Published:Updated:

நவீன வூட்டுக்காரர்கள்!

ஆர்த்தி, ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

பிரீமியம் ஸ்டோரி

காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களைப் படித்துவிட்டு, பெரிய பாக்ஸில் மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு வேலைக்கு ஓடும் புருஷர்கள் எல்லாம் இப்போது இமயமலைப்பக்கம் போய்விட்டார்கள். இப்போதையவர்கள் நவீன வூட்டுக்காரர்கள். உங்க வூட்டுக்காரர் சமகாலத்து வூட்டுக்காரரா என்பதை இதை வெச்சு நீங்க கண்டுபிடிச்சுடலாம்!

நவீன வூட்டுக்காரர்கள்!

* ஓலாவில ஆஃபர் ஃபிளிப்கார்ட்ல டிஸ்கவுன்ட் பற்றியெல்லாம் கரெக்டா தெரிஞ்சு வெச்சிருப்பாரு. ஆனா பக்கத்து மளிகைக் கடையில இரண்டு ரூபாய் கொத்தமல்லிக்கு 10 ரூபாய் கொடுத்துட்டு வந்து பல்லை இளிப்பாரு!

* வீட்டுக்கு நாலு ஆங்கில பேப்பர் வரும். அதை ட்ரவுசர் போட்டபடி கையில ஒரு காபி கப் வெச்சுக்கிட்டு பால்கனில நின்னு படிப்பாரு. ஆனா நியூஸ் என்னன்னு கேட்டா, ட்விட்டர் டைம்லைன் பார்த்துதான் சொல்வாரு!

நவீன வூட்டுக்காரர்கள்!

* சினிமா டிக்கெட்டை லைன்ல நின்னு வாங்கறவங்களைக் கேவலமா பார்த்து சிரிச்சுட்டு bookmyshow-ல புக் பண்ணிட்டேனு கெத்தா சொல்லுவாரு. அதுக்கு புக்கிங் ஃபீஸா 50 ரூபாய்  தண்டம் பண்ணியிருக்கோம் என்பதை டேக் இட் ஈஸியா மறந்துடுவாரு!

நவீன வூட்டுக்காரர்கள்!

* பால் பூத், ரேஷன் கடை, ஆதார் போட்டோ எடுக்கிற இடம்னு எதையுமே தெரிஞ்சிக்காம வீட்ல இருக்கிற பொண்டாட்டியை உலக நடப்பைத் தெரிஞ்சுக்கோனு உயிரை எடுப்பாரு!

நவீன வூட்டுக்காரர்கள்!

* டிமானிட்டைஸேஷனை எதிர்ப்போம் #beefban ஐ முறிப்போம்னு ஃபேஸ்புக்ல பயங்கர போராளியா இருக்கிற அவர் பக்கத்து வீட்டுக்காரன் லைட்டா மொறைச்சாலே ஆபீஸுக்கு நாலு நாள் லீவைப் போட்ருவாரு!

நவீன வூட்டுக்காரர்கள்!

* வீட்ல ஒரு சின்னக் குழாயை மாட்டணும்னா, அதுக்கு ஏதாவது ஆப் இருக்கானு ப்ளேஸ்டோர்ல தேடுவாரு!

* தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பான்னு ஃபாரின் ட்ரிப் போவாரு, இன்ஸ்டாகிராம்ல #worldtraveler #newfaces #exploring ஹாஷ்டேக் எல்லாம் தெறிக்க விடுவாரு. ஆனால், பக்கத்து ஊருக்குப் போறதுக்கு இன்னும் Google மேப்ஸ் அப்டேட் ஆகலையான்னு தலையைச் சொரிவாரு!

நவீன வூட்டுக்காரர்கள்!

மேற்கண்டதில ஒண்ணு இல்லை... அதுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெரிஞ்சா, கண்டிப்பா நீங்க கல்யாணம் பண்ணியிருக்கிறது ஒரு yo-yo யோக்கியரைத்தான் தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு