Published:Updated:

மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!

மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!
பிரீமியம் ஸ்டோரி
மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!

மு.நியாஸ் அகமது

மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!

மு.நியாஸ் அகமது

Published:Updated:
மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!
பிரீமியம் ஸ்டோரி
மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!
மண்டை ஓடு... கோவணம்... மிச்சமாகக் கொஞ்சம் உயிர்!

“உங்க பக்கத்துல கொத்துக்கொத்தா சாவுகள் விழுந்தா வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்ப்பீங்களா? `என்ன நடந்துச்சு?’ன்னு கொஞ்சம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்களா?” - இந்தியாவின் தலைநகரான டெல்லியின் ஜந்தர் மந்தரில் பெருங்குரலெடுத்துக் கோபத்துடன் கேட்கிறார்கள் தமிழக விவசாயிகள். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசும் தமிழக அரசும் கைக்கட்டி, வாய் மூடி வேடிக்கை பார்க்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு விவசாயிகள் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. `சொந்த பிரச்னை காரணமாக சில விவசாயிகள் இறந்தார்கள்’ என்று ஓர் அமைச்சர்கூட சொன்னார். தேசிய மனித உரிமை ஆணையமும் சென்னை உயர் நீதிமன்றமும் விவசாயிகள் மரணம் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்ட பிறகுதான், தமிழக அரசு தன் மெளனத்தைக் கலைத்தது; நிவாரணமும் அறிவித்தது. 

ஆனால், `அந்த நிவாரணம் போதாது’ எனப் பலமுறை எடுத்துச்சொல்லியும் போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளாத தால்தான், இப்போது டெல்லியில் கூடியிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.
`மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுச் சரியான நிவாரணத்தொகையைப் பெற்றுத்தர வேண்டும்; தற்கொலைகளைத் தடுக்க வேண்டும்; வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்...’ எனப் பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கிய விவசாயிகளின் டெல்லிப் போராட்டம் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்கிறது. 

``மாநில அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணம், இழப்புகளிலிருந்து எங்களை மீட்டெடுக்கவில்லை. பிறகு, எப்படி நாங்கள் அடுத்த பருவத்துக்கான விவசாய வேலைகளைப் பார்ப்பது? இதுவரை டெல்டாவில் வறட்சியால், விவசாயம் பொய்த்ததால், கடன் சுமையால் ஏறத்தாழ 400 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். நாங்கள் கைகளில் வைத்திருக்கிறோமே அவையெல்லாம் இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகள்தான். அவர்களுக்காகவும் நீதி கேட்டுத்தான்  போராடுகிறோம். தமிழ் உடல் டெல்லி மண்ணுக்கு உரமானாலும் பரவாயில்லை. தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்” என்கிறார் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு.

போராட்டத்தின் முதல் நாள் உண்ணா விரதத்தில் அமர்ந்திருந்தபோது, ஒரு விவசாயி ஜந்தர் மந்தரில் இருந்த ஒரு மரத்தில் ஏறி தூக்கு போட்டுக்கொள்ள முயன்றிருக்கிறார். அவரைத் தடுத்த பிற விவசாயிகள், `நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மரணத்துக்குக் கசியாத இரக்கமா... உன் ஒருவனின் மரணத்தில் ஆட்சி யாளர்களின் மனதிலிருந்து கசிந்துவிடப்போகிறது? நம்மிடம் இப்போது இருக்கும் ஒரே பலம், நம் உடலில் மிச்சமாகக் கொஞ்சமே ஒட்டியிருக்கும் உயிர் மட்டும்தான். அதைக்கொண்டு போராடுவோம்’ என சமாதானப்படுத்தி யிருக்கிறார்கள். ஆனாலும், நிலைமை மோசமாகிக் கொண்டுதான் இருக்கிறது. போராட்டத்தில் தினமும் மயங்கிவிழும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

 துணை நிற்கும் மக்கள்

விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டும் காணாததுபோல் கடந்துபோகிறது மத்திய அரசு. ஆனால், விவசாயிகளின் தொடர் போராட்டத்தைக் கண்டு அவர்களுக்கு உதவ ஒன்றுகூடியிருக்கிறார்கள் டெல்லி வாழ் தமிழர்கள். போராடும் விவசாயிகளுக்குத் தினமும் உணவளித்து, அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்கிறார்கள் அங்கிருக்கும் தமிழ் இளைஞர்கள்.

 இந்த முறை `சரியான தீர்வு கிடைக்காமல் டெல்லியில் இருந்து வெளியேறக் கூடாது’ என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்கள் விவசாயிகள்.

``மண்டை ஓடுகளை மட்டும் வைத்து, அரசு ஆட்சிசெய்ய முடியாது.  அதற்காகவாவது, அது தன் மெளனத்தைக் கலைத்து, தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கொண்டுவர வேண்டும். அது வரை நாங்கள் நகர மாட்டோம்’ என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

 உண்மைதானே... மண்டை ஓடுகளைவைத்து ஆட்சிசெய்ய அரசுகள் எதற்கு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism