Published:Updated:

“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”
“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

சே.த.இளங்கோவன் - படம்: ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

‘அடடே!’ என நம்மை ஆச்சர்யப்படுத்தும் `காமன்மேன்’ கார்ட்டூன்கள்தான் காட்டூனிஸ்ட் மதியின் அடையாளம். பெருத்த மீசை, ஒட்டுப்போட்ட சட்டை, தேய்ந்துபோன செருப்பு, கிழிந்த குடைகொண்ட இந்த ‘காமன்மேன்’...  கடந்த 30 ஆண்டுகளாகப் பேசாத பிரச்னைகள் இல்லை. 

“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

சமீபமாக `தினமணி’யில் இவரது கார்ட்டூன்களைக் காண முடியவில்லை. `என்ன?’ என விசாரித்தால், மனிதர் அங்கே இல்லை.

ஆம்... 20 வருடப் பயணத்துக்குப் பிறகு `தினமணி’ பத்திரிகையிலிருந்து விலகி, வெளியே வந்திருக்கிறார் மதி. தமிழகத்தின் மிகச்சிறந்த கார்ட்டூனிஸ்ட்களில் ஒருவர். விகடன் மாணவப் பத்திரிகையாளராகத் தன் மீடியா பயணத்தைத் தொடங்கியவர்.

``சரியாக மார்ச் 23-ம் தேதியுடன் எனக்கு தினமணியில் 20 வருடங்கள் முடிந்தன. இருபத்தொன்றாவது வயதிலேயே பத்திரிகைகளில் கார்ட்டூன் தீட்டத் தொடங்கிய நான், ஐந்து ஆண்டுகள் சோ சாரிடம் பணியாற்றினேன்.

என் வாழ்க்கையில நான் சந்திச்ச வொண்டர்ஃபுல் மனிதர்... சோ. ஆன்மிகம் தொட்டு அரசியல் வரை எல்லாவற்றையும் போதிப்பார். என் சுதந்திரத்துக்கு எந்தத் தடையும் போடாதவர். பழகாதவர்களுக்குத்தான் அவர் வி.ஐ.பி. நெருங்கிப் பழகி, அவர் மனதில் இடம் பிடித்துவிட்டால், ஒரு குழந்தையைப்போல அன்பும் குறும்புமாகப் பழகுவார். என் இயற்பெயர் மாரியப்பன். 

“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”
“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

என் திருமணத்துக்கு வந்தபோது, ‘மதி என்கிற மாரி என்கிற சூபி என்கிற சுகவனம் என்கிற மதிமயக்கும் பெருமாள்’ என எழுதிக்கொடுத்தார். `மதிமயக்கும் பெருமாள்’ என எனக்குச் செல்லப்பெயர் சூட்டினார். என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஒருமுறை, ‘தி.மு.க ஐம்பெரும் தலைவர்கள் அன்றும் இன்றும்’ என ஒரு கார்ட்டூன் போட்டுவிட்டு, ‘இன்று’-வில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் என கருணாநிதி குடும்பத்தினர் படங்களை வரைந்தேன். ‘அன்று’-வில் உள்ள ஐம்பெரும் தலைவர்கள் லிஸ்ட் சரியா என செக் பண்ண, சோ சாரிடம் பேசினேன். ஏனெனில், கருணாநிதி மிக நுட்பமான அறிவும் ஆளுமையும் கொண்டவர். கொஞ்சம் தவறாகிப்போனாலும் நாம் அவ்வளவுதான். ‘ஐம்பெரும் தலைவர்கள் சரி’ என சோ சாரும் கூறினார். பிறகு வேடிக்கையாக, ‘இனி உங்கள் தலைவர் பிரபாகரன்தானா?’ எனக் கிண்டல் செய்தார். அவர் ஒரு நிறைகுடம். மாற்றுக்கருத்துகளை அனுமதிப்பார். விவாதித்தால் விளக்கம் கொடுப்பார்.''

“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

``உங்கள் கார்ட்டூன்கள் தி.மு.க-வைக் கடுமையாகச் சாடியதாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் பார்வையில் கருணாநிதி?''

 ``நான் எப்போதும் கருத்துக்குத்தான் கார்ட்டூன் போடுவேன்; தனிநபர்களுக்கு எதிராக என் விரல்கள் கார்ட்டூன் தீட்டியதில்லை. எனது கார்ட்டூன்களின் தொகுப்பான ‘மதி கார்ட்டூன்ஸ்’ நூலை, கருணாநிதி வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி, என் நண்பர் ஒருவர் மூலம் அவருக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தேன். படித்துப்பார்த்த கருணாநிதி, `மதி, எங்களைக் கடுமையாக விமர்சித்து கார்ட்டூன் போட்டுள்ளார். இருந்தாலும் ஒரு முதலமைச்சராக அவரின் நூலை வெளியிடுவதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தப் புத்தகத்தில், அட்டைப்படத்திலேயே ‘அழகிரி நாடு, ஸ்டாலின் நாடு’ எனக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இதை நான் வெளியிட்டால் எனது கழக உடன்பிறப்புகள், ‘தலைவரே இதை வெளியிடலாமா?’ என வருத்தப்பட வாய்ப்பு உண்டு’ என்று மறுத்துவிட்டார். அவரின் நேர்மை எனக்குப் பிடித்தது. அதேநேரம் எனது நூல் வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள் முரசொலியில், `வசைபாடும் கார்ட்டூனிஸ்ட் மதிக்கு வாழ்த்துகள்' என ஒரு பெரிய தலையங்கம் வடிவில் கட்டுரை எழுதி, பாராட்டி யிருந்தார். நான் ஒன்று வரைய, அவர் அதற்குப் பதிலடி கொடுக்க என, அவர் ஆக்டிவ்வாக இருக்கும்போது எனக்கும் விளையாடுவதற்கு அவ்வளவு ஆர்வமாக இருந்தது. இப்போது அவற்றை  எல்லாம் மிஸ்பண்றேன். கருணாநிதியை ரொம்பவே மிஸ்பண்றேன்.''

“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

``ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கான தகுதி என்ன?''

`` ‘மினிமம் லைன்ஸ் மேக்ஸிமம் எக்ஸ்பிரஷன்’தான் கார்ட்டூன். ஓவியம், பொது அறிவு, நகைச்சுவை உணர்வு இந்த மூன்றும் நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும். அப்படி அமைந்தால் நல்ல கார்ட்டூனிஸ்ட் ஆகலாம்.'' 

“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”
“கருணாநிதியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

``மீண்டும் கார்டூனிஸ்ட் மதியின் கார்ட்டூன்களை எப்போது எதிர்பார்க்கலாம்?''

``விவாகரத்துப் பெற்ற பிறகு கணவன் - மனைவி இருவரும் சுதந்திரம் பெற்ற உணர்வைப் பெறுவர். அப்படி ஒரு சுதந்திரப் பறவையாக வானத்தில் சிறகடிக்கிறேன். இப்போது இந்தப் பறவையின் பார்வையில் 360 டிகிரியில் பூமி பந்து விரிகிறது. எனக்கான வனத்தில் எனது கூட்டை அமைத்துக்கொள்வேன்.’'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு