Published:Updated:

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!
பிரீமியம் ஸ்டோரி
க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

கார்க்கிபவா, கிராஃபிக்ஸ்: பிரேம் டாவின்ஸி, கோ.ராமமூர்த்தி

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

கார்க்கிபவா, கிராஃபிக்ஸ்: பிரேம் டாவின்ஸி, கோ.ராமமூர்த்தி

Published:Updated:
க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!
பிரீமியம் ஸ்டோரி
க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

டந்த 50ஆண்டுகளில் இந்தியர்களின் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு என நம்முடைய வாழ்க்கையின் திசைகளை தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் புரட்டிப்போட்டிருக்கிறது. நம்முடைய வாழ்க்கைத்தரத்தை வெகுவாக உயர்த்தி இருக்கிறது. திறம்பட பயன்படுத்துவோருக்கு வரமாகவும், அதைக் கண்மூடித்தனமாகக் கையாள்பவருக்கு சாபமாகவும் மாறத்தொடங்கி இருக்கிறது.

எதற்கெல்லாம் நாம் ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ மாற்றி அமைத்திருக்கிறது, தொழில்நுட்பவளர்ச்சி. வருங்காலத்தில் இந்த மாற்றம் இன்னும் பல உச்சங்களை எட்டும் என்கிறார்கள்.

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

கனவு வீடு!

1,000 சதுர அடியில் ஒரு வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? இடத்தின் விலையைத் தனியே வைப்போம். கட்டுவதற்கு மட்டுமென்றால் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஆகும் என்கிறது இன்றைய கட்டடத்துறை. இது ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் 12 வருட வருமானம் என்பது இந்திய அரசு சொல்லும் புள்ளி விவரம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விலை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அதே 12 வருட வருமானம் என்பதில் மாற்றமில்லை.

இங்குதான் தொழில்நுட்பம் துணைக்கு வருகிறது. பாரம்பரிய  கான்கிரீட் கட்டடங்களுக்கு மாற்றாக ஜிப்ஸம் வீடுகள், ஸ்டீல் வீடுகள், 3டி பிரின்டிங் வீடுகளை அறிமுகம் செய்கிறது தொழில்நுட்பம். அது, பாதுகாப்பையும், கட்டடத்தின் பலத்தையும் கொஞ்சமும் குறைக்காமல் அதே நேரம் விலையையும், கட்டடம் கட்டத் தேவையான நேரத்தையும் குறைக்கிறது. 5-6 லட்சத்தில் அதே 1,000 சதுர அடி வீட்டைக் கட்டலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு சராசரி இந்தியனின் இரண்டு ஆண்டு வருமானத்தில் ஒரு வீட்டைக் கட்டிவிட முடியும்.

நிலத்தின் விலையில் டெக்னாலஜியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், அதிலும் சின்னப் பங்களிப்பை செய்கிறது.

முன்பு ஒரு நிலத்தை வாங்க வேண்டுமென்றால், வாடகைக்கு வீடு வேண்டுமென்றால் தரகரைத்தான் அணுக வேண்டும். அவர்கள் சொல்லும் விலைதான்; கமிஷன்தான். ஆனால், இன்று இதற்கு நிறைய மொபைல் ஆப்ஸ் வந்துவிட்டன. இணையதளங்கள் வந்துவிட்டன. விலைகளை ஒப்பிடுகிற ஆன்லைன் டூல்கள் கிடைக்கின்றன. ஒரு ஏரியாவில் 1,000 சதுர அடி நிலத்தில் சராசரி விலையை அது சரியாகச் சொல்லிவிடுகிறது. இடைத்தரகர்கள் ஏதுமில்லாமல் நேரடியாக உரிமையாளரிடம் வாடகையைப் பேசி முடிவு செய்து கொள்ளவும் உதவுகிறது.

உயர... உயர...

இன்று கார்பயணமோ விமானப்பயணமோ எதுவுமே சாமானியனுக்கும் சாத்தியம் ஆகி இருக்கிறது. விமானக்கட்டண விவரங்கள் எல்லாம் எப்போதும் சிதம்பர ரகசியம் போல பாதுகாக்கப் பட்ட காலமெல்லாம் போய்விட்டது. நடுத்தரவர்க்க மக்களுக்கும் விமானப் பயணத்தை இலகுவாக்கியது தொழில்நுட்பவளர்ச்சிதான். இன்று ஆயிரம் கி.மீ விமானப்பயணத்தைக்கூட முன்கூட்டியே திட்டமிட்டால் 2,000 ரூபாயில் முடிக்க முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட கார் என்பது பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகிற சொகுசு வாகனம். இன்றைய தேதியில் எல்லாமே மாறிவிட்டது. சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்தச் சிறிய நகரங்களிலும்கூட கால்டாக்ஸிகள் இயங்கத்தொடங்கி விட்டன, அதுவும் மலிவான,  சரியான வாடகையில். காரணம் தொழில் நுட்பவளர்ச்சி. இன்று தொழில்நுட்ப உதவியால் உபேர், ஓலா போல பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்டணத்தைக் குறைத்திருக் கின்றன. கார் பயணம் குறைந்த விலையில் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது.

இன்னும் இருபது வருடத்தில் சூரியஒளியில் இயங்கும் வாகனங்கள் வரும்போது இலவசப் பயணம்கூட சாத்தியம் ஆகும். அதற்குக் கட்டணமாக அவர்கள் தொலைக் காட்சியில் ஓடும் விளம்பரத்தைப் பார்த்தால் மட்டுமே போதும் என்று வந்துவிடும்.

இலவசமாகும் கல்வி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கல்வி, காமராஜர் காலத்திலேயே இலவசமாக்கப் பட்டுவிட்டது. ``என்னப்பா இப்படிச் சொல்ற... ஸ்கூல் ஃபீஸ் ஒரு லட்ச ரூபாய் தெரியுமா” என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கும். ஆனால்,  இது அடிப்படைக் கல்வியின் கட்டணம் அல்ல. ஆசையின் கட்டணம். 50 வருடங்களுக்கு முன்பு வர்க்கப்பாகுபாடு இல்லாமல் கொடுக்கப்பட்ட கல்வி இன்றும் இலவசம்தான். இன்று தமிழ்நாட்டில் அரசாங்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விகூட கற்றுத்தரப்படுகிறது. நம் கௌரவத்தின் விலை ஆண்டுக்கு ஒரு லட்சம். ஆனால் எதிர்காலத்தில் கல்வி எப்படி இருக்கும்?

ஸ்மார்ட் வகுப்புகள் வேகமாகப் பரவி வருகின்றன. எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே நினைத்ததை படிக்கும் சூழல் நிச்சயம் வரும். அதற்கு நாம் தரப்போகும் விலை ஒரு நாளில் நாம் உண்ணும் காற்றடைத்த சிப்ஸின் விலை அளவே இருக்கும். இப்போதே மாஸ்டர் டிகிரி கூட ஆன்லைன் மூலம் கற்கும் வாய்ப்பு இருக்கிறது. பள்ளிகளில்கூட டிஜிட்டல் முறையில் பாடங்கள் சொல்லித் தருவது எளிமையாகவும், அதிகப்  பலன்  தரக்கூடியவையாக இருப்பதாகவும் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

செய்திகள் இலவசம்

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு கேபிள் தொலைக்காட்சி ஒழிந்து இணையத் தொலைக்காட்சிகள் மட்டுமே இருக்கும். இப்போதே ஜியோ அந்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டது.

வீட்டுக்கு ஒரே ஒரு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வந்தால் போதும். பிராட்பேண்டு மூலமாகவே டி.வி, இணையம், தொலைபேசி என எல்லா வசதிகளும் வந்துவிடும். மாதம் 1,000 ரூபாயில் 24 மணி நேரமும் தடையில்லா, அன்லிமிட்டெட் இசை, படங்கள், தொலைக்காட்சி என அனைத்துப் பொழுதுபோக்கும் சாத்தியம்.

செய்தி ஊடகங்கள், பத்திரிகைகள் அச்சுப்பதிப்புக்கு இணையாக இணையப் பதிப்புகள் வந்துவிட்டன. இந்தக் கட்டுரையைக்கூட பல பேர் மொபைல் வழியாகவோ, லேப்டாப் வழியாகவோ படித்துக் கொண்டிருக்கலாம்.

கலக்கல் காஸ்ட்யூம்ஸ்

ஆடைகளைப் பொறுத்தவரை அது பிரிட்டிஷ் காலத்திலேயே  விலை  குறைய ஆரம்பித்துவிட்டன. நாம் ஆடை வடிவமைப்புக்கும், பிராண்ட் என்ற பெயரில் விளம்பரத்திற்கும்தான் இன்று காசைக் கொடுக்கிறோம். இன்னும் பத்து வருடத்தில் ஆடி மட்டுமல்லாது சித்திரை முதல் பங்குனி வரை தள்ளுபடி விலையில் ஆடைகள் விற்கப் படலாம். ஆடைத் தயாரிப்பில் மட்டுமில்லாமல் அதன் நெட்வொர்க்குக்காக ஆகும் பணத்தையும் தொழில்நுட்பம் குறைத்திருக்கிறது. ஒருவர் வீட்டில் இருந்தபடியே தயாரிக்கும் ஆடையை, நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்பி விட முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல், இலவசமாக ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் இதைச் சாத்தியப் படுத்தவும் முடியும்.

மாறும் மருத்துவம்

அரசு மருத்துவமனைகள் இலவச சிகிச்சை கொடுத்தாலும், நமது மத்திய மாநில அரசுகள் மக்களை நிறைய மருத்துவ, விபத்துக் காப்பீட்டுத்  திட்டங்களுக்குள் கொண்டுவந்துவிட்டன. போலியோ முதல் தட்டம்மை உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்குத் தடுப்பூசி இலவசமாகவே போடப்படுகிறது. ஓர் இருதய அறுவை சிகிச்சை என்றால் ஐந்து டாக்டர்கள் சுற்றிலும் நின்று செய்யும் காலம் மலையேறி வருகிறது. எதிர்காலத்தில் மைக்ரோ ரோபாக்கள் இன்னும் துல்லியமாகச் செய்து முடிக்கும். மருத்துவர்கள் அதைக் கணினி திரைவழி கண்காணிப்பது மட்டுமே வேலையாக இருக்கும். ஆக இதற்கு ஆகும் செலவும் நேரமும் மிக மிகக் குறையத் தொடங்கும். முக்கியமாக உயிரிழப்பு ரிஸ்க்குகளைத் தொழில்நுட்பம் குறைத்து இருக்கிறது.

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

பேசலாம்... கேட்கலாம்...

இன்னும் பத்துவருடத்தில் சிம் போட்டு அலைபேசி எண்களை அழைத்துப் பேசும் காலமும் போய்விடும். எல்லாப் பொது இடங்களிலும் இலவச WIFI வந்துவிடும். இணையம் எங்கும் வியாபித்து இருந்தால் சிம்மே தேவையில்லை. மொபைலில் ஏதேனும் ஒரு VOIP Service App இருந்தால் அமெரிக்காவோ ஆண்டிப்பட்டியோ இரண்டும் ஒரே தொலைவு தான். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சேவைகள்தான் அதிகம்.

கிட்டத்தட்ட ஆறுகோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்/வசதிகள் இன்று இலவசமாகக் கிடைக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். பெட்ரோல் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், டெக்னாலஜியால் நாம் பயணிக்கும் தூரம் குறைகிறது. திரை அரங்கு கட்டணம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதற்கு மாற்று, மொபைலுக்கு உள்ளேயே வந்துவிட்டது. உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அது நம் தட்டுக்கு வரும் தூரம் சுருங்கியிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் டெக்னாலஜி குறைத்துக் கொண்டிருக்கிறது. குறைக்கும். சரி.  அப்படி என்றால் நாம் எதற்குத்தான் அதிகம் செலவழிக்கிறோம்?

ஆடம்பரத்துக்காக என்பதுதான் உண்மை!

மதன் கார்க்கி (பாடலாசிரியர்)

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!திரைத்துரையில் நேரம்தான் பணம். டெக்னாலஜியால் எனக்கு அது நிறையவே மிச்சமாகிறது. பாடல்களை மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் எழுதியவுடனே அனுப்புகிறேன். அதில் ஏதும் திருத்தம் இருந்தால் உடனுக்குடன் சொல்லி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு நாள் பாடல் எழுதிவிட்டுக் கொடுத்தனுப்புவார்கள். அதில் திருத்தம் என்றால் இன்னொரு நாள் ஆகும். இதை வைத்து இசையமைப்பாளர் ரெக்கார்டிங் ஏற்பாடு செய்தால், அது கேன்சல் ஆகும். வீண் செலவுதான்.டெக்னாலஜியால் பயணச்செலவில் இருந்து நேரம் வரை எல்லாமே மிச்சம் ஆகிறது. அந்த நேரத்தை என் குடும்பத்துடன் செலவிடுகிறேன். அது என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுகிறது. தொழில் நுட்பத்தின் அடிப்படையே அதுதான். செலவைக் குறைத்து, தரத்தை உயர்த்துவது. ஆனால், அதை மறந்துவிட்டு, டெக்னாலஜிக் குள்ளேயே மூழ்கி நம் நிம்மதியை தொலைத்துவிடக் கூடாது.

எஸ்.கே.பி. கருணா (கல்வியாளர்)

 தொழில் முனைவர்களுக்கு தொழில்நுட்பம் தந்திருக்கும் வசதிகள் ஏராளம். சிறிது காலத்துக்கு

க்ளிக்... டச்... ஸ்வைப்... - வாழ்வை ஈஸி ஆக்கும் டெக்னாலஜி!

முன்புவரை, பணத்தை டெபாசிட் செய்யவோ, டி.டி எடுப்பதற்கோகூட  பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் வங்கி வேலைக்காக ஒரு நாளின் பெரும்பகுதி வீணாகிவிடும். இணைய வளர்ச்சியால் நேரமும், மனித உழைப்பும் நிறையவே மிச்சமாகியிருக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே பணம் அனுப்ப முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் வியாபாரத்தின் எல்லை விரிவடைந்துள்ளது. இந்தியாவில் எந்த இடத்தில் இருப்பவரும், மற்றொருவருடன் எளிதாக வியாபாரம் செய்ய முடிகிறது. வியாபாரிகளுக்குள் பணப்பரிவர்த்தனைக்காகக் கையடக்க மொபைலில் இருந்து உடனுக்குடன் சில நிமிடங்களில் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடிகிறது.