``தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில்
சேர விரும்பும் தமிழக மாணவர்கள் கட்டாயம் `நீட்’ தேர்வை எழுதியாக வேண்டும்.

மே 7-ம் தேதி, நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 88 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உள்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் `நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வு முடிவுகள், ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும்.

ஆனால், இந்தியிலோ ஆங்கிலத்திலோ இருப்பதைப்போல தமிழில் நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களோ புத்தகங்களோ இல்லை. தவிர, பயிற்சி மையங்களின் கட்டணங்கள் அடித்தட்டு, நடுத்தர மாணவர்கள் சேரும் வகையிலும் இல்லை. ``நீட் தேர்வைப் பொறுத்தவரை, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) பரிந்துரை செய்துள்ள ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்படும். `சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்களைப் படித்தால் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மை அல்ல. தமிழக அரசின் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத்திட்டங்கள், தர அளவில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைவிட குறைந்ததல்ல. NCERT-யின் தேசியக் கலைத் திட்ட வடிவமைப்பு அடிப்படையிலேயே தமிழக அரசுப் பாடத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் படித்தவர்களும் இந்தத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.

இருக்கும் அவகாசத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடும் ஈடுபாட்டோடும் படித்தால், நீட் தேர்வில் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கனவை நனவாக்கலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார் பள்ளிக் கல்வித் துறையின் உயர்கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளர் முனைவர் சூரியகுமார்.

“இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களிலிருந்து பாடத்துக்கு 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண். தவறான ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு, மருத்துவப் படிப்பில் சேர குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் வெளியிடப்படும். தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பிறகு, மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் மருத்துவப் படிப்பில் சேர, தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும். அந்தத் தகுதி மதிப்பெண்ணுக்குக் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மேனேஜ்மென்ட் கோட்டாவில் கூட மருத்துப் படிப்பில் சேர முடியாது.

இந்தத் தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க, மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறது. இந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரின் மதிப்பெண் எவ்வளவோ, அதில் பாதிதான் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, மொத்தம் உள்ள 720 மதிப்பெண்ணில் முதல் மதிப்பெண் பெற்றவர் 320 மதிப் பெண்ணைப் பெற்றிருந்தால், தகுதி மதிப்பெண் 160 என நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு தகுதி மதிப்பெண் வெறும் 145தான். எனவே, தகுதி மதிப்பெண்ணை நினைத்து மலைப்படையத் தேவையில்லை. மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்ப்பது மிகவும் அவசியம். பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக `மாக் டெஸ்ட்’ நடத்துகின்றன. பாடவாரியாக, தலைப்பு வாரியாகக்கூட ஆன்லைன் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்கிறார் சூரியகுமார்.

“இயற்பியல், வேதியியல் பாடங்களில் கணக்கிடுதல் மற்றும் வேதிவினைகள் சார்ந்த கேள்விகள் இருக்கும். அவற்றுக்கு விடையளிக்க, கூடுதல் பயிற்சி தேவை. உயிரியல் பாடத்தில், கணக்கிடுதல், வினைகள் சார்ந்த கடினமான கேள்விகள் கிடையாது. அதனால் உயிரியல் பாடத்தில் அதிகக் கவனம் செலுத்திப் படித்தால், அதிக மதிப்பெண்ணைப் பெற முடியும். ப்ளஸ் 2 பாடங்களை இப்போது தான் படித்து முடித்திருப்பீர்கள். அதனால், ப்ளஸ் 1 பாடங்களை படிப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களில் இருக்கும் சூத்திரங்கள் அனைத்தையும் படித்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள். இயற்பியல் பாடத்தில் கேட்கப்படும் பெரும்பாலான வினாக்கள் சூத்திரங்களைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதுபோலதான் இருக்கும். இதற்கு முன்பு நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், பயிற்சித் தாள்கள் ஆகியவை இணைய தளங்களில் கிடைக்கின்றன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து, மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்க்கலாம்” என்கிறார் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர், ஞா.பெர்ஜின்.

பரபரப்பிலும் பதைபதைப்பிலும் உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இடையிடையே படிப்பிலிருந்து விலகி, மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுங்கள். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் மருத்துவர் கனவு நனவாக வாழ்த்துகள்!

நீட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சிறந்த ஆலோசனைகளை www.vikatan.com-ல் படிக்கலாம்.