Published:Updated:

வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

Published:Updated:
வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

ன்று... தமிழ்நாட்டை புயல், மழை தாக்குகிறது; இல்லையென்றால், ஒரே நாளில் பெருமழை பெய்து, நீர் வடிய வழி இல்லாமல், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களைத் தவிக்கவிடுகிறது. இந்த முறை மழை பொய்த்துப்போய், கடும் வறட்சிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது தமிழ்நாடு.

தண்ணீர் லாரிக்காக மக்கள் விடியவிடிய நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கும் அவலம் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. மார்ச் மாதமே இப்படியென்றால்... மே, ஜூன் மாதங்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

ஆனால் அரசு, வறட்சியின் தீவிரத்தை முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது, அதற்கான நீண்டகாலத் தீர்வுகள் என்னென்ன, எடுக்கவேண்டிய கொள்கை முடிவுகள் என்னென்ன, மக்களிடையே ஏற்படுத்தவேண்டிய விழிப்புஉணர்வு என்ன... என்பன குறித்தெல்லாம் இந்நேரம் அரசு முடிவெடுத்திருக்க வேண்டும்.

 குறைந்தபட்சம், பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே அ.தி.மு.க அரசு படுதீவிரமாக அமல்படுத்திய மழைநீர்

வறட்சியை எதிர்கொள்ள முழுமனதோடு இணைவோம்!

சேகரிப்புத் திட்டத்தையாவது புதுப்பித்து, புத்துணர்வோடு அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆளும் அரசு மக்களின் தாகத்தைத் தணிக்க இதுபோன்ற உருப்படியான காரியங்கள் எதையுமே செய்யவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏரிகள், குளங்கள் போன்றவற்றைத் தூர் வாரி, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவதற்கு வகைசெய்யும் `குடி மராமத்துத் திட்டம்' பற்றிச் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசு. சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருந்த திட்டம்தான் இது.

`இந்தத் திட்டத்தின் மூலம் 30 மாவட்டங்களில் 1,159 பணிகள் 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, ‘குடி மராமத்து’ப் பணிகள் நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, வரும் 2017-18ம் ஆண்டில் இதுபோன்ற பணிகள் 300 கோடி ரூபாயில் ஏப்ரல், மே மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்பட்டு, மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும்' என்று நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

பிட்டுக்கு மண் சுமந்த ஈசனின் புகழ் பாடிய புராண காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் திட்டம் இது. ஆம்... ஏரிக்கரைகளைப் பழுதுகள் நீக்கிப் பராமரிப்பது என்பது அரசின் வேலை மட்டும் அல்ல; குடிமக்களின் கடமையும்கூட. ஆம்... வீட்டுக்கு ஒருவரை இந்த வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் நம் நாட்டின் எழுதப்படாத சட்டம். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்துசெய்யும் வேலையாகத்தான் நம் முன்னோர்கள் இதைக் கடைப்பிடித்துவந்திருக்கிறார்கள்.

ஆதாயம் பார்க்கும் ஒரு திட்டமாக இதைக் கருதாமல், அரசியல் களத்தில் என்ன நிகழ்ந்தாலும் இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு தொய்வின்றி மக்கள் துணையோடு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க முடியும்.

மக்களுக்கான அரசு அதைத்தான் செய்யும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism