Published:Updated:

பண வலையை அறுப்போம்!

பண வலையை அறுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
பண வலையை அறுப்போம்!

பண வலையை அறுப்போம்!

பண வலையை அறுப்போம்!

பண வலையை அறுப்போம்!

Published:Updated:
பண வலையை அறுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
பண வலையை அறுப்போம்!

மீண்டும் ஓர் இடைத்தேர்தலை, தமிழகம் சந்திக்க இருக்கிறது. ஆனால், கடந்த இடைத்தேர்தல்களுக்கும் ஜெயலலிதாவின் மறைவால் இப்போது நடக்கவிருக்கும் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த இடைத்தேர்தலில் யார் ஜெயித்தாலும் சட்டமன்றத்தில் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் பலம் ஆட்சியை மாற்றும் அளவுக்கு மாறிவிடப்போவதில்லை. ஆனால், ஜெயலலிதாவின் ஆதரவு வாக்குகள் தங்களுக்குத்தான் இருக்கின்றன என்பதை நிரூபிக்க ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி அரசியல்செய்யும் மூன்று அணியினரின் பலம் என்ன என்பது வெளிப்பட்டுவிடும்.

அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் ஆகிய இரண்டையும் தேர்தல் ஆணையம் முடக்கியிருக்கும் நிலையில், ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள சசிகலா அணி ஒருபுறமும்... `நாங்கள்தான் நிஜமான அ.தி.மு.க' என்று உரிமை கொண்டாடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி இன்னொருபுறமும் மோதிக்கொள்ளும் இந்தக் களத்தில், ஜெயலலிதாவின் ரத்த வாரிசான தீபாவும் அ.தி.மு.க-வுக்குச் சொந்தம் கொண்டாடி போட்டியில் குதித்திருக்கிறார். ஏற்கெனவே, பலமான எதிர்க்கட்சியாகத் திகழும் தி.மு.க முழு வேகத்தோடு எழ இதுவே தக்க தருணம் என்று பல வியூகங்களோடு தேர்தலைச் சந்திக்கிறது.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழகத் தேர்தல்களில்தான் அதிகமான பணம்

பண வலையை அறுப்போம்!

செலவிடப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. பணத்தின் திருவிளையாடல்கள் கைமீறிப்போனதால் இரண்டு தொகுதிகளில் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்ட வரலாறும் தமிழ்நாட்டுக்கே சொந்தம். 234 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தபோதே பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்றால்... கட்சி, ஆட்சி, தங்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்தல் யுத்தத்தில் பணத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, சென்னை நகர காவல் ஆணையரைத் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. ஆர்.கே நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று கண்டறிந்த தேர்தல் ஆணையம், அங்கெல்லாம் மத்தியப் பாதுகாப்புப் படையினரைக் காவலுக்கு நிறுத்தியிருக்கிறது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் தேவைதான் என்றாலும் இவை மட்டும் போதா.

ஏற்கெனவே திருமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் நடந்த கேலிக்கூத்துகள் ஆர்.கே நகர் இடைத்தேர்தலிலும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அப்படி மீறி தவறு நடந்தால், அது தேர்தலின் மீதான மக்களின் நம்பிக்கையைக் கேலிக்குரியதாக்கிவிடும்.

ஜனநாயகத்தைப் பணநாயகமாக யார் மாற்ற நினைத்தாலும், அவர்களை விரட்டியடிக்கவேண்டியது ஆர்.கே நகர் வாக்காளர்களின் பொறுப்பு. பணம், பொருள் என யார் எதைக் கொடுத்தாலும் அதை போட்டோ, வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவவிடுவதே பண வலை விரிப்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான முதல்கட்ட முயற்சியாக இருக்கட்டும்.

வழக்கமான இடைத்தேர்தல் ஃபார்முலாக்களை எல்லாம் மாற்றிக்காட்டி புதிய வரலாறு எழுதவேண்டிய தருணம் இது. இளைஞர்களே செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism