‘`ஒரு மருத்துவனுக்கு பெரிதாக என்னக் கனவு இருந்துவிடப் போகிறது, நோயாளியை நலமாக மீட்க வேண்டும் என்பதைத் தவிர? நான் மருத்துவன். அதனால்தான் பெரிதாக எந்தக் கனவையும் வைத்துக்கொள்ளாமல், செயலில் மட்டும் தீவிரமாக இருக்கிறேன்’’ திடகாத்திரமான குரலில் பேசுகிறார், ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங். கனவுகளற்ற இந்த மனிதர்தான், பாலை நிலமான ராஜஸ்தானில், மரணித்த ஆர்வாரி ஆற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதன் மூலம், 6,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நிலத்தின் வளத்தை மீட்டிருக்கிறார். ஒரு நிகழ்வுக்காகச் சென்னைக்கு வந்தவரிடம் அதிகாலைப் பொழுதில் உரையாடினோம்.

“இப்போது நாம் சந்திக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு - வறட்சியை எதிர்கொள்ள, ‘நதிநீர் இணைப்புத் திட்டம் மட்டும்தான் ஒரே தீர்வு’ என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நதிநீர் இணைப்பு என்பது நிச்சயம் நம் தேசத்துக்கு ஒரு பேரழிவாக அமையும். இது நதிகளுக்கு மட்டுமல்ல... நதிகளைச் சுற்றியிருக்கும் பல்லுயிர் தன்மை, சுற்றுச்சூழல், மக்கள் என அனைத்துத் தரப்புக்குமே பேராபத்தாக முடியக்கூடிய திட்டம்தான். கார்ப்பரேட் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகவே இந்தத் திட்டம் அமையும். மக்களிடம் இருக்கும் நதிகள் கார்ப்பரேட்கள் வசம் செல்லும். தண்ணீர் தனியார் மயமாகும். இறுதியாகத் தண்ணீர் யுத்தத்துக்கே இந்தத் திட்டம் வழிவகை செய்யும். எனவே நதிகளை இணைக்காதீர்கள். பதிலாக மனித மனங்களை, அவர்களின் சிந்தனையை நதிகளுடன் இணையுங்கள்; ஏரிகளை நதிகளுடன் இணையுங்கள். ஏற்கெனவே, நதிகள் சம்பந்தமான தீர்க்கப்படாத பிரச்னைகள் இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலும் உள்ளன. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையே யான சட்லெஜ் - யமுனா இணைப்புத் திட்டம் பல வருடங்களாக இப்படித்தான் பிரச்னையில் இருக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டம் நாடுமுழுக்க செயல்படுத்தப் பட்டால், இதுபோன்ற சண்டைகள் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.”

“சரி... குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு வேறு என்னதான் தீர்வு...?”

‘`நாம் சந்திக்கும் தண்ணீர்த் தட்டுப் பாட்டுக்குத் தீர்வு, நீர்நிலைகளை மக்களிடம், பஞ்சாயத்திடம் ஒப்படைப்பதுதான். மையப் படுத்தப்பட்ட எந்தப் பெரும் திட்டங்களையும் யோசிக்காமல், திட்டங்களைப் பரவலாக்கி, ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், கிணறுகளை வெட்டுவதுதான். இது கேட்பதற்குச் சாதாரணமான ஒன்றாக, சுலபமான ஒன்றாக இருக்கிறதுதானே..?அதனால்தான் நாம் இதை உதாசீனப்படுத்திவிடுகிறோம். ஆனால், இதுதான் தீர்வு; இதுமட்டும்தான் தீர்வு. ‘பெரிய அணைகள் கட்டுவது தீர்வு’ என்று பேசப்பட்டது. நீங்களே பாருங்கள்... அந்த அணைகள் என்ன செய்திருக்கின்றன என்று. அவை பெரிய எண்ணிக்கையில் மக்களைப் புலம்பெயர வைத்திருக்கின்றன. கிராம மக்களை அகதிகளாக நகரங்களில் அலைய வைத்திருக்கின்றன. பெரிய பெரிய திட்டங்கள் எந்த நன்மையும் செய்ய வில்லை; எந்த நன்மையும் செய்யாது. மீண்டும் சொல்கிறேன், பிரச்னை எங்கு இருக்கிறதோ, அங்கேயே தீர்வையும் தேடுங்கள். நம் கிராமத்துக்குத் தண்ணீர் வேண்டுமென்றால், அதைப் பெற என்ன செய்யலாம் என்று யோசித்து, உங்கள் கிராம அளவிலேயே திட்டங்களைத் தீட்டுங்கள். அதுதான், நீண்டகால நோக்கில் தீர்வாக இருக்கும்.’’

“தமிழ்நாடு வறட்சியில் இருந்து தப்பிக்க முடியுமா?”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் மூன்று முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன. நீர்நிலைகள் மீதான ஆக்ரமிப்பு, நீர்நிலைகள் அசுத்தம் அடைந்திருப்பது, அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுவது. இந்த மூன்றும்தான் தமிழக நீர்நிலைகளின் நிலையை அதிகச் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. மக்கள் நினைத்தால், இதனை மாற்ற முடியும். இழந்த நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தவும் மக்கள் இயக்கமாக ஒன்றுகூட வேண்டும். நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால், மக்கள்தான் தங்களுக்காக முன்வந்து போராட வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான், தமிழகத்தின் நீர்வளத்தை மீட்டெடுக்க முடியும்”