பிரீமியம் ஸ்டோரி

``கிரிக்கெட்டர் அஷ்வினோட இரண்டாவது குழந்தை ஆத்யா செம க்யூட்.  ஆறு மாசக்குழந்தை அவ. அஷ்வின், அவர்  மனைவி ப்ரீத்தி, முதல் மகள் அகிரா எல்லாமே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க ரெடியா இருக்காங்க. நான் போட்டோ எடுக்கிறேன். ஆத்யா அழ ஆரம்பிச்சிட்டா. கேமராவை மூடி வெச்சிட்டா சிரிக்க ஆரம்பிச்சுடுவா... அவளைச் சமாதானம் பண்ணி, ஜாலியாக்கி ஒரு ஃபோட்டோஷூட் பண்றதுக்குள்ள...’’ சிரித்துக்கொண்டே பேசுகிறார் அம்ரிதா. இந்தியாவின் புகழ்பெற்ற குழந்தைகள் போட்டோகிராபர். சென்னையில் மட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும் லண்டனிலும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார் அம்ரிதா!

குழந்தைகள் சிரிச்சா பேரழகு!

‘`நான் பக்கா சென்னைப் பொண்ணு. படிச்சது விமன்’ஸ் கிறிஸ்டியன் காலேஜ். அப்புறம், லயோலா காலேஜ்ல பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சேன். அதை முடிச்சிட்டு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்ல எம்.எஸ்.டபிள்யூ படிச்சேன். படிப்பை முடிச்சுட்டு ஏழு வருஷம் ஒரு பெரிய கார்ப்பரேட்

குழந்தைகள் சிரிச்சா பேரழகு!

கம்பெனியில ஹெச்.ஆரா வேலை பார்த்தேன். என்னவோ தெரியலை, வேலை போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வீட்ல அப்பா பெரிய தொழிலதிபர். அக்காவும் பிசினஸ் புலிதான். நான் மட்டும் 9 டு 5 வேலையில இருக்க விரும்பலை. அதனால், கொஞ்சம் வித்தியாசமாகப் பண்ணணும்னு ஆர்வம். சின்ன வயசுலேர்ந்தே போட்டோஸ் நிறைய எடுப்பேன். திடீர்னு ஒருநாள் ஆபீஸ் கேன்டீன்ல உட்கார்ந்து இருக்கும்போது நாம  ஏன் போட்டோகிராபி பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அவ்ளோதான்... அடுத்த நாளே ரிசைன் பண்ணிட்டு கேமராவைக் கையில  எடுக்க ஆரம்பிச்சேன்.

முதல்ல, நண்பர் ஒருத்தர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். கல்யாணங்களுக்கு போட்டோ எடுப்பேன். அப்படி நான் போட்டோ எடுத்த ஒரு ஜோடி அவங்களுக்குக் குழந்தை பிறந்ததும் என்னை போட்டோ எடுக்கக் கூப்பிட்டாங்க.  குழந்தைகளை போட்டோ எடுக்கிறது ரொம்பப் புது அனுபவமா இருந்துச்சு. குழந்தைகள் போஸ் கொடுக்க மாட்டாங்க. ஆனால், அவங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச இடத்துல, அவங்களுக்குப் பிடிச்சதைப் பண்ணவெச்சுப் படம் எடுக்கலாமேனு நிறைய யோசிக்க ஆரம்பிச்சேன். அங்கிருந்து ஆரம்பிச்சுதான் இப்போ சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கானு போயிட்டு இருக்கேன்.

குழந்தைகள் சிரிச்சா பேரழகு!
குழந்தைகள் சிரிச்சா பேரழகு!

`பம்ப் டு பேபி’ இதுதான் என்னோட கான்செப்ட். கர்ப்பம் ஆனவுடனே அம்மாவை முதலில் படம் எடுக்க ஆரம்பிச்சுடுவேன். கிட்டத்தட்ட குழந்தை வயிற்றில் இருக்கும்போதிலிருந்தே போட்டோ எடுக்க ஆரம்பிச்சிடுறதால், குழந்தை பிறந்ததும் `உன்னைத்தான் ஏற்கெனவே தெரியுமே’ன்னு குழந்தைகள் சொல்ற மாதிரி தோணும். மூணு மாசம், ஆறு மாசம், ஒன்பது மாசம்னு குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியும், பிறந்ததுக்கு அப்புறமும் ஒரு குழந்தையுடன் நான் ரொம்பவே ட்ராவல் பண்றேன். அதனால்தான் நான் எடுக்கிற போட்டோஸ் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன்’’ என ஆர்வத்துடன் தனது படங்களைக் காட்டுகிறார் அம்ரிதா.

குழந்தைகள் சிரிச்சா பேரழகு!

``ஒவ்வொரு போட்டோஷூட்டுக்குப் போகும்போதும் ஒரு சினிமா எடுக்கப்போற மாதிரிதான் தயாராவேன். ஸ்டோரிபோர்டு, ப்ராப்பர்ட்டீஸ்னு எல்லாமே பக்காவா பிளான் இருக்கும். யார் குழந்தைகளை போட்டோ எடுக்கப்போறோமோ, அவங்க வீட்டுக்கு ஷூட்டிங்குக்கு ரெண்டு நாள் தொடர்ந்து போய் அந்தக் குழந்தைகளோடு ஒரு ஃப்ரெண்ட்ஷிப்பை வளர்த்துப்பேன். அவங்களுக்கு என்ன பிடிக்குதுங்கிறதைவிட, எது பிடிக்காது என்பதை தெரிஞ்சுக்கத்தான் ரொம்ப நேரம் எடுத்துக்குவேன்.

குழந்தைகள் சிரிச்சா பேரழகு!

குழந்தைகளோட இன்ட்ரஸ்ட்டைப் தெரிஞ்சுக்கிட்டா போதும்... அதுக்கு அப்புறம் எல்லா ஷூட்டுமே ஈஸிதான். குழந்தைகளைப் படம் எடுக்கும்போது எதுவுமே நாம திட்டம் போட்டபடி நடக்காது. ஆனா, திட்டம் போடாதது ரொம்ப நல்லாவே நடக்க ஆரம்பிச்சுடும். அந்த மொமென்ட்ஸை அழகாக கேமராவுக்குள் கொண்டுவர்றது மட்டுமே என் வேலை’’ என்னும் அம்ரிதா, ‘`யார் சிரிச்சாலும் அழகா இருப்பாங்க. அதுவும் குழந்தைங்க சிரிச்சா ரொம்ப அழகு. அந்தச் சிரிப்புதான் என் படங்களோட ப்ளஸ்’’ எனச்  சொல்லிக்கொண்டே கேமராவை க்ளிக்க ஆரம்பிக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு