`டூரிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் போர்டு போட்டுக்கொண்டு பேருந்துகள் அடிக்கடி கடப்பதை முன்பெல்லாம் பார்த்திருப்போம். நடுத்தர மக்கள், ஏழை மக்கள் எனப் பொருளாதாரப் பாகுபாடு இல்லாமல் கூடி, குடும்பத்துடன் சென்றதுதான் இந்த டூரிஸ்ட் பஸ்கள். அப்போதெல்லாம் குறைந்த விலையில் பேருந்துப் பயணம், பேருந்தை ஓரங்கட்டி சமையல், ஆற்றிலோ வாய்க்காலிலோ குளியல், ரொம்ப முடியவில்லை என்றால் கல்யாண மண்டபத்தில் தூக்கம்... என டூரிஸம் தமிழகத்தில் செழிப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அதனால், நமக்கு டிராவலோ டூரோ புதிது கிடையாது.

ஆனால் இப்போது, டிராவல் விதிகள் மாறிவிட்டன. திட்டமிடுதலிலிருந்து வாகனம், தங்கும் இடம், சுற்றிப் பார்த்தல்... என அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டன. ஏராளமான இணையதளங்கள், ஆண்ட்ராய்டு ஆப்கள், ஃபோரம்கள் என, தகவல்கள் கொள்ளைக்கொள்ளையாகச் சிதறிக் கிடக்கின்றன.

திட்டமிடுதலில் ஏற்படும் சிறிய கோளாறு அல்லது சொகுசுக் குறைவைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. `ஸ்ட்ரெஸ், டென்ஷனைக் குறைக்க டிராவல் செல்வோம்' என்று போய், அதிலேயே ஒரு குறைபாடு வந்தால் டென்ஷன் ஏறிவிடும்.

இன்றைய தேதியில், டென்ஷனே இல்லாமல் நிம்மதியாக ஒரு ஜாலிப் பயணத்தைத் திட்டமிடுவது எப்படி?

டூர் போவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, திட்டமிட்டப் பயணம். இன்னொன்று, திட்டமிடாதப் பயணம்.

திட்டமிடாதப் பயணம்தான் சாகசங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. ஆனால், இது எல்லோருக்கும் சரிப்படாது. தனிநபருக்கோ அல்லது இரண்டு நபர்களுக்கோ ஏற்றது; அசௌகர்யங்களை எல்லாம் அனுபவங்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், கொண்டாட்டமான மனநிலையும் உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்பச் சுற்றுலாதான் உங்கள் நோக்கம் என்றால், இன்ச் பை இன்ச்சாக உங்கள் பயணத்தை ஸ்கெட்ச் போட்டுத் திட்டமிட வேண்டும்.

எப்படி?

திட்டத்தை வீட்டிலிருந்து தொடங்குவது முதல் வீட்டுக்குத் திரும்பும் வரை என வகுக்க வேண்டும். எந்த மாதிரியான இடத்துக்குப் போக விருப்பம்? பீச், மலைப்பிரதேசம், பாலைவனம், ஆன்மிகப்பிரதேசம், பனிமலை, அமைதியான சுற்றுப்பயணம், போட்ஹவுஸ், க்ரூஸ் என விதவிதமான சுற்றுலா வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் எது உங்களுடைய இலக்கு என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். இலக்கு என்பது, ஓர் இடம் அல்ல; எத்தனை ஊர்களில் எத்தனை இடங்களைப் பார்க்கப்போகிறோம் என்பதே.

அடுத்து நம் இலக்கைப் பொறுத்து, எத்தனை நாள் என முடிவு செய்துகொள்ள வேண்டும்.

திட்டமிடும்போது பேஸ் கேம்ப்பாக ஓர் இடத்தை வைத்துக்கொண்டு, மற்ற இடங்களுக்குச் செல்லும் தூரத்தைக் குறைவாக இருப்பதுபோல திட்டமிட வேண்டும். உதாரணமாக, ஊட்டிதான் நமது சுற்றுலாத்தலம் என முடிவாகிவிட்டால், ஊட்டி - பண்டிப்பூர் - முதுமலை - அவலாஞ்சி , சைலன்ட் வேலி - க்ளன் மார்கன் - பைக்காரா - குன்னூர் - கோத்தகிரி - மஞ்சூர் எனத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ஊட்டி - கொடைக்கானல் - குமுளி எனத் திட்டமிடுதல் கூடாது. இது அலைச்சலையே கொடுக்கும்.

அடுத்து பயணத் திட்டம். `பேருந்தில் மட்டுமே பயணிக்க இருக்கிறோமா அல்லது ரயிலில் சென்று பேருந்து மூலம் இலக்கை அடையப்போகிறோமா அல்லது விமானத்தில் இறங்கி டாக்ஸி புக்பண்ண வேண்டுமா?' என்பதை, அங்கு முன்பே சென்று வந்தவர்களிடம் விசாரித்துத் திட்டமிட வேண்டும். எங்கெல்லாம் முன்பதிவு செய்ய முடியுமோ, முடிந்தவரை 90 சதவிகித ரிசர்வேஷன்களை முடித்துவிட்டு பயணத்துக்குக் கிளம்புவது, பயணத்தை முழுமையாக ரசிக்க உதவும். இல்லையென்றால், செல்லும் இடங்களில் எல்லாம் பஸ்ஸைப் பிடிக்கவும் டாக்ஸிக்காகக் காத்திருக்கவுமாகப் பொழுது கழியும்.

விமானம் மூலமாகப் பயணம்யெனில், ஆன்லைனில் டிக்கெட்டுகள் புக் செய்துகொள்வது நல்லது. மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் புக் செய்தால், நிறையவே பணம் மிச்சமாகும். 5,000 ரூபாய் டிக்கெட்கள் 2,000 ரூபாய்க்கே கிடைக்கும்.

பேருந்து, ரயில், விமான டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவுசெய்ய, makemytrip.com, cleartrip.com, yatra.com, Redbus.in, goibibo, musafir போன்ற இணையதளங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்கள் இருக்கின்றன. இந்தத் தளங்களில் டிக்கெட்டுக்கான பயணத்தொகையைப் பொறுமையாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பெரும்பாலான நகரங்களில் வாடகைக்கு செல்ஃப் டிரைவ் கார்கள் கிடைக்கின்றன. `zoom car' என்ற நிறுவனம் இந்த வசதியை அளிக்கிறது. நீங்கள் இறங்கும் ரயில்நிலையத்திலோ/விமானநிலையத்திலோ அவர்கள் காரை உங்களிடம் ஒப்படைப்பார்கள். புல்லட் உள்பட பைக்குகளும் வாடகைக்குக் கிடைக்கின்றன.

அடுத்து, தங்கும் இடம். ஓர் இடத்துக்குப் போய், அங்கே கண்களில் தென்படும் லோக்கல் ஹோட்டல்களில் விலை பேசுவதைவிட, முன்கூட்டியே ஏதேனும் நல்ல ஹோட்டல் ஒன்றில் பேசிவைத்து முன்பதிவு செய்துகொள்வது... வசதி, சிக்கனம் மற்றும் பாதுகாப்பு. நமக்கு ஏற்ற தங்கும் இடங்களைக் கண்டுபிடிப்பதற்கும் வெப்சைட்கள் மற்றும் ஆப்கள் வந்துவிட்டன. agoda.com, makemytrip.com, booking.com, oyorooms.com போன்ற வெப்சைட்டுகள் உள்ளன. airbnb.co.in என்ற வெப்சைட் ஹோம் ஸ்டே, ஹாஸ்டல், குரூப் ஸ்டே, பேயிங் கெஸ்ட் போன்ற தங்கும் வசதிகளை அளிக்கிறது. couchsurfing.com போன்ற வெப்சைட் மூலம் எவரையேனும் நட்பாக்கிக்கொண்டு, அவர்கள் வீட்டில் இலவசமாகக்கூடத் தங்கலாம்.

பயணத்தின் முக்கிய எதிரி லக்கேஜ். அதைக் கூடுமானவரை குறைக்கவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான உடைகளையும் பொருள்களையும் எடுத்துச் செல்லவும். சாமான் அண்டா குண்டா என, சூட்கேஸில் இடம் இருக்கிறது என்பதற்காகக் கண்டதையும் போட்டு ரொப்பிக்கொள்ளக் கூடாது. மிகக்குறைந்த அளவில் லக்கேஜ் எடுத்துச் சென்றால்தான், போகும் இடங்களில் கிடைக்கும் அற்புதமான பொருள்களை வாங்கிவர முடியும்.

தேவையான பணத்தைக் கையிருப்பாக வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு முறையும் ஏடிஎம்-முக்கு ஓடிக்கொண்டிருக்கக் கூடாது. சில இடங்களில் ஏடிஎம் இருக்காது. உடன் வருபவர்களிடமும் சிறிது பணத்தைக் கையில் கொடுத்துவைக்கவும்.

உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். விதவிதமான உணவைப் பார்த்ததும் வெறிகொண்டு களமாடக் கூடாது. அளவாகச் சாப்பிட வேண்டும். முக்கியமாக வறுத்தது, பொரித்தது, பல்வேறுவிதமான வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் அசைவ உணவுகளுக்கு மயங்காதீர்கள். எண்ணெய்ப் பதார்த்தங்கள் அறவே வேண்டாம். இவை வாந்தி, வயிற்றுப்போக்கு என உங்களைப் படுத்தி எடுத்துவிடும்.

`இன்று இத்தனை இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும்' என்று வெறிகொண்டு திரியாதீர்கள். சுற்றுலாவில் காணவேண்டிய இடங்கள் என்று அரசு சில இடங்களைக் குறித்து வைத்திருக்கும். அந்த இடங்களைக் காணச் செல்கையில் வழியில் அதைவிட அற்புதமான இடங்களைக் கண்டு கொண்டேதான் செல்வீர்கள். அதனால், எண்ணிக்கை முக்கியம் அல்ல; அனுபவம்தான் முக்கியம்.

போட்டோ எடுக்க வேண்டும்தான். ஆனால், அதையே பிழைப்பாகக்கொண்டு சுற்றுலா அனுபவத்தைத் தவறவிடாதீர்கள். கேமராவை மறந்துவிட்டு, அந்தந்த இடங்களை ரசித்து சிறிது நேரம் மயங்கிக்கிடக்கலாம்.

சுற்றுலா செல்கையில் வேறு இடம், வேறு மொழி, வேறு மனிதர்கள் என்பதை மனதில்கொண்டு `வீரம் முக்கியம் அல்ல... விவேகம்தான் முக்கியம்' என்பதை உணர வேண்டும். எப்போதும் முகத்தில் புன்னகையையும் அகத்தில் அன்பையும் வரித்துக்கொண்டால், பற்றியெரியும் எந்த நாட்டுக்கும் சென்று பிரச்னை இல்லாமல் ஊர் திரும்பலாம்.

கடைசியாகப் பொது இடங்களில் கணவன் - மனைவி சண்டையிடுவதைத் தவிர்க்கவும். மொபைல் நோட்ஸில் குறிப்பு எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பி குஸ்தி போட்டுக்கொள்ளுங்கள்.

தங்கும் இடத்துக்கு ஆன்லைன் மட்டும் பத்தாது. அற்புதமான சில ஹெரிடேஜ் தலங்கள், அரண்மனைகள் இன்னும் ஆன்லைனுக்குள் வரவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு என டூரிஸம் இன்ஃபர்மேஷன் சென்டர் வைத்திருக்கிறது. அங்கு நேரில் சென்று விசாரித்தால், எக்ஸ்க்ளூஸிவான தகவல்கள் கிடைக்கும். அவர்களே தங்கும் இடம், உள்ளூர் சுற்றுலா போன்றவற்றை அரசு நிர்ணயித்த விலையில் ஏற்பாடு செய்துகொடுப்பார்கள். ஒவ்வொரு மாநிலமும் தங்கும் விடுதிகள் வைத்திருக்கிறது. நியாயமான விலையில் இங்கே தங்கலாம்.

சுற்றுலா செல்கையில் கவனிக்கவேண்டிய முக்கியமான இரண்டு வெப்சைட்: tripadvisor.com, lonelyplanet.com இந்த இரண்டு வெப்சைட்டுகள் மூலம் போக்குவரத்து, ஹோட்டல், ரெஸ்டாரென்ட், சுற்றுலாத்தலங்கள்... என அனைத்து ஏரியாக்கள் பற்றியும் விரிவான ஓர் அறிமுகம் கிடைக்கும். இதுவரை சென்று வந்த பயனாளர்கள், தங்கள் அனுபவங்களை எழுதியிருப்பார்கள். ஓர் அறை எடுக்கும் முன்னோ, ரெஸ்டாரென்ட் செல்லும் முன்போ இவர்கள் எழுதிய விமர்சனங்களைப் படித்துப் பார்த்து முடிவெடுக்கலாம்.