பிரீமியம் ஸ்டோரி

#Throwbackstory

ஈரோடு மகேஷ்

யாரோ to ஹீரோ

#அந்தஒருநாள்

1998-ம் ஆண்டு மே மாதம் எனக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. என்னைச் சுற்றி இருந்தவங்க எல்லோரும் என்னை `இன்ஜினீயரிங் படி, ஆர்ட்ஸ் படி'னு ஆலோசனை சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால், எனக்குத் தமிழ் எடுத்துப் படிக்கணும்னு ஆசை.

`தமிழைப் பாடமா எடுத்துப் படிக்காதே, வீணாப்போயிடுவே! எம்.ஏ., எம்.ஃபில் முடிச்சவனுக்கே வேலை கிடைக்கலை'னு சொல்லி, பலரும் திட்டினாங்க. ஆனால், என் தாய்மொழி என்னை ஒருபோதும் பிச்சையெடுக்க விடாதுனு உறுதியா நம்பினேன். தமிழ் எடுத்துப் படித்த அந்த நாள்தான் என் வாழ்க்கையைத் திருத்தி எழுதிய நாள்

யாரோ to ஹீரோ

#படிப்பினை

நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்.

பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டிகளின்போது பரிசுகளை வாங்கி வாரிக் குவிச்சேன்.

சீரியஸா பேசுவதை, காலப்போக்கில் காமெடியா மாத்தினேன். ஆங்கர் ஆனேன்.

இப்பவும் எப்பவும் அதே வேலைதான். எல்லோரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்கிறேன்.

யாரோ to ஹீரோ

#ஈரோடு

என் வேரோடு இருக்கும் ஈரோடு.

அதுதான் சேர்த்துக்கொண்டேன் பெயரோடு.

#ரோல்மாடல்

`பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை' எனச் சொல்லிக்கொடுத்த அப்பா.

யாரோ to ஹீரோ

#உண்மை

இங்கே உண்மைகளை, நியாயங்களை யார் மதிக்கிறா? ஓடுற வரைக்கும் ஓடட்டும்

#புத்தகம்

உடன் இருக்கும் நண்பன். பாரதியைப் படிக்கும்போது பாரதியாக மாறிப்போவேன்.

யாரோ to ஹீரோ

#புரியாதபுதிர்

யார் நினைத்த மாதிரியும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. அது, தான் நினைத்த மாதிரி அமைத்துக் கொள்வதுதான் புரியவேயில்லை.

யாரோ to ஹீரோ

#வேண்டாம்

பொறாமைப்படும் மனம்.

யாரோ to ஹீரோ

#சிரிப்பு

வழக்கமா சொல்றதுதான். அடுத்தவன் கஷ்டத்தைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது. நமக்குக் கஷ்டம் வரும்போது சிரிக்க மறக்கக் கூடாது.

#தோல்வி

தோல்வியை ருசிப்பவனால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும்.

யாரோ to ஹீரோ

#நன்றி

புகழ்ந்தவர்களுக்கும்
இகழ்ந்தவர்களுக்கும்!

#கடைசியாசொல்றேன்

வாழ்க்கை ஒரு திருவிழா, தினமும் கொண்டாடணும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு