Published:Updated:

இதுவா வீரம்?

இதுவா வீரம்?
பிரீமியம் ஸ்டோரி
இதுவா வீரம்?

இதுவா வீரம்?

இதுவா வீரம்?

இதுவா வீரம்?

Published:Updated:
இதுவா வீரம்?
பிரீமியம் ஸ்டோரி
இதுவா வீரம்?

‘முறத்தினால், கொண்ட மறத்தினால் புலியைத் துரத்தினாள் ஒரு தமிழ்ப்பெண்’ என்று நம் தமிழ்வீரத்துக்கு

இதுவா வீரம்?

உதாரணம் சொல்லப்படும். இப்போது தமிழ்ப்பெண்களின் வீரம், டாஸ்மாக்கை அடித்துத் துரத்துவதில் வெடித்திருக்கிறது. தமிழக அரசோ டாஸ்மாக்கை அகற்றுவதை விட்டுவிட்டு, டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடும் பெண்களைத் துரத்துவதே வீரம் என்று கருதிக்கொண்டிருக்கிறது.

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற பொன்மொழி ஏதேனும் சில குடும்பங்களை மட்டுமே குறிப்பதாக இருந்தது. ஆனால், எப்போது தமிழக அரசே டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது விற்றதோடு அதற்கு இலக்கும் நிர்ணயித்ததோ, அப்போதே குடி ஒட்டுமொத்தத் தமிழ்க்குடியையும் கெடுக்க ஆரம்பித்தது.

‘ஏதோ சில இயக்கங்கள் எதிர்க்கின்றன’, ‘சில தனிநபர்கள்தான் போராடுகின்றனர்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தது தமிழக அரசு. ஆனால் இப்போதோ, மக்களே மதுவுக்கு எதிராக நேரடியாகக் களத்தில் இறங்குகின்றனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து ஐந்நூறு மீட்டர் தூரத்தில் செயல்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, தமிழ் மக்களின் எழுச்சி இரட்டிப்பாகி இருக்கிறது.

இதுநாள் வரை ஊருக்கு வெளியே இருந்த அரக்கன் வீட்டுக்கு அருகிலேயே இடம்பெயர்ந்துவந்தால், குடிப்பழக்கமுள்ள கணவன் மேலும் சபலம் அடைவானே,  சம்பளமே கைக்கு வராதே, இருட்டிய பிறகு வெளியே போய்வருவதே சவாலாகிவிடுமே... என்று எழும் எண்ணற்ற அச்சங்களின்  காரணமாக டாஸ்மாக்குக்கு எதிராக ஊர்தோறும் தன்னெழுச்சியாகப் பெண்கள் ஒன்று திரண்டு போராடிவருகிறார்கள். ‘எங்கள் ஊருக்கு மதுக்கடை வேண்டாம்’ என்று கிராம சபைகளின் மூலம் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திறக்கப்படும் மதுக்கடைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது, மது பாட்டில்களைத் தெருவில் போட்டு உடைத்துப் போராட்டம் நடத்துவது என, மதுவுக்கு எதிரான போர்க்களமாக இன்று தமிழகத்தை மாற்றியிருக்கிறார்கள் பெண்கள்.

‘மதுக்கடைக்கு எதிராகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், மூன்று வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியாளர்கள் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’ என்றும், ‘மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினால், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யவோ, தடியடி நடத்தவோ கூடாது’ என்றும், ‘கிராம சபைகளில் எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானம் இயற்றினால், அந்தக் கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது’ என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவே பிறப்பித்திருக்கிறது.

`தமிழக மக்களின் நலனைவிட டாஸ்மாக்கே முக்கியம்’ என்று ஓர் அரசு கருதுமானால், அது மக்களுக்கான அரசா?

`யாரிடம் வீரத்தைக் காட்டுவது? எந்தக் காரணத்துக்காக வீரத்தைக் காட்டுவது?’ என்று தெரியாத இந்த அரசு தொடர்ந்து இப்படியே செயல்பட்டுவந்தால், பெண்களின் கைகளில் சிக்கும் மதுக்கடைகளின் கதிதான் இந்த அரசுக்கும் நேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism