பிரீமியம் ஸ்டோரி

யன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகத் தேடிக்கொண்டிருக்க, அனுஷ்கா  ஒதுங்கியிருக்க, தமன்னா வெவ்வேறு மொழிப்படங்களில் கவனம் செலுத்த, ஹன்சிகாவுக்குக் கிட்டத்தட்ட படங்களே இல்லாமல்போக, த்ரிஷா ஃபீல்ட் அவுட் ஆக, கீர்த்தி சுரேஷ் ஹோம்லி கேரக்டர்களைத் தேடிக்கொண்டிருக்க, இந்த இடைவெளியில் மாஸ் அட்டென்டெண்ஸ் கொடுக்கிறார் காஜல் அகர்வால். விஜய், அஜித் படங்களில் அடுத்தடுத்து நடிப்பதால், ‘தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை நான்தான்’ எனச் சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார் காஜல்! நீ நடத்து கண்ணு!

இன்பாக்ஸ்

*  14 பிரபலங்கள், 30 கேமராக்கள், எவ்வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் வசிக்க வேண்டும். இதுதான் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலுக்கு சம்பளம் 15 கோடி ரூபாய். நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ளும் 14 பிரபலங்களுக்கும் அவர்களின் பிரபல்யத்தைப் பொறுத்து படா சம்பளமாம். ஆனால் அந்த 14 பேர் யார்யார் என்பதில் மட்டும் இன்னும் இழுபறி நீடிக்கிறது. பிக் பேமென்ட்ஸ்!

*   ஜெயலலிதாவுக்குக் கொடநாடுபோல மம்தா பானர்ஜிக்கு டார்ஜிலிங். இப்போது டார்ஜிலிங்கில் புதிய தலைமைச்செயலகம் கட்டுகிறார் மம்தா பானர்ஜி. இந்தத் தலைமைச்செயலகக் கட்டடத்துக்கு, ‘டென்சிங் நார்கே பவன்’ எனப் பெயர் வைத்திருக்கிறார் மம்தா. ``டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு, 100 முறைக்கு மேல் சென்ற ஒரே முதல்வர் நான்தான். அது வெறும் அழகுப் பிரதேசம் மட்டும் அல்ல. அங்கு பல வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறோம்’’ என்கிறார் மம்தா. குளு குளு செயலகம்!

*   மிழகப் பள்ளிக்கல்வித் துறையில் புதுமையான மாற்றங்களும், திட்டங்களும் வருவதற்கு மிக முக்கியக் காரணம், அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் வாட்ஸ்அப் குரூப்பில் ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆசிரியர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளைக் கூறுவதுடன், ஆசிரியர்களின் பயனுள்ள கருத்துகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். இந்த குரூப்பின் வழியே, திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து, தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறார். இந்த குரூப்பில் இணைவதற்காக ஏகப்பட்ட ஆசிரியர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டிஜிட்டல் மோட்டிவேஷன்!

இன்பாக்ஸ்

*   ‘அக்டோபரில் திருமணம். நியூயார்க்கில் ஹனிமூன்’. இதுதான் சமந்தா-நாகசைதன்யா காதல் இணையின் திட்டம். ‘விண்னைத்தாண்டி வருவாயா’ பட தெலுங்கு வெர்ஷனில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் நடித்தார்கள். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் நியூயார்க்கில் நடக்கும். அதனால், இருவரும் காதல் தொடங்கிய அந்த இடத்திலேயே ஹனிமூனையும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாழ்க...வாழ்க!

இன்பாக்ஸ்

*   னுஷ் தயாரிப்பில் செம பிஸி. ‘3’ படம் தொடங்கி ரஜினியின் ‘காலா’ வரை அதிரடி காட்டும் தனுஷ் கடவுளின் தேசத்திலும் கால் பதிக்கிறார். மலையாளத்தில் நேஹா ஐயர் நாயகியாக நடிக்கும் ‘தரங்கம்’ என்னும் படத்தை தயாரிக்கிறார். ரைட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு