வரவேற்கவேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு இது. `நெடுஞ்சாலைகளிலும் மற்றும் அவற்றையொட்டி

500 மீட்டர் வரை உள்ள பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், தமிழகம் முழுவதும் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதே உத்தரவின்பேரில் 604 மதுக்கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டன. ஆக மொத்தம், தமிழ்நாட்டில் மட்டும் 3,925 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் உச்சத்தைத் தொட்டது. மக்களே தன்னெழுச்சியாகத் திரண்டு, டாஸ்மாக் கடைகளை உடைத்து நொறுக்கினார்கள். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வே, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று அறிவிக்கும் அளவுக்கு டாஸ்மாக் எதிர்ப்பு எழுச்சி இருந்தது. இந்தப் போராட்டத்தில், சசிபெருமாள் என்கிற காந்தியவாதியை இழந்தோம். ஆனாலும், முழுமையாக மதுவிலக்கை அறிவிக்க மனம் இல்லாத அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, `அடுத்து ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்றார், தனது தேர்தல் பிரசாரத்தில்.

அவரும் ஆட்சிக்கு வந்தார். பதவியேற்ற முதல் நாளில், `500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என்றார். அவரது மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும், `500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என்று அறிவித்தார். உண்மையில் மூடப்பட்டது, `மூடப்படும்' என அறிவிக்கப்பட்டது அனைத்துமே வியாபாரரீதியாகச் செயல்பட முடியாமல் நலிவுற்ற மதுபானக் கடைகளா?' என்ற கேள்விக்கு அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. மொத்தமாக டாஸ்மாக் கடைகளை மூட, தமிழக அரசு தயாராக இல்லாத நிலையில், இப்போது உச்ச நீதிமன்றமே கடுமையான உத்தரவு போட்டு மக்கள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. ஆனாலும், இப்படி ஒரு தீர்ப்பைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்தது தமிழ்நாடு அரசு.

`நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் என்ற உச்சவரம்பைத் தளர்த்த வேண்டும். கடைகளை மூடுவதற்கான கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்' என்றெல்லாம் விடாப்பிடியாகப் போராடிப் பார்த்தது. `டாஸ்மாக் மூலம் கிடைக்கும் 25,500 கோடி ரூபாயை நம்பித்தான் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளன' என்றெல்லாம் வாதாடிப் பார்த்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் அசைந்துகொடுக்கவில்லை. `படிப்படியாக மதுவிலக்கு' என்று தமிழ்நாடு அரசு சொல்வது பசப்பு வார்த்தைதான் என்பதை, அரசே நீதிமன்றத்தில் நிரூபித்தது. மொத்தம் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாதிக் கடைகள் நெடுஞ்சாலைகளிலும், அவற்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டிருக்கின்றன என்றால், மக்கள் மீது தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் ‘அக்கறை’யை உணர்ந்துகொள்ள முடிகிறது.

இந்த மூன்றாயிரத்துச் சொச்சம் மதுக்கடைகள் மூடப்பட்டதும், அவற்றை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் திறக்க தமிழ்நாடு அரசு முயல்வதுதான் அடுத்த அவலநிலை. தமிழக மக்கள் இதனைத் தடுத்தாக வேண்டும். சமீபகாலமாகவே அநீதிக்கு எதிரான மக்களின் உணர்வு அதிகரித்துள்ளது. இந்த உணர்வு இப்போது திரளவேண்டியது டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக. மக்கள் குடியிருப்பு உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க ஒருக்காலும் அனுமதிக்கவே கூடாது. டாஸ்மாக் வருமானம் மூலம் கிடைக்கும் இலவசப் பொருள்களும், நடைமுறைப்படுத்தப்படும் மக்கள்நலத் திட்டங்களும் நமது உயிரை விலையாகக் கேட்கும் உதவிகள். அவை வாய்ப்புகள் அல்ல, வாய்க்கரிசி என்பதை உணர வேண்டும்.

`குடி குடியைக் கெடுக்கும்' என்பது தனிப்பட்ட ஒரு குடும்பத்தை மட்டும் அல்ல, தமிழ்க்குடியையே கெடுக்கும் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

டாஸ்மாக்கை உறுதியாகவும் இறுதியாகவும் ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம் இது!