புரட்டுத் தலைவர்கள் அதிகமாகி வரும் இந்த நாட்டில் புரட்சித் தலைவர்களும் அதிகமாகி வருகிறார்கள்.

தினகரன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனி்சாமி, வேலுமணி, தங்கமணி... என்று கடந்த வாரத்தில் செய்திகளை பலரும் ஆக்கிரமித்து வந்ததுதான் பலருக்கும் நினைவில் நிற்கும். ஊடகங்கள் மட்டுமல்ல மக்களின் செய்திப் பசிக்கும் தீனி போட்டவர்கள் இவர்கள்.

ஆட்சி அப்பத்தைப் பங்கு பிரிப்பதில் இந்த அரசியல்வாதிகள் மும்முரமாக இருந்த நேரத்தில் தான்...அய்யாக்கண்ணு, ஈஸ்வரி, சீதா, ஆகாஷ்... எனப் பலரும் இந்தச் சமூகத்துக்காகப் போராடிக் கொண்டு இருந்தார்கள்.

அய்யாக்கண்ணு முதல் ஆகாஷ் வரை, ஈஸ்வரி முதல் சீதா வரை போராடியது தங்களுக்காகவோ தங்கள் குடும்பத்துக் காகவோ மட்டுமல்ல. தங்கள் உறவுகளுக்காகவோ ஊருக்காகவோ அல்ல; இந்த நாட்டுக்காக. உண்மையான புதிய ஜனநாயகப் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கும் புரட்சித் தலைவர்கள் இவர்கள். புரட்சித் தலைவிகள் இவர்கள்.

மானம் மனிதனுக்கு அழகு. மானம் போனபின் வாழ்வது வீண். அந்த தன்மானத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் டெல்லி வீதிகளில் விவசாயிகள் கோவணத்தோடு கூடினார்கள். பெண் விவசாயிகள் சேலையைக் களைந்து, பாவாடையைக் கட்டிக் கொண்டு போராடினார்கள். உட்கார்ந்து பிச்சை எடுத்தார்கள். படுத்து பிச்சை எடுத்தார்கள். எலிக்கறி தின்றார்கள். மண்டை ஓடுகளை மாலைகளாக்கி நடந்தார்கள். இவ்வளவுக்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு. கட்டியிருந்த கோவணத்தையும் தூக்கி வீசி விட்டு தோலாடை மட்டுமே தாங்கி டெல்லி தலை நகரில் ஓடினார்கள்.

இவர்கள் என்ன பைத்தியக்காரர்களா? மனநிலை பிறழ்ந்துவிட்டதா? ஆம்... இவர்களை பைத்தியம் ஆக்கியது அரசும் ஆட்சியும் அதிகாரமும். ``இந்தத் தொழிலை நம்பி இருக்காதீர்கள்'' என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே மன்மோகன் சிங் சொன்னார். மீறி விவசாயம் செய்த பைத்தியக்காரர்கள் இவர்கள். கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்து 51 ஆயிரத்து 200 கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாகக் கொடுத்துள்ளது நரேந்திர மோடியின் அரசு. அப்படி ஒரு நிறுவனத்தை நடத்தி சலுகை பெறத் தெரியாமல் விவசாயம் பார்த்த பைத்தியக்காரர்கள் இவர்கள்.

``மழை இல்லை... வறட்சி. எதை எல்லாம் அடகு வைத்தோமோ அது எதையும் மீட்க முடியவில்லை. விவசாயக் குடும்பங்கள் அடகு வைத்த தாலியே ஏலம் போய்விட்டது. இனிமேல் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர, வேறு வழியில்லை'' என்று சொல்லிக் கதறுகிறார் அய்யாக்கண்ணு. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்தால்தான் விவசாயி வாழ்வான் என்பதைவிட விவசாயம் வாழும். விவசாயி சாகட்டும் என்று விட்டால் விவசாயம் செத்துப் போகும். இந்தக் கடன்களை ரத்து செய்தால் மட்டும்தான் அடுத்த ஆண்டும் அவன் இந்தத் தொழிலில் இருப்பான்.

