பிரீமியம் ஸ்டோரி

#Throwbackstory

திவ்யா பாரதி (ஆவணப்பட இயக்குநர்)

யாரோ to ஹீரோ

#படிப்பு

மக்களுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டதுதான் என் அரசியல் செயல்பாட்டின் அடிப்படை.. பிறகு, சினிமா என்கிற ஊடகத்தை மக்களுக்காகப் பயன்படுத்த  எடிட்டிங், கேமரா போன்ற தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன். நான் சட்டம் படித்தது (B.a.b.l) என் அரசியல் செயல்பாடுகளுக்கு ரொம்பப் பெரிய பலம்.

#பிடித்தபுத்தகம்

தாய்  பட்டாம்பூச்சி  வெண்ணிற இரவுகள்

#பலம்

நான் ஏற்றுக்கொண்ட மார்க்ஸிய அரசியலும் விடாப்பிடியாகத் தொடர்ந்து போராடும் என் இயல்பும்.

#பிடித்தவாக்கியம்

`உண்மைப் புரட்சி என்பது, அன்பு எனும் பேருணர்வால் கட்டப்படுவதாகும்' - சே குவேரா

#காணும்கனவு

இடதுசாரிக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை.

யாரோ to ஹீரோ

#அப்பாஅம்மா

அப்பா கர்ணன், மில்லில் வேலை செய்தார்.  அம்மா ஜெயபாரதி. போராட்ட உணர்வு எனக்குள் வந்தது இவர்களால்
தான்.

#அந்தத்தருணம்

பள்ளி நாளில் நான் வாசித்த மார்க்ஸிய, பெரியாரிய, அம்பேத்கரிய எழுத்துகளும், அன்றைய நாளில்  ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நடத்தப்பட்ட அரச மற்றும் ஆதிக்கச் சக்திகளின் தொடர் தாக்குதல்களும்தான் என்னை மாற்றின.

யாரோ to ஹீரோ

#அரசியலில் ஈடுபாடு

என் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் செயல்பாடுதான். நான் சாலையில் இறங்கிப் போராடுவதும், அரசுக்கு எதிராக என் கேமராவைத் திருப்பிப் படம் எடுப்பதும்கூட அரசியல் செயல்பாடுதான்.

#தவறவிடமாட்டேன்

ஆதிக்கத்துக்கும் அநீதிக்கும் எதிராக விடாப்பிடியாகச் சண்டையிடும் என் இயல்பை.

#நன்றி

புத்தகங்களுக்கும் பெண்களின் சிறகுகளான என் இருசக்கர வாகனத்துக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு