#Throwbackstory

நந்தினி - மதுவுக்கு எதிராகத் தொடர்ந்துப் போராடிவரும் 24 வயது களப்போராளி.

#அந்தஒருநாள்

29.12.2013. முதன்முதலாக நள்ளிரவில் சிறைக்குச் சென்ற நாள். ஏழு நாள்கள் ஒரு நியாயமான கோரிக்கைக்காக நான், அப்பா, தங்கை மூவரும் உண்ணாவிரதம் இருந்தோம். அரசிடம் கொஞ்சமாவது

நியாயம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், சிறிதுகூட இரக்கமின்றி மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து என்னை திருச்சி சிறையிலும் அப்பாவை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தனர். அன்று இரவுதான் எக்காரணத்தைக் கொண்டும் இப்போராட்டத்தைக் கைவிடாமல் இறுதிவரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

#முதல்போராட்டம்

2012-ல் மின்வெட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த என் தந்தையைக் கைது செய்ததைக் கண்டித்து நான் தனியாக போராடினேன். அப்போதைய மதுரை கலெக்டர் சகாயம் நேரடியாக போராட்டக்களத்துக்கு வந்து கோரிக்கையை ஏற்றார்.

#அரசியல்

உழைத்துப் பிழைப்பவரை ஏய்த்துப் பிழைப்பதே இன்றைய அரசியல். ஏய்த்துப் பிழைப்பவரையும் உழைக்க வைப்பதே உண்மையான அரசியல்.

#போலீஸ்

அடக்குமுறையால் மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதற்காக பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டதை எந்தவித குறையும் இல்லாமல் செய்பவர்கள்.

#பிடித்த ஆளுமை

23 வயதில் தூக்குமேடை ஏறி இந்தியாவையே அதிர வைத்த பகத்சிங்தான்.

#முடியாதது

சட்டம் படித்து முடித்தாலும் வழக்கறிஞராக என்னால் பணியாற்ற முடியவில்லை. காரணம் என்மீதுள்ள போராட்ட வழக்குகள்.

#மது

அப்பா இல்லாத குழந்தைகளை இந்தச் சமூகத்துக்குப் பரிசளிக்கிறது.

#அடி

வாங்கிய அடிகள்தான் மேலும் போராட உறுதியைத் தந்தது.

#இன்னும் வேண்டும்

தமிழக இளைஞர்கள் சமூக அநீதிக்கு எதிராகத் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

இது இன்னும் அதிகமாக வேண்டும்.

#நன்றி

அநீதிக்கு எதிராகப் போராட கற்றுத்தந்ததோடு உடனிருந்து போராடும் தந்தைக்கு.

#புரியாதபுதிர்

மதுவுக்கு எதிராக ஏன் போராடுகிறீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்பது.

#கடைசியா சொல்றேன்

போதையிலிருந்து வெளியே வந்தால் தமிழக இளைஞர்கள் உலகுக்கே வழிகாட்டக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள்.