கடந்த 11 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 47 லட்சத்து 11 ஆயிரத்து 519 கோடி வரிச்சலுகை கொடுத்துள்ள மத்திய அரசாங்கம், விவசாயிகளின் இன்றைய 72 ஆயிரம் கோடியை ரத்துசெய்யக் கூடாதா? வி.பி.சிங், மன்மோகன் சிங் காலத்தில் இப்படித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள முன்னுதாரணம் இருக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று அழைக்கப்படும் இன்றைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 30 ஆயிரத்து 729 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளாரே? ஒரு மாநிலம் தாங்கும் போது இந்தியா தாங்காதா? உ.பி. தேர்தலுக்கான ஸ்டன்ட் என்றால் இந்தியா தேர்தலுக்காகத் தயாராகும்போது தள்ளுபடி செய்வார்களா?

`ஐ நோ அய்யாக்கண்ணு' என்கிறார் ஹெச்.ராஜா. `ஐ நோ நரேந்திர மோடி' என்பதை இந்தியாவுக்கு காட்டிய மகத்தான மனிதர்களில் ஒருவர் அய்யாக்கண்ணு. திரௌபதியைத் துகிலுரியும்போது துரியோதனனின் நிர்வாணம் தெரிவதுபோல தமிழக விவசாயி நிர்வாணமாக ஓடும்போது இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் நிர்வாணம் தெரிகிறது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அய்யாக்கண்ணு கடன் வாங்கவில்லை. கூட்டுறவு வங்கியில்தான் அவர் கடன் இருக்கிறது. மேலும், இது கடன் ரத்துக்கான போராட்டம் மட்டுமே அல்ல. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளின் மூன்று கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வேண்டும் என்பது முதல் கோரிக்கை. கர்நாடகாவில் ஏழு மாவட்டங்கள் மட்டும்தான் வறட்சி. அங்கு 7,000 கோடி ரூபாய் நிவாரணம் தருகிறது மோடி அரசு. இங்கே 31 மாவட்டங்களும் வறட்சி. 2,000 கோடி ரூபாய்தான் தருகிறது. கர்நாடகாவுக்கு தேர்தல் வருகிறது, அங்கு பிஜேபிக்கு உயிர் இருக்கிறது. இங்கே இரண்டும் இல்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதும் நமது விவசாயிகளின் கோரிக்கை. கர்நாடகாவுக்கு எதிரான ஒரு செயலை பி.ஜே.பி. செய்யுமா? இப்படிச் சொல்ல உச்ச நீதிமன்றத்துக்கே அதிகாரம் கிடையாது என்று சொன்ன இரும்பு மனிதர்களாச்சே அவர்கள்? இதற்காகத்தான் போராடினார்கள். கடைசி வரை அசைந்து கொடுக்க வில்லை. கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆயிரம் பேர் கிளம்பிப் போய் தூக்கு மாட்டிச் செத்தாலும் மத்திய அரசு திரும்பிப் பார்க்காது. இதைவிட பெரிய சாவுகளையே பார்த்தவர்கள் அவர்கள்.

ஆனால், அய்யாக்கண்ணுவின் வெற்றி என்பது - தேதி குறித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கை மனுக்களோடு போய் நின்று பல்காட்டுவது போன்றவை இனி பயன்படாது என்பதை மக்கள் மனதில் விதைத்ததில்தான் அடங்கி இருக்கிறது. உனக்கான கோரிக்கையை ஊருக்குச் சொல்ல, போராட எந்தத் தலைவனும் தேவதூதனும் இனி வரமாட்டான். உனக்கான கோரிக்கைக்காக நீயே வீதிக்கு வா. டெல்லிக்குப் போ. அங்கேயே கிட. ஒரு இந்தியன் என்று மதிக்கப் பட்டால் நீ கவனிக்கப்படுவாய். இல்லாவிட்டால் அங்கேயே மரணி. உனது மரணம் உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் என்பதுதான் அரசியல் அனுபவப் பாடமாக ஆகிறது.

இத்தகைய காரியத்தில்தான் ஈஸ்வரிகள், சீதாக்கள், ஆகாஷ்கள் இறங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி என்ற ஒருவர் இருக்கிறார். அவருக்கு இரண்டு வேளையும், இரண்டே இரண்டு வேலைகள்தான். ஒன்று தனது நாற்காலியைக் காப்பாற்றுவது. இன்னொன்று ஒயின்ஷாப் திறக்க ஊருக்குள் இடம் பார்ப்பது. இதைத் தவிர, வேறு எதுவும் முக்கியம் இல்லை.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதற்காகப் போராடிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸும், அக்கட்சியின் வழக்கறிஞர் பாலுவும் பாராட்டுக்குரியவர்கள். எத்தனையோ கெட்ட பேருக்கு மத்தியில் ஒரு உருப்படியான நல்ல பெயரை அக்கட்சி வாங்கக் காரணமானது இப்பிரச்னை. நெடுஞ்சாலையில் இருக்கும் கடையை மூடினால் வருமானம் பாதிக்குமே என்று பதறிய எடப்பாடி பழனிசாமி அரசு, `அம்மா வழியில்' யோசித்தது. நெடுஞ்சாலையில் மூடப்படும் கடைகளை ஊருக்குள் திறக்கிறது. `படிப்படியாக மூடப்படும்' என்று ஜெயலலிதா சொன்னார். இதுவே இவர்களது நோக்கமாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டு பாதிக் கடைகளை மூடித் தொலைக்க வேண்டியதுதானே. டாஸ்மாக் வருமானம் போகும். டாஸ்மாக் மூலமாக தங்களுக்கு வரும் வருமானமும் போய் விடுமே? அதனால் ஊருக்குள் இடம் பார்க்கிறார்கள்.

திருப்பூர் சாமளாபுரம் மதுக்கடை மூடப் பட்டது. உடனே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோட்டத்து அய்யன் கோயிலுக்கு செல்லும் வழியில் மதுக்கடை திறக்கப்பட்டது. விவசாய நிலத்தில் கடையைத் திறந்தார்கள். இந்தத் தண்ணி ஓடட்டும் என்று நினைத்தது மாவட்ட நிர்வாகம். கடையைத் திறக்கக் கூடாது என்று மக்கள் மறியல் செய்தார்கள். அந்த வழியாக சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் வந்தார். `நல்ல கோரிக்கைதானே நானும் உட்காருகிறேன்' என்று நடித்தார். ``கடை திறக்கப்படாது'' என்றார்கள் அதிகாரிகள். உடனே கனகராஜ் கிளம்பினார். ``எழுதிக் கொடுத்தால்தான் கலைவோம்'' என்றார்கள் மக்கள்.

காவல்துறையை ஏவல்துறை ஆக்கினார்கள். காக்கி ரவுடி, கன்னத்தில் அடித்ததில் ஈஸ்வரியின் காது கலங்கிவிட்டது. ஆனாலும், இன்னமும் போராட்டக்குணம் மாறாமல் இருக்கிறார் ஈஸ்வரி.

சேலம் மாவட்ட மேச்சேரி டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதை எரகுண்டப்பட்டி காட்டு வளவுக்குள் மாற்றுகிறார்கள். அங்கன்வாடியை எடுத்துவிட்டு கடை வரப்போகிறது. இதை எதிர்த்து மக்கள் போராடினார்கள். கேள்விப்பட்டு மக்களை சமாதானம் செய்ய மேட்டூர் தாசில்தார் வீரப்பன் வருகிறார். தனது இரண்டு பிள்ளைகளோடு வந்த சீதா, வீரப்பனின் காலில் விழுகிறார். `குடிக்கு என் தந்தையைப் பறிகொடுத்தேன். கஷ்டப்பட்டு என் கணவரை இப்போதுதான் மீட்டுள்ளேன். மறுபடியும் கடையைத் திறந்து குடிக்க வைத்து விடாதீர்கள்' என்று கதறுகிறார் சீதா. குன்றத்தூர் பெண்கள் இப்படியெல்லாம் இல்லை. கடப்பாரை, சுத்தியல் கொண்டுவந்து கடையையே உடைத்து விட்டார்கள்.

ஆகாஷுக்கு ஏழு வயது, இரண்டாம் வகுப்பு முடித்து மூன்றாம் வகுப்பு போகப்போகிறான். `குடியை விடு; படிக்க விடு' என்ற பதாகையைத் தாங்கி டாஸ்மாக் முன்னால் உட்கார்ந்தான். பாடப்புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். `இங்க எல்லாம் உட்கார்ந்து படிக்கக் கூடாது' என்றது காக்கி. `கண்ட இடத்துல கடையைத் திறப்பீங்க. கண்ட இடத்துல உட்கார்ந்து படிக்கக் கூடாதா?' என்று கேட்டான் ஆகாஷ். இந்தக் கேள்வியைக் காவல்துறை அதிகாரியோ, மாவட்ட ஆட்சியரோ முதலமைச்சரிடம் போய்க் கேட்க முடியுமா?

ஆனால், ஒரு நாள் வரும்.. கோட்டைக்கு முன் ஆகாஷ்கள் திரளும் காலம்!