Published:Updated:

வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

Published:Updated:
வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’ என்பது வார்த்தைகள் அல்ல;

வரலாற்றைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு!

வாழ்க்கைதான் என்பதற்கான சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

மதுரை அருகே உள்ள கீழடியில் இரண்டு ஆண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சம்ஸ்கிருத எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. மேலும் வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் செல்லவும் வெளியேறவும் ஏற்ற அமைப்புகள்; கால்வாய்த் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான உலைகள்; வட்டக் கிணறுகள்; விதவிதமான வடிகால்கள்– என்று ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதிசெய்யும் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்கள், நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகளும் இங்கு கிடைத்துள்ளன.

உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த வெவ்வேறு இனக்குழுக்கள் நாகரிகத்தின் முதல் படியில் கால்வைக்கும் முன்பே, தமிழர்கள் பண்பாட்டின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இவை. உலகளவிலான வரலாற்றியல் மற்றும் தொல்லியல் ஆய்வில் முக்கியமான தருணமிது.

நம் தொன்மையைப் பறைசாற்றும் இப்படியொரு வரலாற்று ஆதாரம் கிடைத்தால், எந்த  ஓர் அரசானாலும் பெருமையோடு அதனைப் பாதுகாக்கும். ஆனால் கீழடியில் நடந்ததும் நடப்பதும் என்ன?

வைகை நதி நாகரிகத்தின் பொக்கிஷங்கள், 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் பிரதேசத்தில் புதைந்து கிடைக்கிறது. ஆனால், வெறும் 50 சென்ட் நிலப்பரப்பில், இரண்டே வருடங்கள் மட்டும் அகழ்வாராய்ச்சி நடத்தி முடித்துவிட்டது மத்திய அரசு. இங்கே கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களை பெங்களூருவுக்குக் கொண்டு சென்றுவிட்டனர். இந்த ஆராய்ச்சிக்கு மூளையாகவும் முதுகெலும்பாகவும்  செயல்பட்டுவந்த அகழாய்வுப் பொறுப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்திய அரசு வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டது.

இந்த அநீதிகளுக்கு எல்லாம் எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழக அரசு மெல்லிய முனகலைக்கூட எழுப்பவில்லை என்பது வெட்கக்கேடு. வரலாற்று உணர்வுள்ள ஒரு சிலரின் முயற்சியால் கீழடி அகழாய்வு குறித்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் ‘கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து, அதே இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தமிழக அரசு இதற்கென்று கவனம் செலுத்திக் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.

கீழடியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் மேடு உள்ள 110 ஏக்கர் நிலத்தை உரிய இழப்பீடு அளித்து தமிழக அரசு உடனடியாகக் கையகப்படுத்தி மீட்காவிட்டால், இங்கே புதைந்து கிடக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்து தமிழக அரசு வேகமாகச் செயல்பட வேண்டும்.

தம் வரலாற்றின் வேர்களைத் தேடிக் கண்டடையும் முயற்சியை உலகில் உள்ள எல்லா நாட்டினரும் செய்துவருகிறார்கள். தொன்மையும் பண்பாட்டுப் பின்னணியும் கொண்ட நாமோ, வரலாறு கொடுத்த வாய்ப்பை நழுவவிடுவது, காலத்தினால் அழிக்க முடியாத களங்கமாக நிற்கும். இந்தியாவில் தனக்கான தனித்துவமுள்ள வரலாற்றையும் நாகரிகத்தையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை ஆய்வுபூர்வமாக அழுத்தமாகச் சொல்லவேண்டியது நம் அனைவரின் கடமை.