இ-வாலெட்டுகள்தான் இப்போது இளைஞர்களின் ஆயுதம்.

டாக்ஸி புக் பண்ண வேண்டுமா, ஹோட்டலில் சாப்பிட வேண்டுமா, விமானம், ரயில், பஸ் என எல்லா டிக்கெட் பதிவுகளும் இ-வாலெட்டுகள் மூலமே நடக்கின்றன. பெரிய கடைகளிலிருந்து பெட்டிக்கடைகள் வரை பேடிஎம் போஸ்டரைப் பார்க்க முடிகிறது. பேடிஎம் மட்டுமா?

ரத்த வங்கியைத் தவிர, மற்ற எல்லா வங்கிகளும் ஆளுக்கொரு இ-வாலெட் ஆப்பைக் கொண்டு வந்திருக்கின்றன. 500 ரூபாய் நோட்டுகளில் எது நல்ல நோட்டு என நாம் யோசிக்க மாட்டோம். ஆனால், ரூபாய்க்கு மாற்றாக வந்திருக்கும் இந்த பேமென்ட் ஆப்களில் எது நல்லது, எது தவிர்க்க வேண்டியது?

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பே பிரபலமான இ-வாலெட் அப்ளிகேஷன் இது. இந்த ஏரியா, அந்த ஏரியா எனப் பாகுபாடே கிடையாது. எல்லா ஏரியாக்களிலும் பேடிஎம் கில்லி. இதில் கட்டணம் செலுத்துவது அவ்வளவு எளிது. கடைகளின் கவுன்ட்டரில் பார்கோடு ஒன்று இருக்கும். அதை பேடிஎம் ஆப் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். நாம் செலுத்தவேண்டிய தொகையைக் குறிப்பிட்டு க்ளிக் செய்தால் முடிந்தது. அந்தக் கடையின் பேடிஎம் அக்கவுன்ட்டில் பணம் சேர்ந்துவிடும். சரி, மொபைலில் இன்டர்நெட் கனெக்ட் ஆகாவிட்டால்? அதற்கும் வழி கொண்டு வந்துவிட்டார்கள். குறுஞ்செய்தி மூலம் வரும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) வைத்தே நம்மால் பணம் செலுத்த முடியும்.

நமது பேடிஎம் அக்கவுன்ட்டில் வரவுவைக்க, கிரெடிட் கார்டு அல்லது வங்கி இணையக் கணக்கைப் பயன்படுத்தலாம். மாதம் 20,000 ரூபாய் வரை பேடிஎம் அக்கவுன்ட்டுக்குப் பணம் மாற்ற முடியும். கிரெடிட் கார்டிலிருந்து பணமாக, பைசா செலவு இல்லாமல் வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ள இந்த இ-வாலெட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகம்.

இவர்களும் பேடிஎம்போலவேதான். ஆனால், ஆன்லைன் ஸ்டோர் போன்ற எக்ஸ்ட்ரா வித்தைகள் கிடையாது. அதற்குப் பதிலாக இன்னொரு சேவை தருகிறார்கள். நம் கையில் நிறைய பணம் இருந்தால், ஒரு போன் செய்தால் போதும். நாம் இருக்கும் இடத்துக்கே வந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதை நமது இ-வாலெட்டில் சேர்த்து விடுவார்கள். மொபைலை ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால், குறுஞ்செய்தி அல்லது கால் போதும். வேண்டிய தகவலை வாங்கிக்கொண்டு ரீசார்ஜ் செய்துவிடுவார்கள். அந்தத் தொகையை நமது வாலெட்டில் கழித்துவிடுவார்கள்.

ஆனால், பேடிஎம்முடன் ஒப்பிடும்போது இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை.

பேடிஎம்மிலிருந்து இன்னொருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றால், அவரும் அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு BHIM ஆப்-ல் இருக்கிறது. இதுவரை 1.7 கோடி மொபைல்களில் இந்த ஆப் டவுன்லோடு ஆகியிருக்கிறது. காரணம், இது மோடி வெளியிட்ட அரசின் அதிகாரபூர்வ ஆப்.

நமது வங்கிக்கணக்குக்காகக் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்து பீம் ஆப்பை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த ஆப்-க்கு என பிரத்யேக பாஸ்கோடை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை மொபைல் எண்ணோடு இணைப்பதால், பணம் அனுப்ப மொபைல் எண் மட்டுமே போதும். இதன் மூலம் எந்த சேவிங்ஸ் அக்கவுன்ட்டுக்கும் பணம் அனுப்புவது எளிது மற்றும் பாதுகாப்பானது.

இதுதவிர, ஐசிஐசிஐ, ஹெச்.டி. எஃப்.சி., எஸ்.பி.ஐ என அனைத்து வங்கிகளும் வாலெட் சேவைகள் தருகின்றன. அந்தந்த வங்கியில் கணக்கு வைத்திருப் பவர்கள் அந்தந்த வாலெட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் அப்ளிகேஷன் செயல்பாடு ஆகியவற்றில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால், வங்கிகள் இ-வாலெட்டி லிருந்து மீண்டும் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்ற, கட்டணம் வசூலிக்கின்றன.

எந்த ஆப்பைப் பயன்படுத்தி னாலும் அதன் செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகு பயன்படுத்துவது நல்லது என்பதுதான் டிஜிட்டல் உலகின் அடிப்படை விதி.