Published:Updated:

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?
பிரீமியம் ஸ்டோரி
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

சார்லஸ்

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

சார்லஸ்

Published:Updated:
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?
பிரீமியம் ஸ்டோரி
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

``கோஹ்லி போன்ற ஒரு தெருச்சண்டைக்காரனை கேப்டனாக நியமித்தால், இதுபோன்ற அசிங்கமான கிரிக்கெட்டைப் பார்த்துதான் ஆக வேண்டும்.''

``ஸ்டீவன் ஸ்மித் கிரிஸுக்கு வந்ததுமே, கோஹ்லி ஏதோ அவரைச் சிறைக்குள் வைப்பது போல ஃபீல்டிங்கை மாற்றினார். பேட்ஸ்மேனின் அருகில் நின்றுகொண்டு திட்டித் திட்டிப் பேசிக்கொண்டே இருந்தார்.''

``கோஹ்லி தன்னுடைய செயல்களால் அல்ல, தன்னுடைய கெட்ட வார்த்தைகளால் தனது அணியினரை மோட்டிவேட் செய்ய முயல்கிறார். அவர் ஒரு தலைவனே அல்ல.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

-இப்படியெல்லாம் வீராட் கோஹ்லியை வசைபாடுவதும், அவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் இந்நாள் வீரர்களும் ஆஸ்திரேலிய மீடியாவும்தான்.

ஆமாம்... ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டுமே சொந்தமான ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் வெற்றிக்கான கடும் போராட்டத்தையும் இந்தியர்கள் காட்டினால், அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர்களின் மருந்தைத் திருப்பி அவர்களுக்கே கொடுத்தால்?

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

கோஹ்லியின் கோபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், கிரிக்கெட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்... ஆஸ்திரேலியாவின் அழுகுணி அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

`ஜென்டில்மேன் ஆட்டம்' என அழைக்கப்படும் கிரிக்கெட்டை, உண்மையில் ஆக்ரோஷமாக ஆடியவர்கள்தான் அதன் உச்சத்தில் ஏறி நின்றிருக்கிறார்கள்; கிரிக்கெட்டை பல காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள்.

1970-ம் ஆண்டுகளில், மேற்கு இந்தியத் தீவுகளின் ஆக்ரோஷத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றி பெருமை பேசுவதை, இப்போதும் பார்க்க முடியும். பேட்ஸ்மேன்களின் தலையைக் குறிபார்த்துதான் வெஸ்ட் இண்டீஸ் பெளலர்கள் பந்துவீசுவார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ் தனது பேட்டால் ஈவுஇரக்கமின்றி பந்துகளைச் சிதறடிப்பார். அவர் நடந்துவரும் விதமும், பேட்டைப் பிடிக்கும் ஸ்டைலுமே எதிர் அணியினரைக் கலங்கடிக்கும். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேட்டி கொடுக்கும் விதமும், அவர்களைப் பற்றிய செய்திகளும் `அவங்களை எல்லாம் வீழ்த்தவே முடியாதுப்பா' என்கிற பில்ட்அப்பைக் கொடுத்தது. அப்படித்தான் உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மேற்கு இந்தியத் தீவுகள்.

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

1983-ம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்ற பிறகும், பம்மிப் பதுங்கும் ஆட்டமுறையையே மேற்கொண்டதால், ஆஸ்திரேலியா எழுந்தது. 1987-ம் ஆண்டில் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதிலிருந்து இப்போது வரை கிரிக்கெட் ஆஸ்திரேலியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர்கள் பெற்ற வெற்றிகளும், அவர்கள் வாங்கிய உலகக்கோப்பைகளும்தான் அதிகம். காரணம், களத்தில் மட்டும் அல்ல வெளியிலும் அவர்கள் காட்டும் ஆக்ரோஷமும் மிரட்டல் பேச்சும் `அவர்கள் மிகவும் பலம் பொருந்தியவர்கள்' என்று அவர்களே கட்டமைத்திருக்கும் மாய பிம்பமும்தான். டேவிட் பூன், ஆலன் பார்டர் என முன்னோடிகள் காட்டிய வாய் வீரத்தைத்தான் இன்று வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பின்பற்றுகிறார்கள்.

 ரிக்கி பான்டிங்கை நினைவிருக்கிறதா? கடைசிப் பந்தின் இறுதி நொடி வரை வெற்றிக்காக

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

ஆக்ரோஷமாகச் சண்டையிடும் மனிதர். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடையப்போகிறோம் என்பதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதற்காக அவர் வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. விக்கெட்டுகளை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் எனத் துடித்தார்.  இந்திய பேட்ஸ்மேன்களின் கோபத்தைத் தூண்டி கவனத்தைத் திசைத்திருப்ப வார்த்தைகளை அள்ளிவீசினார். அதுதான் ஆஸ்திரேலியா.

ரிக்கி பான்டிங்குக்கு அது ஸ்டீவ் வாக் காட்டிய பாதை. எதிர் அணி கேப்டனோடு ஒன்றாக நடந்துவந்து டாஸ் போடுவதைக்கூட கெளரவக் குறைச்சலாக நினைத்தார் ஸ்டீவ் வாக். எதிர் அணி கேப்டன்களை மனதளவில் சுருக்கினார். அதே நடைமுறையைத்தான் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் கோஹ்லியிடம் செய்யப்பார்க்கிறது. ஆனால், கோஹ்லி திருப்பி அடிக்கிறார். ஒரு வார்த்தை சொன்னால், பத்து வார்த்தைகளை எதிர் அணியின் முகத்தில் அறைகிறார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் ஆஸ்திரேலிய அணியினரும் அதன் மீடியாவும் கோஹ்லியை குரங்குடன் ஒப்பிடுவது, டொனால்டு ட்ரம்ப்புடன் ஒப்பிடுவது எனக் கேலிசெய்துபார்க்கிறது.

கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்?

ஆஸ்திரேலிய கேப்டன்களைப்போல கோஹ்லிக்கு அப்படி முன் உதாரணங்கள் இல்லை. லார்ட்ஸில் சட்டையைக் கழற்றிவிட்டு கங்குலி ஓடியதும் `தெய்வக்குத்தமாகிப்போச்சு' என அலறியது இங்கிலாந்து. ஆனால், இந்தியாவில் சட்டையைக் கழற்றிவிட்டு ஓடிய, இந்திய வீரர்களை மட்டமாகப் பேசிய ஆண்ட்ரூ ஃப்ளின்ட்டாஃபை `ஆங்ரி யங்மேன்' என வளர்த்தெடுத்தது அதே இங்கிலாந்து.

உண்மையிலேயே கோஹ்லி ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். ஆம், இன்று இந்திய இளைஞர்களுக்கு வெற்றி மட்டுமே வேண்டும். அதற்காகக் கடுமையாகப் போராட, போரிடத் தயாராக இருக்கிறார்கள். வெற்றி மட்டுமே இலக்கு என்றான பிறகு, இங்கே ஜென்டில்மேன் கேம் ஆட யாரும் தயாராக இல்லை.

இந்த ஆக்ரோஷம் நிச்சயம் தேவை. புனே டெஸ்ட்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணியை அடுத்த டெஸ்ட்டிலேயே வெற்றிபெற்று எழுந்து ஓடவைத்த ஆக்ரோஷமும் வேகமும் இருந்தால்தான், இந்தியா `நம்பர் 1' அணியாக நிலைத்து நிற்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism