Published:Updated:

நன்றே செய், அதை அன்றே செய்!

நன்றே செய், அதை அன்றே செய்!
பிரீமியம் ஸ்டோரி
நன்றே செய், அதை அன்றே செய்!

நன்றே செய், அதை அன்றே செய்!

நன்றே செய், அதை அன்றே செய்!

நன்றே செய், அதை அன்றே செய்!

Published:Updated:
நன்றே செய், அதை அன்றே செய்!
பிரீமியம் ஸ்டோரி
நன்றே செய், அதை அன்றே செய்!

திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர்,

நன்றே செய், அதை அன்றே செய்!

நாகப்பட்டினம், கடலூர் என 12 மாவட்டங்களில் பரவியிருக்கும் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நம்பியிருப்பது மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீரைத்தான். இந்த மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும் என்றாலும், கட்டப்பட்டதில் இருந்து இப்போது வரையிலான 83 ஆண்டுகளில் முறையாகத் தூர்வாரப்படாததனால் வண்டல் மண் சேர்ந்து, அதன் கொள்ளளவு குறைந்துவிட்டது.  இந்தக் காரணத்தை முன்வைத்து, ‘சரித்திரத்திலேயே முதல்முறையாக இந்த அணையை நாங்கள்தான் தூர்வாரப்போகிறோம்!’ என்ற விளம்பரங்களோடு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் புடைசூழ மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரும் செய்ய முன்வராத ஒரு பணியை எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்ததைப் பார்த்துப் பலரும் வியந்தனர் என்பது உண்மைதான். ஆனால், திட்டம் துவங்கிவைக்கப்பட்ட அன்றைய தினமே, ‘வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்லலாம்’ என்ற முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக ஒரு டிராக்டருக்கு இவ்வளவு என்று அதிகாரிகள் விவசாயிகளிடம் பணம் வசூலித்ததாகச் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து வண்டல் மண் எடுக்கும் பணியே நிறுத்தப்பட்டதாகவும் செய்தி வந்தது. `அப்படியெல்லாம் இல்லை. முதல்வர் துவங்கிவைத்த பணி தொய்வின்றி நடந்துவருகிறது’ என்று அரசு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, ‘பருவ மழை துவங்க இருக்கும் இந்த நேரத்திலா இந்தப் பணியைத் துவங்குவது?’ என்று  முதல் நாளே முதல்வரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.  ‘மழைக்காலம் வருவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன’ என்று பதிலளித்தார் முதல்வர். ஆனால், அடுத்த நாளே தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதனால், கர்நாடக வனப்பகுதியில் பெய்த மழையை அடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில், முதல்வரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பணி இனி எந்த அளவுக்கு தொடர்ந்து நடைபெறும் என்பதை யார் வேண்டுமானாலும் யூகிக்க முடியும். இத்தனை மாதங்களாக மேட்டூர் அணை காய்ந்துகிடந்தபோது இந்தப் பணியை அரசு ஏன் மேற்கொள்ளவில்லை?

மேட்டூர் அணை அமைந்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தன்னை விவசாயி என்று பெருமையாக அடையாளப்படுத்திக்கொள்பவருக்கு, ‘பருவத்தே பயிர் செய்ய வேண்டும்’ என்பதன் பொருள் தெரியாமல் போனது ஏன்?

ஜெயலலிதா தலைமையிலான அரசு 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும் அரசாக மட்டுமே இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு படி மேலே போய் கோடிக்கணக்கிலான நிதியை ஒதுக்கித் துவக்கவிழாவை நடத்திவிடுகிறார்கள். ஆனால், துவக்கவிழா கண்ட சில நாள்களிலேயே திட்டங்கள் முடங்கிப்போகின்றன என்பதுதான் உண்மை. 300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் துவங்கப்பட்ட குடிமராமத்துத் திட்டமும் பல இடங்களில் ஆரம்பிக்கப்படவே இல்லை. ஆரம்பிக்கப்பட்ட பல இடங்களிலும் பருவமழை வருவதற்கு முன்பே இத்திட்டம் முடங்கிப்போய்விட்டது.

நன்றே செய்யுங்கள். ஆனால், அதையும் அன்றே செய்ய வேண்டும் முதல்வரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism