றவர், “மனோ, புடைவைக்கு ஃப்ரீஹேர்தான் சரியா இருக்கும். கடைசியில் மட்டும் கொஞ்சம் சுருண்ட மாதிரி இருக்கட்டும். முன்னாடி இருக்கும் வலதுபக்க முடியைக் கொஞ்சம் தூக்கிவிட்ருங்க” என்று இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துவிட்டு, கீர்த்தனாவுக்குப் புடைவையைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.

முதலில் `சில்க் ட்ரை பண்ணலாம்' என ஆரம்பித்து, இறுதியாக `கறுப்பு நிற காட்டன் புடைவையைக் கொடுக்கலாம்' என முடிவுசெய்து, அதற்கான வேலைகளில் இறங்கினார்.

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

மேக்கப் ரூமில், ராஜுவும் மனோகரும் தங்கள் வேலைகளைத் தொடங்கினர். “அண்ணா... த்ரிஷா மேம்க்குப் புடைவை செம அழகா இருக்கும். `விடிவி'யில் சான்ஸே இல்லாம இருப்பாங்க. ஒரு நகைக்கடை விளம்பரத்துலகூட கல்யாணப் பொண்ணா புடைவை கட்டிட்டு வருவாங்க பாருங்க... சூப்பரா இருக்கும்!'' என்றார் கீர்த்தனா.

``ஆமாம். புடைவை அவங்களுக்கு அழகா இருக்கும். ஆனா, த்ரிஷா மேம்க்கு மாடர்னா ஃப்ரீஹேர்ல, கேஷுவல் டிரெஸ்தான் பிடிக்கும்” என்று சொல்லியபடியே கீர்த்தனாவுக்கு ஐலேஷை எடுத்து ஒட்டினார். மேக்கப் வேலைகள் தொடர்ந்துகொண்டிருந்தபோதே, அவரின் முடி அயர்னிங் செய்து முடிக்கப்பட்டது.

“அண்ணா, இதுவரைக்கும் நீங்க வேலை செஞ்சதுலேயே எந்த ஹீரோயின் பெஸ்ட்டுன்னு நினைக்கிறீங்க?” என்று அடுத்த கேள்வியை மனோகரிடம் கேட்டார்.

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

“அனுஷ்கா. `பாகுபலி' உள்பட பல படங்கள்ல அவங்ககூட வேலைசெஞ்சிருக்கேன். எல்லோரையும் ரொம்ப மரியாதையா நடத்துவாங்க. ஒரு வேலை சரியா முடியணும்னா, அதுக்காக எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்படுவாங்க'' என்று பேசிக்கொண்டிருக்கும்போதே “என்னப்பா... நம்ம ஹீரோயின் ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அனுவர்தன்.

“வாவ்... ராஜு கலக்கிட்டீங்க போங்க. சூப்பர்!” என்று சொன்னவர் தொடர்ந்து, “பிரபு, ஸ்டீம் அயர்னிங் முடிஞ்சதுன்னா புடைவை எடுத்துட்டு வா. இங்கே நம்ம ஹீரோயின் ரெடி” என்று சொல்ல,
“மேம்... நீங்க என்னைக் கலாய்க்கிறீங்கதானே!” என்று கீர்த்தனா சிரித்தபடியே கேட்க, “ஓ... அதை இப்பதான் கண்டுபிடிச்சீங்களா?!” என்ற அனு, “ஆமாம். உண்மையிலேயே நீங்க இன்னும் முழு ஹீரோயினா மாறலை. அப்படி ஆகணும்னா, இந்தாங்க இந்தப் புடைவையைக் கட்டிட்டு வாங்க” என்று சொல்லி, கறுப்பு நிறப் புடைவையைக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது. ஹாலில் இருந்த சாம்பல் நிற சோபாவிலேயே எல்லோரும் காத்துக்கொண்டிருக்க, அந்தக் கறுப்பு நிற பெட்ரூம் கதவு, மெதுவாகத் திறக்கப்பட்டது.
“வந்துட்டாங்க நம்ம பியூட்டி கீர்த்தனா” என்று அனுவர்தன் வெளியே வர, பின்னால் கறுப்பு நிறப் புடைவையில் கதாநாயகிபோல நடைபோட்டு வந்தார் கீர்த்தனா. போட்டோ ஃப்ளாஷ், விதவிதமான போஸ் எனப் பரபரப்பானார் கீர்த்தனா.

ஆசை: 'கபாலி'யும் கீர்த்தனாவும்!

அவரது மகிழ்ச்சியைச் சின்னச் சிரிப்புடன் நின்று பார்த்துக் கொண்டிருந்த அனுவர்தன், “நல்ல டிரெஸ் போட்டு, சுத்தமாவும் அழகாவும் வெச்சுக்கிட்டாலே, நமக்குப் புது நம்பிக்கை வந்துடும்” என்று உற்சாகமாகப் பேசினார்.

``மேம், நான் சூப்பர்ஸ்டாரோட மிகப்பெரிய ரசிகை. அவரைப் பற்றி ஏதாவது சீக்ரெட், அவருக்கு என்ன டிரெஸ் பிடிக்கும்கிறதைச் சொல்லுங்க. ப்ளீஸ்!” என்று கீர்த்தனா செல்லமாகக் கேட்க, “ஐயோ... ரஜினி சார் சீக்ரெட்ஸ்னு ஒண்ணுமே இல்லை. அவர் ரொம்ப சிம்பிள். சமீபத்துலகூட போன் பண்ணார். ‘அனு ஃப்ரியா... ரெண்டு நிமிஷம் பேசலாமா?'ன்னு கேட்டுட்டுத்தான் பேசத் தொடங்கினார். ‘விகடன் விருதுகள் விழாவுக்குப் போகணும். குர்தா வேணும்... லைட் ப்ளூ இருந்தா பெட்டரா இருக்கும்ல?’ என்று கேட்டார். ஆக்சுவலி, சாருக்கு லைட் ப்ளூ ரொம்பப் பிடிக்கும். அவருக்குப் பிடிச்சதைக்கூட ரொம்ப பவ்யமாகத்தான் கேட்பார்” என்று ரஜினியுடனான தன் அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டார் அனுவர்தன்.

“என் வாழ்க்கையில் எனக்குப் பிடிச்ச முக்கியமான நாள் இது. நான் இப்ப ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருக்கேன். சினிமாவுல இருக்கும் பெரிய ஆளுங்க நம்மகிட்ட எப்படி நடந்துப்பாங்கன்னு கொஞ்சம் பயமிருந்தது. ஆனா, ரொம்ப சிம்பிளா இருந்தாங்க. அனு மேம் எனக்கு இன்னொரு ஃப்ரெண்ட் மாதிரி ஆகிட்டாங்க. மகிழ்ச்சி'' என செம ஸ்டைலாக காரில் ஏறினார் கீர்த்தனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism