Published:Updated:

அடேல் பாடினால்...

அடேல் பாடினால்...
பிரீமியம் ஸ்டோரி
அடேல் பாடினால்...

பா.ஜான்சன்

அடேல் பாடினால்...

பா.ஜான்சன்

Published:Updated:
அடேல் பாடினால்...
பிரீமியம் ஸ்டோரி
அடேல் பாடினால்...
அடேல் பாடினால்...

ரண்டே ஆல்பங்கள்... அதற்குப் பிறகு நான்கு வருட இடைவெளி. நடுவில் ஒரே ஒரு திரைப்படப் பாடல். ஆஸ்கர், கிராமி எனப் பல விருதுகள்... அவ்வளவுதான் பாடகி அடேலின் கதை. அப்படிப்பட்ட அடேல் இப்போது அடுத்த ஆல்பத்தோடு வந்திருக்கிறார் என்றால், இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த லெவலில் இருக்கும்! மூன்றாவது ஆல்பத்தின் ஒரேஒரு பாடலுக்கு, அட்வான்ஸ் புக்கிங் செய்தவர்கள் மட்டுமே பத்து லட்சம் பேர். இதற்கு முன்னர் ஆன்லைனில் இப்படி ஒரு விற்பனை நிகழ்ந்ததே கிடையாது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகி அடேலுக்கு வயது 28. இதுவரை 15 கிராமி விருதுகள் வென்றிருக்கிறார். அதில் ஐந்து விருதுகள் இந்த ஆண்டு வென்றவை. அடேலின் `21', `ரோலிங் ஆன் தி டீப்',  `25', `ஹலோ' இசை ஆல்பங்கள் மிகப் பிரபலமானவை. அவர் பாடல்களுக்குத்தான் இன்று பாப் உலகமே ஆடிக்கொண்டிருக்கிறது!

கேத்தி பெர்ரி, ஜெனிஃபர் லோபஸ், ஷகீரா, மிலி சைரஸ், செலினா கோமஸ் போன்ற திறமையான பல பாடகிகள் அடேலுக்கு முன்பே இந்தத் துறையில் வந்து ஜெயித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை மீறி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கினார் அடேல். அதுதான் அடேலின் ஸ்பெஷல். பெஸ்ட் செல்லிங் ஆர்ட்டிஸ்ட் என்ற பரபரப்பு நிலைக்கு வந்துவிட்ட அவரது ஆரம்பம், மிக அமைதியாக இருந்தது. எந்தப் பெரிய அலட்டலும் இல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாகப் பாடித் திரிந்தபடி ஆரம்பித்தது அவரது இசைப்பயணம்.

எப்போதும் அடேலுக்கு இடைவெளி எடுத்துக்கொள்வது பிடித்த விஷயம். பதினாறு வயதில், `ஹோம்டவுன் க்ளோரி' என்ற பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருந்தார் அடேல். மொத்தமே 500 காப்பிகள் மட்டுமே பதிவுசெய்யப் பட்டன. பிறகு அதே பாடலை அவரது முதல் ஆல்பத்தில் சேர்க்க அதன் ரீச் பிரமாண்டமாக இருந்தது. பிறகு சின்ன இடைவெளி.

மூன்று வருடங்கள் கழித்து லண்டனில் படிப்பை முடித்த சமயத்தில், அவர் பாடிய டெமோ பாடல் ஒன்றை, அவரது நண்பர் மை ஸ்பேஸ் என்ற சமூகவலைதளத்தில் பதிவேற்றம்செய்தார். மிக எளிமையாக, கையில் கிட்டாரை வைத்துக்கொண்டு பாடி, பதிவுசெய்யப்பட்டிருந்த வீடியோ அது. அந்தப் பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, ரிச்சர்ட் ருசலிடம் இருந்து அழைப்புவருகிறது. இவர், எக்ஸ் எல் ரெக்கார்டிங் நிறுவனத்தின் தலைவர்.

எக்ஸ் எல் ரெக்கார்டிங் நிறுவனம், 18 வயது அடேலிடம் ஆல்பத்துக்கான ஒப்பந்தம் போடுகிறது. தனது 19 வயதில் முதல் ஆல்பத்தை எழுதத் தொடங்கியதால் ஆல்பத்துக்கு 19 எனப் பெயரிடுகிறார். அதேதான் 21 மற்றும் 25 ஆல்பத்தின்  பெயர்க் காரணமும். முதல் ஆல்பம் வெளியாகி பல தளங்களில் சார்ட் பஸ்டராகப் பட்டையைக் கிளப்புகிறது. மீண்டும் ஓர் இடைவெளி.

``அடுத்த ஆல்பத்தை  என் காதல் தோல்வியை இன்ஸ்பிரேஷனாக வைத்து உருவாக்கப் போகிறேன்’’ என அறிவித்துவிட்டு ஆல்பத்துக்கான வேலைகளில் இறங்கினார். காதல் தோல்வியின் வலி அனைத்தும் இசையாக மாறியது.

`சம் ஒன் லைக் யூ' பாடலில் எழுதிய வரிகள் எல்லாம் முன்னாள் காதலனுக்கான கேள்விகளாகவே இருக்கும். அந்தக் காரணத்தினாலேயே அதிக வரவேற்பும் பெற்றது.

அடுத்த ஆல்பம் தொடங்க, பெரிய பிரேக் எடுத்துக்கொண்டார் அடேல். ஆல்பத்துக்கு முன்னர் ஜேம்ஸ்பாண்ட் படமான `ஸ்கைஃபால்’ படத்தின் டைட்டில் ட்ராக் பாடும் வாய்ப்பு வந்து காலிங் பெல்லை அழுத்தியது.
 
`நான் பாடும் பாடல்களை என் வாழ்க்கையில் இருந்துதான் எடுக்கிறேன். சினிமாவுக்கான பாடலை உருவாக்க நான் பொருத்தமாக இருக்க மாட்டேன்’ எனக் கூறி, முதலில் அந்த வாய்ப்பை மறுத்தார் அடேல். இருந்தாலும், படத்தின் முழு ஸ்கிரிப்டையும் கொடுத்து, `படித்துவிட்டு யோசித்து முடிவுசொல்லுங்கள்’ எனக் கூறுகிறது படக் குழு. படத்தின் லைன் பிடித்துவிட பாட சம்மதிக்கிறார். 18 மாதங்கள் அந்த ஒரு பாடலுக்காகச் செலவிட்டு உருவாக்கிக்கொடுக்க, பாடல் ஆஸ்கர் விருதை அடேலுக்குப் பெற்றுத்தந்தது.

இப்போது, மீண்டும் ஆல்பம் வேலைகளுக்குத் திரும்பியவர், இந்த முறை என்ன விஷயத்தை வைத்துப் பாடலமைப்பது என யோசிக்கிறார். முந்தைய ஆல்பத்தை பிரேக்கப்பில் இருந்து எடுத்தவர், இந்த முறை மேக்கப். அதாவது காதல் தோல்வியிலிருந்து மீண்டுவந்ததை வைத்து பாடல்களை உருவாக்குகிறார். ஆல்பம் முழுக்க பாசிட்டிவ் அலைகள் இசையாகத் தெறித்தன. குறிப்பாக `ஹலோ ஃப்ரெம் த அதர் சைடு' பாடல் பல விதங்களிலும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.

அடுத்த ஆல்பம் என்ன என்பது மட்டும் இன்னும் ரகசியமாகத்தான் இருக்கிறது. நிறைய கான்செர்ட்கள் சென்றுவந்தாலும், அடேல் ஆல்பத்தின் மூலம் செய்த மேஜிக்கை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்!

அடேல் பாடினால்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 `ஸ்கைஃபால்’ படப் பாடலுக்காக வாங்கிய ஆஸ்கரையும் சேர்த்து மொத்தம் 146 விருதுகளை வென்றிருக்கிறார் அடேல்.

அடேல் பாடினால்...

`உடல் எடை அதிகரித்திருக் கிறதே அது பற்றி கவலையில்லையா?’ எனக் கேட்டபோது, `இசை என்பது காதுகளுக்குத்தான் கண்களுக்கு இல்லை என்று நம்புகிறேன்’ என்பது அடேலின் பளிச் பதில்.

அடேல் பாடினால்...

94 நாள்கள்... தன் மகனின் பெயரை வெளியிடாமல் இருந்து, பின்பு தனது நெக்லஸில் அந்தப் பெயரை இணைத்துத் தெரியப்படுத் தினார். மகன் பெயர் ஏஞ்சலோ (Angelo).

அடேல் பாடினால்...

தனது முதல் பாடலான, `ஹோம்டவுன் க்ளோரி’யைப் பத்தே நிமிடத்தில் எழுதியிருக்கிறார் அடேல். அப்போது அவருக்கு வயது 16.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism