Published:Updated:

என்னங்க சார் உங்க சட்டம்?

என்னங்க சார் உங்க சட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்னங்க சார் உங்க சட்டம்?

என்னங்க சார் உங்க சட்டம்?

மோடி பிரதமராகப் பதவியேற்றபோது சிறுபான்மையினருக்கும் நடுநிலையாளர்களுக்கும் என்ன அச்சம்

என்னங்க சார் உங்க சட்டம்?

இருந்ததோ, அதை மெய்ப்பிக்கும்வகையில் இருக்கிறது மத்திய அரசின் புதிய அறிவிப்பு. கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காகக் காளைகள், பசுக்கள், எருமைகள், ஒட்டகங்கள் போன்றவற்றை விற்கக் கூடாது என்ற இந்த அரசின் உத்தரவு, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

அனைத்து விலங்குகளையும் நேசிக்கும் ஜீவகாருண்யம்தான் இந்த அறிவிப்புக்குக் காரணம் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகமெங்கும் ‘நமோ மீன் ஸ்டால்’ திறந்து மோடிக்கு வாக்களிக்கப் பிரசாரம் செய்தவர்கள்தான் பா.ஜ.க-வினர். ஆடு, கோழி, மீன் ஆகியவற்றை இறைச்சிக்காக வாங்கவும் விற்கவும் தடையில்லை; ஆனால் பசுக்கள், காளைகள், ஒட்டகங்களை மட்டும் இறைச்சிக்காக விற்கத் தடை என்றால், இதன் பின்னணியில் இருப்பது அப்பட்டமான மதவாதம் என்பதுதானே உண்மை?

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், பல்வேறு பண்பாடுகள் என்ற பன்மைத்தன்மைதான் இந்தியாவின் அசைக்க முடியாத அடித்தளம். ஆனால், இந்த அடித்தளத்தையே ஆட்டம் காணவைக்கும் வகையில்தான் இருக்கிறது பா.ஜ.க. அரசின் அறிவிப்பு. எந்த உணவுக் கலாசாரமும் இன்னொன்றைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை. எதையும் யார் மீதும் திணிப்பது ஜனநாயக விரோதம்.

அதுவும், இந்தத் தடையை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு கொண்டுவந்திருப்பது மோடி அரசுக்கு, தன் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் இருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறதே தவிர, ஜனநாயகத்தில் இருக்கும் நம்பிக்கையைக் காட்டவில்லை.

கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, விவசாயம் எனப் பல துறைகளில் சமூகத்தையும் நாட்டையும் ஒட்டுமொத்தமாகப் பாதித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய மத்திய அரசு, இப்படி சர்ச்சைக்குரிய வகையில் மற்றவர்களின் பண்பாடுமீது தாக்குதல் தொடுக்கும் விதமாகத் தடையைக் கொண்டுவருவது நல்லதல்ல.

இந்தியாவின் பன்முகத்தன்மைமீதும் சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவருமே இந்தத் தடையை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிய தருணம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz