Published:Updated:

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

பாலு சத்யா, படங்கள்: பா.காளிமுத்து

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

பாலு சத்யா, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

`எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ என்பது பெயருக்கு மட்டும்தான். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு அது பேபி ஆஸ்பத்திரிதான். இந்த மக்களின் மருத்துவமனை, விரைவில் 70 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது!

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

இதயத்தில் அறுவைசிகிச்சை, சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய், ஹெச்.ஐ.வி தொற்று, மூளையில் பாதிப்பு... என நீள்கிற குழந்தைகளின் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் மன உறுதி உள்ளவர்களையும் கலங்கவைப்பவை. இப்படி எத்தனையோ நோய்களுடன், உடல்நலப் பிரச்னைகளுடன் ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை ஏழைப் பெற்றோர்கள் தினமும் பேபி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறார்கள். நிறையவே நம்பிக்கையோடு...

காரணம், பேபி ஆஸ்பத்திரியின் கவனிப்பு. தனியார் மருத்துவமனைகளை விடவும் சிறப்பாகக் கிடைக்கிற சிறந்த சேவை. இதனால்தான் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து மட்டுமல்ல... பக்கத்து மாநிலங்களில் இருந்தும்கூட இந்த மருத்துவமனையை நாடி வருகிறார்கள் மக்கள்.  

உள்ளே நுழைந்ததும், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தவர்களை அயர்ந்து போகச் செய்கிற மாதிரி உயர்ந்து நிற்கிறது புறநோயாளிகளுக்கான பிரத்யேகக் கட்டடம். நம் அரசாங்கம், ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் கட்டிய கட்டடம். உள்ளே நுழைந்தால், ஒரு தனியார் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்த உணர்வு. வரவேற்பறை மேஜையில், எடுத்துக் குடிப்பதற்கு வசதியாக பானையில் வைக்கப்பட்டிருக்கிறது `நில வேம்பு கசாயம்.’

முழுக்க முழுக்க கணினிமயமாக்கப்பட்டச் செயல்பாடுகள். பெயரைப் பதிந்து சீட்டு வாங்குவது முதல், மாத்திரை, மருந்து வாங்கி வெளியேறுவது வரை எல்லாமே டிஜிட்டல்தான். மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே, இயலாத குழந்தைகளை அழைத்துச் செல்ல ஸ்பெஷல் ஆம்புலன்ஸ். குழந்தைகளின் எடை பார்ப்பது தொடங்கி, சிறப்பு சிகிச்சை வரை அத்தனைக்கும் நவீன தொழில்நுட்பக் கருவிகள். எல்லாமே மக்களுக்கு இலவசமாக...

 ``1948-ம் வருஷம் டாக்டர் எஸ்.டி.ஆச்சார்தான் சென்னை அரசு மருத்துவமனையில் முதல் குழந்தைகள் நலத் துறையை ஆரம்பிச்சார். அவருடன் டாக்டர் வி.பாலகோபால் ராஜுவும் டாக்டர் எம்.எஸ்.ராமகிருஷ்ணனும் சேர்ந்து குழந்தைகளுக்கான தனி மருத்துவமனையை எழும்பூர்ல உருவாக்கினாங்க. 1968-ம் வருஷம் அரசு உதவியோட இங்கே குழந்தைகள் மருத்துவமனை உருவானது. அப்போ 250 படுக்கைகளோட ஆரம்பிக்கப்பட்டது; இப்போ 837 படுக்கைகள். ஒரு நாளைக்கு வெளிநோயாளிகள் பிரிவில் மட்டும் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் குழந்தைகள் வர்றாங்க. இங்கே ஒரே வளாகத்துல பரிசோதனைக்கூடம் தொடங்கி அத்தனை வசதிகளும் இருக்கு. அனைத்துத் துறை சார்ந்த சிறப்பு மருத்துவர்களும் இருக்காங்க. முக்கியமான விஷயம், இங்கே எல்லாமே இலவசம். பெரிய அறுவைசிகிச்சை செய்யணும்னா, அரசு கொடுக்கும் இன்ஷுரன்ஸ் க்ளெய்ம் போதும். டெங்கு மாதிரி பெரிய அளவுல தொற்றுநோய் வருகிற காலங்களில் நிறைய பேர் வந்தா, தனி வார்டு அலாட் பண்ணி சிகிச்சை கொடுப்போம். அதுக்குனு தனியா டாக்டர்ஸ் இருப்பாங்க. இங்கே 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்காங்க. தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்துட்டு, ஒரு கட்டத்துல செலவு பண்ண முடியாத நிலையிலதான் பலர் இங்கே வர்றாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

எல்லா மருத்துவமனைகளிலும் ஸ்பெஷல் வார்டுனு ஒண்ணு இருக்கும். இங்கே அப்படி ஒண்ணு கிடையவே கிடையாது. ஏன்னா... எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்.’’ என்கிறார் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் மரு.தி.ரவிச்சந்திரன்.

 ``இது தென்கிழக்கு ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குழந்தைகள் நல மருத்துவமனை. ஒரு நாளைக்கு 70-ல் இருந்து 100 குழந்தைகள் உள்நோயாளிகளாக அட்மிட் ஆகறாங்க. இந்த ஆஸ்பத்திரியோட பலமே மருத்துவ மாணவர்கள்தான். முதுகலைப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மட்டும் வருஷத்துக்கு 52 பேர் இங்கே வந்து பணியாற்றுகிறார்கள். எந்த நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள். 250 நர்ஸ்கள் இங்கே பணியாற்றுகிறார்கள்.

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

இந்த மருத்துவமனையோட சிறப்பம்சம், தாய்ப்பால் வங்கி. குழந்தைக்கு முழுமையான உணவு தாய்ப்பால்தான். அது கிடைக்காம இருக்கும் குழந்தைகளும் இருக்காங்க. அவங்களுக்காகத்தான் இந்த வங்கி. சில தாய்மார்களிடம் இதன் பெருமையைச் சொல்லி, அவங்க சம்மதத்தோட தாய்ப்பாலை வாங்கி சேமிச்சுவெச்சு, குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம்.'’ என்கிறார் மருத்துவப் பதிவாளர் டாக்டர் சீனிவாசன்.

``எனக்கு  இந்த மருத்துவமனையில்தான் குழந்தை பிறந்து இப்போது எட்டு மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் வங்கி பற்றி மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வாரத்துக்கு ஐந்து முறை இங்கே வந்து தாய்ப்பால் தானம் செய்கிறேன். என் குழந்தையைப்போலவே இன்னொரு குழந்தையும் என் தாய்ப்பாலால் வளர்கிறது என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதனால் ஒரு வாரம்கூட தவறவிடுவதில்லை'' என்கிறார் தாய்ப்பால் தானம் கொடுக்கும் ப்ரியா.

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

தடுப்பூசி மருந்தியலுக்காகத் தனியாக ஒரு துறையே இங்கே இயங்கிவருகிறது. இங்கே தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஆராய்கிறார்கள். தடுப்பூசி போட்டபிறகு சில குழந்தைகளுக்குத் தொண்டை அடைப்பான், கக்குவான் போன்றவை ஏற்படலாம். அதற்கான சிறப்பு மருந்துகள் எப்போதும் இங்கே தயாராக இருக்கும். பிற மாநிலங்களில் இருந்தெல்லாம் அந்த மருந்துகளுக்காக இங்கே வருகிறார்கள். சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அட்மிட் செய்து, முழுமையாக குணமடைந்த பிறகே அனுப்புகிறார்கள்.

``புற்றுநோய் சிகிச்சை தொடர்பான எல்லாக் கருவிகளும் இங்கே இருக்கு. அதற்கு சிகிச்சை கொடுக்கிறோம். சிகிச்சை பெற்றவங்களை வரவெச்சு, அவங்க உடல்நிலையைக் கவனித்து தேவையான மருந்துகளைக் கொடுக்கிறோம். பொதுவா இங்கே வர்ற கேஸ்களில் ரத்தத்துல ஏற்படுகிற புற்றுநோய்தான் அதிகம். கீமோ தெரபி, ரேடியேஷன் போன்ற சிகிச்சைகளுக்கு மட்டும் குழந்தைகளை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜுக்கு அனுப்புவோம்’’ என்கிறார் குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவர் வனிதா.

“எங்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஸ்பெஷல்தான்!”

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பேபி ஆஸ்பத்திரி ஆற்றிவரும் பணி பாராட்டுதலுக்கு உரியது. தரமான மருந்துகள், தேர்ந்த மருத்துவர்கள், பல சிறப்புப் பிரிவுகள், துறைகள்... இவை போதும், பேபி ஹாஸ்பிட்டலை குழந்தையைப்போல் உச்சி முகர்ந்துகொள்ள!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism