``கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மற்றும் தனியார் பள்ளி மாணவர்களைவிட எந்த வகையிலும் திறமையில் சளைச்சவங்க இல்ல. ஆனா, ஆங்கிலம்தான் அவங்களோட பிரச்னை. அதை உடைச்சிட்டா, இங்க படிக்கிற பிள்ளைங்களோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அடுத்ததா, தரமான வகுப்பறைச் சூழலை உருவாக்கணும்னு நினைச்சேன். காரணம், இந்த ரெண்டு அம்சங்களும்தான் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கிப் போகக் காரணம். அதெல்லாம் அரசுப் பள்ளியில் கிடைச்சுட்டா, பெற்றோரின் எண்ணம் மாறும்னு நம்பினேன்; மாறியிருக்கு.''

அரசுப் பள்ளி ஆசிரியை அன்னபூர்ணாவின் வார்த்தைகள் அனைத்துமே நம்பிக்கை கீற்றுகள்.

விழுப்புரம் மாவட்டம் கந்தாடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மூன்றாம் வகுப்பறை. `Welcome. sir. We are very happy to welcome you to our classroom.'' என ஆங்கிலத்தில் பேசி ஆச்சர்ய வரவேற்பு தருகிறார்கள். இப்படித்தான் இருக்கும் அரசுப் பள்ளி என்கிற நம்முடைய அத்தனை எண்ணங்ளும் அங்கே தவிடுபொடியாகிறது. தனி ஒருத்தியாக மாற்றி அமைத்திருக்கிறார் அன்னபூர்ணா.
மூன்றாம் வகுப்பு ஆசிரியையான இவர், டேப்லெட், ஸ்மார்ட் போர்டு என்று தன் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளியை மிஞ்சும் ஸ்மார்ட் க்ளாஸ்ரூமை உருவாக்கி இருக்கிறார். ஆடியோ விஷுவல் வழியாக ஆங்கிலப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார். இதையெல்லாம் அரசு உதவியோடுதான் செய்வேன் எனக் காத்திருக்காமல் அர்ப்பணிப்போடு தன் சொந்த செலவிலேயே செய்திருக்கிறார் அன்னபூர்ணா.

``என்னோட அப்பா மோகன், டாக்டர். எந்தச் சூழல்லயும் சமரசம் செஞ்சுக்காம, கடைசி வரைக்கும் ஏழைகளுக்கு ஃப்ரீ சர்வீஸ் கொடுத்தார். அப்பா மாதிரியே நானும் டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா,
0.5 கட் ஆஃப் மார்க் கம்மியானதால சீட் மிஸ் ஆகிடுச்சு. பிறகு, அப்பா சொன்னதைக் கேட்டு பி.பி.ஏ படிச்சிட்டு இருந்த சமயத்துல எனக்கு அரசுப் பள்ளி வேலை கிடைச்சது.

2004-ம் வருஷம் இப்பள்ளியில் முதன்முதலா cயா சேர்ந்த நாள்லயே, அதிர்ச்சியடைந்தேன். அப்போ முதலாம் வகுப்பு ஆசிரியை நான். தையல் பிரிஞ்ச சட்டை, மூக்கில் ஒழுகும் சளினு, எனக்கு சௌகர்யமில்லாத ஒரு சூழலைத் தந்தாங்க. சேட்டையில் என்னைத் திணற வெச்சாங்க.

மறுநாள், `ஸ்கூலுக்குப் போகமாட்டேன்'னு அப்பா, அம்மாகிட்ட ஒரே பிடிவாதம், சண்டை, அழுகை. `புனிதமான ஆசிரியர் பணியை உன்னோட செய்கையால அவமதிக்காத'னு அவங்க சமாதானப்படுத்த, வேண்டா வெறுப்பாதான் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சேன்'' என்பவருக்கு, குருவின் ஸ்தானத்தைப் புரியவைத்தவர்கள்... அந்த மழலைகள்தான் என்றார் நெகிழ்ச்சியாக...

``பிள்ளைங்களுக்குக் கற்றுக்கொடுக்கறதுக்காகவே நான் முறையான ஆங்கிலம் கத்துக்கிட்டேன்.

நாள் முழுக்க வகுப்பறையில் குழந்தைங்ககிட்ட ஆங்கிலத்தில்தான் பேசுவேன். என் பிள்ளைங்க சிறப்பா ஆங்கிலம் பேசுறதைப் பார்த்து, சில நல்ல உள்ளங்கள் வகுப்புக்குச் சின்னச் சின்ன நிதி உதவி செஞ்சாங்க.

அப்போதான், யார் யாரோ பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாதுனு தோணுச்சு.

வகுப்பறையில் செளகர்யமா படிக்க டேபிள், சேர் செட் வாங்கினேன். அடுத்து தனியார் பள்ளிகள் மாதிரி ஸ்மார்ட் கிளாஸ்ரூம் அமைக்க நாலு டேப்லெட், ஸ்மார்ட் போர்டு, அபாகஸ் எல்லாம் வாங்கினேன். இந்தச் செலவுகளுக்காக என்னோட நகைகளை விற்க வேண்டியதா இருந்தது. இந்த மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுத்துட்டா, அந்தக் குடும்பங்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் முன்னேறிடுமேன்னு நினைச்சப்போ, நான் செஞ்சது ஒரு பெரிய விஷயமாவே தெரியல'' எனப் புன்னகையோடு சொல்லும் அன்னப்பூர்ணா, ஒவ்வொரு ஆங்கிலப் பாடத்தையும் நாடக வடிவில்தான் சொல்லிக்கொடுக்கிறார்.

``ஒன்றாம் வகுப்பு ஆசிரியையா சேர்ந்த நான், இப்போது மூன்றாம் வகுப்பு ஆசிரியை. இடைப்பட்ட 13 வருடங்களில், கரஸ்ல பி.சி.ஏ., எம்.ஏ.(ஆங்கிலம்), எம்.எஸ்ஸி.(கணிதம்), பி.எட், எம்.பி.ஏ முடிச்சிருக்கேன். என் பிள்ளைங்களுக்காக, அவங்க எதிர்காலத்துக்கு வழிகாட்ட என் அறிவை விசாலப்படுத்திட்டே இருக்க நினைக்கிறேன். நாளைக்கு இவங்களை எல்லாம் பட்டதாரிகளா, பெரிய பதவிகளில் பார்க்கும்போது 'டீச்சர்...'னு ஓடி வருவாங்கள்ல... அதை நினைக்கும்போது இந்த வாழ்க்கையை ரொம்பவே அர்த்தமுள்ளதா உணர்றேன்!"

தாய்மையுடன் சொல்லும் டீச்சருக்கு புன்னகைகளை பரிசளிக்கிறார்கள் மாணவர்கள்!

"எட்டாயிரம் ஸ்லைடுகள் தயாரிச்சேன்!"

மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தர அன்னப்பூர்ணா எடுத்த சிடி முயற்சி, அசத்தல். ``ஆங்கிலத்தில் எழுத்துக்களை மனப்பாடமா சொல்லித் தர்றதைவிட, அந்த எழுத்துக்களின் ஒலி (phonetics) அடிப்படையிலும், வார்த்தைகளை டிரான்ஸ்கிரிப்ஷனை (transcription) பயன்படுத்தியும் சொல்லிக்கொடுத்துட்டா பிழையில்லாம, பிரமாதமா ஆங்கிலம் பேசலாம். அதனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான இரண்டு, மூன்றாம் டேர்ம் ஆங்கிலப் பாடப் புத்தகங்களில் உள்ள வார்த்தைகளை, ஒன்றரை வருஷ உழைப்பில், எட்டாயிரம் ஸ்லைடுகளாக, 75 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிச்சேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் பிரிட்டிஷ் இங்கிலிஷ் உச்சரிப்பு, தமிழ் அர்த்தம், புகைப்படம்னு உருவாக்கின அந்த சிடியை, பிள்ளைகளே ஆப்பரேட் செஞ்சு, தினமும் பத்து புது வார்த்தைகளை கத்துக்குறாங்க. தவிர மற்ற பள்ளி மாணவர்களுக்கும் இதைக் கொடுக்கிறோம்'' என்கிறார்.