Published:Updated:

அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!

அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!
பிரீமியம் ஸ்டோரி
அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!

பரிசல் கிருஷ்ணா, படம்: பா.காளிமுத்து

அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!

பரிசல் கிருஷ்ணா, படம்: பா.காளிமுத்து

Published:Updated:
அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!
பிரீமியம் ஸ்டோரி
அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!

ஐ.பி.எல்-ஐ விட இப்போது இவர்கள்தான் வைரல் ஹிட். கோவா கடற்கரையில் அமர்ந்துகொண்டு, மொபைலில் வீடியோ பார்த்துக்கொண்டே ‘இப்படி இப்படி ஆடணும் அவ்ளோதான்... ரொம்ப ஈஸி!’ எனக் கத்திக்கொண்டு கப்பலில் ஆடும் அந்த க்யூட் ஜோடி, உண்மையில் யார் தெரியுமா? நடனத்துக்காக பத்ம பூஷண் விருது பெற்ற தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன்.

அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!

ரயிலில் இறங்கி ‘போனிடெய்ல் கைடு’ எங்கே எனத் தேடுவதில் தொடங்கி,  ஸ்கூட்டரில் ‘தில் சாத்தா ஹை ஃபோர்ட்’ தேடி ஜி.பி.எஸ் உதவியோடு பயணிப்பது, பாராசூட் ரைடிங்கை ஃபேஸ்புக் லைவில் காட்டுவது என,  இந்த ஐ.பி.எல் சீஸனில் அடிக்கடி இவர்கள் வந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்.

கலாக்ஷேத்ரா ருக்மணி தேவியிடம் சிறு வயது முதலே பரதக்கலை பயின்று,  1968-ம் ஆண்டு முதல் `பரத கலாஞ்சலி' என்ற நாட்டியப் பள்ளியை நடத்திவரும் இந்தத் தம்பதியர், திருமணமாகிப் பொன்விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

``புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியர்கள் நீங்கள். எப்படி இந்த செகண்ட் இன்னிங்ஸ்?”

``பையன் சத்யஜித்,பெரிய போட்டோகிராஃபர். ஒருநாள் ‘விளம்பரத்துல நடிக்கச் சொல்லி கேட்கிறாங்க’னு சொன்னான். `போனைக் கையில் வெச்சுட்டு போட்டோ எடுப்பாங்க. அவ்வளவுதானே’ன்னு நினைச்சு `சரி'ன்னு சொன்னேன். ரெண்டே நாள்ல எல்லாம் ஓகே ஆன பிறகுதான் இவ்ளோ பெரிய புராஜெக்ட்னு தெரிஞ்சது” - உற்சாகமாகச்  சொல்கிறார் தனஞ்செயன்.

“ `வயதான தம்பதி, கோவாவுக்கு செகண்ட் ஹனிமூன் வர்றதுதான் கான்செப்ட்'னாங்க. எங்களுக்கு டபுள் ஆச்சர்யம். என்னன்னா, நாங்க உலகம் முழுக்கச் சுற்றியிருக்கோம். ஆனா, இங்கே இருக்கிற கோவாவுக்குப் போனதில்லை. அதனால அந்த விளம்பரத்துல வர்ற மாதிரி நிஜமாவே எங்களுக்கு செகண்ட் ஹனிமூன்தான்” - புன்னகையுடனே சொல்கிறார் சாந்தா தனஞ்செயன்.

அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்!

“நாட்டியத் துறையைச் சார்ந்த பலரும் உங்களை டி.வி-யில் பார்த்தப்போ ஷாக் ஆகியிருப்பாங்களே?”

“எங்களுக்குத் தயக்கமே, எங்க துறைச் சார்ந்தவங்க இதைப் பார்த்துட்டு என்ன சொல்லுவாங்கனுதான். ஆனா, நாங்க பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. பலரும்  `நாங்க நாட்டியம், நடனம்னு ரொம்பக் கறாரா இருக்கோம். நீங்க இந்த வயசுல இவ்ளோ ஜாலியா ஒரு விஷயம் பண்ணிட்டு வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு. எல்லாருக்குமே இன்ஸ்பயரிங்கா இருக்கு’ன்னு சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சி.”

“நடிக்கச் சொல்லித் தந்தாங்களா?”

“டைரக்டர் பிரகாஷ் வர்மா, விளம்பர உலகில் பிரபலமானவர். சில வார்த்தைகள் மட்டும் பேச்சுல வரணும்னு சொல்லிடுவார். மற்றபடி நாங்க எங்க இஷ்டத்துக்குப் பேசினதுதான். `இயல்பா இருக்கட்டும்'னுட்டார்.
அந்தக் கப்பல் டான்ஸ் சொல்லித்தர, மும்பையில இருந்து டான்ஸ் மாஸ்டரும் ஒரு பொண்ணும் வந்திருந்தாங்க. எங்களைப் பார்த்துட்டு தூரமா போய் ஏதோ யோசனையிலேயே இருந்தாங்க. அப்புறம்தான், அந்தப் பொண்ணுக்கு எங்களை நல்லாத் தெரியும்னு தெரியவந்தது. ‘நாட்டியத்துல இத்தனை வருஷ அனுபவம், பத்ம பூஷண் எல்லாம் வாங்கிருக்கிற உங்களுக்கு எப்படி நாங்க சொல்லித்தர்றது?’னு கேட்டுட்டே இருந்தாங்க. `அதுவேற இதுவேற'னு பேசிப் புரியவைச்சோம். யூனிட் முழுக்க அங்கிள், ஆன்ட்டினு எங்களை அப்படிப் பார்த்துக்கிட்டாங்க.”

ஒன்பது வயதில் நாட்டியம் கற்றுக்கொள்ள கலாக்ஷேத்ராவில் சேர்ந்தவர் சாந்தா. அதற்கு அடுத்த வருடத்தில் தனஞ்செயனைக் கலாக்ஷேத்ராவில் சேர்ப்பதற்காக அழைத்துக் கொண்டு வருகிறார் தனஞ்செயனின் கதகளி குரு. வழியில் ஒரு மரக்கிளையில் விளையாடிக் கொண்டிருக்கும் சாந்தாவை அழைத்தவர், “இது தனஞ்செயன். இங்கே சேர்றதுக்கு வந்திருக்கான். பார்த்துக்கோ” என்கிறார். அப்போது தனஞ்செயனின் வயது 14.“இப்போ வரை இவரைப் பார்த்துக்கிட்டிருக்கேன்”- தனஞ்செயனின் கையை வாஞ்சையோடு பிடித்துக்கொண்டிருந்த சாந்தாவின் முகத்தில் அரை நூற்றாண்டைத் தாண்டிய காதல்.