ண்டிச்சாவி, பேனா, சேஃப்டி பின், ஹேர்பின், பென்சில், விசிட்டிங் கார்டு, ஹெட்போனின் கம்பிமுனை, விரல், பேப்பர், பல்குத்த உதவும் குச்சி, பேனா மூடி, தீக்குச்சி...

நீண்டுகொண்டே போகும் இந்தப் பட்டியலில் எந்தப் பொருளைக் கண்டாலும், நண்பர் ஒருவர் குதூகலம் ஆகிவிடுவார். அடுத்த நிமிடம் அது அவரது காதுக்கு ஷிஃப்ட் ஆகிவிடும். எப்படி அவர் காதில் மட்டும் எப்போது எடுத்தாலும் அவ்வளவு அழுக்கு வருகிறது என்ற ஆச்சர்யம் எனக்கு. `இதில் என்ன ஆச்சர்யம்? உவ்வே...’ என்கிறீர்களா? ஒரு விஷயம் சொல்கிறேன்...

நாம் `அழுக்கு’ எனச் சொல்லும் அவைதாம் இந்த ஊரில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நம் காதுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தும் கோட்டை. அவை இல்லாமல் போனால், நம் காது குப்பைத்தொட்டிதான். யார் காதில் எல்லாம் அந்த அழுக்கு உருவாகாமல் போகிறதோ, அவர் காது குடையும். நமைச்சல் அதிகம் ஆகும்.

ஆங்கிலத்தில் அதை `Cerumen’ என்கிறார்கள். மனிதர்களுக்கு இயற்கையாகவே cerumen சுரக்கிறது. சிலருக்கு ஹார்மோன் காரணமாக அதிகமாகச் சுரக்கலாம் அல்லது குறைவாகச் சுரக்கலாம். குறைவாகச் சுரக்கிறவர்களுக்குக் காதுக்குள் பிரச்னைகள் உருவாகும். அவர்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். இப்போது நாம் கவனிக்கவேண்டியது, cerumen அதிகம் சுரக்கும் காதுகளைக்கொண்டவர்களை.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9

ஏன்?

ஏனென்றால், அவர்களுக்குத்தான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருக்கும். கையில் கிடைக்கும் ஆயுதங்களை எடுத்து, காதுகளைத் துளைக்கும் தீவிரவாதி ஆவார்கள். ஆனால், அந்த அழுக்கை அவர்கள் வெளியே எடுக்காமல், காதுக்கு உள்ளே தள்ளிவிடுகிறார்கள். இதனால் பிரச்னை அதிகரிக்குமே தவிரக் குறையாது.

ஹெட்போனில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால், cerumen அதிகம் சுரக்கும். காட்டன் பட்ஸ் எடுத்துக் காது குடைந்துகொண்டே இருந்தால், துளைகள் சுத்தமாகி, இன்னும் வேகமாகச் சுரக்கும். தினமும் நீச்சல் அடிக்கும் நபர்களின் காதுக்குள் தண்ணீர் சென்று, அதனால் அதிகம் சுரக்கும். இந்தக் காரணங்கள் இல்லாமலும் ஒருவருக்கு அதிகமாகச் சுரந்தால்... மருத்துவர்தான் அவர்களது ஒரே ஹெல்ப்லைன்.
எப்படிச் சுத்தப்படுத்துவது?

நம் காதுகள் தாமாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையவை. அதையும் மீறிச் சேர்ந்தால், சுத்தமான காட்டன் பட்ஸ் மூலம் வெளிப்புறக் காதுகளை மட்டும் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
சிலர் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் காதுக்குள் விட்டுச் சுத்தப்படுத்துவார்கள். இது நல்ல பலனைக் கொடுக்கும். இருந்தாலும், அதை நாமாக முயல்வது நல்லதல்ல. முடிந்தவரை ENT கிளினிக்குகளுக்குச் சென்று சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவப் பிரச்னைகள் இருக்கட்டும்; காது குடைவதால் நம் இமேஜ் எப்படி டேமேஜ் ஆகிறது?

பெரும்பாலான நேரத்தில் காதுகளை நம் கைகளாலும் சுத்தப்படுத்துகிறோம். அப்போது கையில் சேரும் Cerumen-ஐ பக்கத்தில் இருக்கும் பொருளில் அனிச்சையாகத் தடவிவிடுகிறோம். உண்மைதானே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்கள், ஒருவரின் பிம்பத்தை மனதில் அப்படியே சேமித்துவைப்பதில்லை. அவர்கள் செய்யும் ஏதோவொரு ஆக்‌ஷனை அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்வது அவர்களது வழக்கம். `நியூஸ் பேப்பர் படிக்கிற தாத்தாதானே...’, `மேக்கப் போட்டுட்டே இருப்பாங்களே... அந்த ஆன்ட்டியா?’, `எப்பப் பார்த்தாலும் அடம்பிடிப்பான் அந்த வாண்டு’ - இப்படித்தான் நமக்கு நினைவு படுத்திக்கொள்ளத் தெரியும். இப்போது யோசித்துப் பாருங்கள்... “கிடைக்கிறதை எல்லாம் காதுல போட்டு நோண்டுவாரே... அவரா?” என நம்மைச் சொல்ல அனுமதிக்கலாமா? சத்தமில்லாமல் முடிக்கவேண்டிய விஷயத்தை மொத்த அலுவலக மும் விவாதிக்க நாமே வழிசெய்யலாமா?

- பெர்சனல் பேசுவோம்...

Cerumen-ஐயும் அதன் நிறத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

* அடர்பழுப்பு நிறம் அல்லது கறுப்பு நிறத்தில் இருந்தால், அது காதில் சேர்ந்து பல நாட்கள் ஆகிவிட்டது என்று அர்த்தம். உடனடியாகக் காதுகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

* கொஞ்சம் சிவப்பு நிறம் கலந்திருந்தால், காதுக்குள் எங்கோ ரத்தக்கசிவு இருக்கிறது. உடனே மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.

* மஞ்சளும் ஆரஞ்சும் சேர்ந்த நிறத்தில் பளிச் என இருந்தால், அது நார்மல் ஆன cerumen. அதனால் பிரச்னை இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism