உங்கள் குரலைப் பதிவு செய்து, பின்பு அதைக் கேட்டிருக்கிறீர்களா? இதுதான் உங்கள் `ஸ்வீட் வாய்ஸ்' என நினைத்துக்கொண்டிருக்கும் குரலும் அதுவும் ஒரே மாதிரி இருந்திருக்காது. வாயில் இருந்து வருவதாலோ என்னவோ... வாய் துர்நாற்றத்துக்கும் இதே லாஜிக் பொருந்தும்.

பூண்டு சாப்பிடும் மேனேஜர், பல்லே விளக்காத பக்கத்து சீட்டு ஆள், வயிற்றில் பிரச்னையுடன் சுற்றும் நண்பன், புகை பிடித்துவிட்டு பாக்குப் போட்டுக்கொண்டு மீட்டிங் வரும் கொலீக்... இப்படி நாம் சந்திக்கும் பலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கலாம்.

ஏசி அறை மீட்டிங்கிலும், ஒரே குவளையில் தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும் சூழலிலும்... யோசிக்கும்போதே உடல் கூசுகிறதா? ஒரு நிமிஷம்...

உங்கள் வாயில் இருந்தும் உங்களுக்கே தெரியாமல் இந்தத் துர்நாற்றம் வரக்கூடும். இதையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய நண்பர்களும் இல்லையென்றால் இன்னும் சிரமம். இன்னும் சில சந்தேகவாதிகள் இருக்கிறார்கள். எல்லாம் சரியாக இருந்தும், ``நம் வாய்ல ஸ்மெல் வருதோ” என்றே வருந்திக்கொண்டிருப்பார்கள்.

எப்படிக் கண்டறிவது?

ஆள்கள் யாருமில்லாத தனி அறைக்கு வந்துவிடுங்கள். இந்த டெஸ்ட்டுக்கு அதுதான் நல்லது. மணிக்கட்டின் பின்புறத்தில் உங்கள் நாவால் நக்குங்கள். 5-10 நொடிகளில் எச்சில் காய்ந்துவிடும். பின் நுகர்ந்து பாருங்கள். அதுதான் உங்கள் வாயில் இருந்து வெளியாகக்கூடிய சுவாசத்தின் வாசனை.

இதுதவிர, கைகளால் வாயை மூடுவது, நாம் காபி குடித்த டம்ளரை எடுத்து நுகர்வது போன்ற சின்னச் சின்னச செயல்கள் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

உப்பு வைத்து பல் தேய்த்த மனிதர்களை, செயற்கைப் பொருள்கள் பக்கம் திருப்பியது வியாபார உத்தி. இப்போது, அவர்களே வந்து “உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா?” எனக் கேட்கிறார்கள். ஒரு நாளில் இரண்டு முறை பல் தேய்க்க வற்புறுத்துகிறார்கள். எல்லா பற்பசைகளும் 12 மணி நேரம் செயல்படும் என்பதையே அழுத்திச் சொல்கிறார்கள். பற்பசை போதாது என ``மவுத்வாஷும் யூஸ் பண்ணுங்க” என்கிறார்கள். உண்மையில் இவையெல்லாம் தேவையா?

பற்களைச் சுத்தப்படுத்துவது மட்டுமே வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தாது. அதற்கான காரணங்களைக் கண்டறிவது அவசியம்.

சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கலாம். டயட் இருக்கிறேன் எனப் பசியோடே இருப்பவர்களுக்கு அதனால் வாய் துர்நாற்றம் வீசலாம். செரிமானம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் இது இருக்கும். எதனால் துர்நாற்றம் அதிகரிக்கிறது என்பதை மருத்துவ உதவியுடன் கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும். இல்லையேல், மணிக்கு ஒரு தடவை பல் தேய்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

உலகில் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. அதில் நடிகர்கள் தொடங்கி டாப் பணக்காரர்கள் வரை பலரும் அடக்கம். வாய் துர்நாற்றத்தால் பிரேக்அப் ஆனவர்கள் பற்றிய சர்வே எல்லாம் நடந்திருக்கிறது.

வாய் துர்நாற்றத்தால் 55 சதவிகிதம் பேர் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

வாய் துர்நாற்றத்துக்கு நான்கு முக்கியக் காரணங்களை அடுக்குகிறார்கள் மருத்துவர்கள். உலர்ந்த வாய். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். அடுத்து உணவு. கெட்டுப்போகாத, சரியாகச் சமைக்கப்பட்ட உணவுகள் பெரும்பாலும் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்காது. மூன்றாவது, நம் பற்களையும் வாயையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். கடைசியாக, சில நோய்கள் காரணமாகத் துர்நாற்றம் வீசலாம். இந்தப் பட்டியலில் சேராத அந்நியன்கள் புகை பிடிப்பவர்கள். இவர்கள் தங்களைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத வேலி ஒன்றைப் போட்டுக்கொள்கிறார்கள். புகைக்கும் நபர்களை நெருங்கி வர அனைவருமே தயங்குவார்கள்.

நமக்கு இருக்கும் பிரச்னை எதுவென்பதை கண்டறிவது அவசியம். வாய் துர்நாற்றம் என்பது நிரந்தரமானது அல்ல. ஒருநாள் வரலாம்; இன்னொரு நாள் போகலாம். அதனால், இந்த விஷயத்தை `தினமும் என்னைக் கவனி' என எழுதப்பட்டிருக்கும் லாரி டூல் பாக்ஸ் போலத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யோசித்துப் பாருங்கள்... உங்களுக்கு விருப்பமானவரிடம் வாஞ்சையுடன் “ஐ லவ்...” என்னும் போது அவரது கை மூக்கைப் பொத்தினால்? சொற்களைச் சுத்தமாகப் பேசும்முன் பற்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். ``வார்த்தை வரும் பின்னே... வாசனை வரும் முன்னே'' என்பதை மறந்து விடாதீர்கள்.

- பெர்சனல் பேசுவோம்

* குறைந்தது நான்கு மாதத்துக்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

* காலையும் இரவும் பிரஷ் செய்வது அவசியம். மதிய உணவுக்குப் பிறகும், முடிந்தால் பிரஷ் செய்யலாம்.

* நாக்கில் படியும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய டங் வைப்பர்களைப் பயன்படுத்தலாம்.

* ஏலக்காய், வெந்தய விதைகள் மெல்வது நல் வாசம் தரும்.

* அவகோடா ஜூஸ் குடிப்பது குடலைச் சுத்தப்படுத்தும்.

* சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது பலவிதமான குடல் மற்றும் வயிற்று உபாதைகளில் இருந்து காப்பாற்றும்