சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே.

இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது, ‘‘கோஹ்லியின் ஆக்ரோஷ அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. நானும் ஆக்ரோஷமானவனே. ஆனால், களத்தில் இதனை நாங்கள் எதிர்கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கும். ஆக்ரோஷமாகச் செயல்படுவதற்கும், எல்லை மீறுவதற்கும் இடையே ஒரு சிறு இடைவெளிதான் இருக்கிறது என்பதை இருவருமே அறிவோம்’’ என்றார். கும்ப்ளே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்த ஓர் ஆண்டு இடை வெளியில் நடந்திருப்பது இரு தரப்பிலுமான எல்லைமீறல்தான்.

பயிற்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. அதே சமயம் பயிற்சியாளர் என்பவர் பி.டி. மாஸ்டர்களைப்போல் இருக்க முடியாது என்பதே `கிரேக் சேப்பல்’ காலகட்டம் சொல்லித் தந்த பாடம். அந்தப் பாடம் இவர்களுக்குப் புரியவில்லை என்பதால் வந்த சோதனைதான் கோஹ்லி - கும்ப்ளே பிரிவு.

உண்மையில் கோஹ்லி- கும்ப்ளேவுக்கு இடையேயான இந்தப் பிரச்னை இரு தலைமுறைகளுக்கான இடைவெளியும், யார் சொல்வதை யார் கேட்பது என்கிற ஈகோ மோதலும்தான். `நாங்கள் செய்வது சரி... எங்களிடம் கோபப்பட யாருக்கும் உரிமையில்லை. வெற்றியோ, தோல்வியோ நாங்களே எங்களைச் சரிசெய்துகொள்வோம். எங்களுக்கு டாஸ்க் மாஸ்டர்கள் தேவையில்லை’ என்கிற தலைமுறையைச் சேர்ந்தவர் கோஹ்லி. மறுபக்கம், `ஒழுங்கு, ஓழுக்கம், ட்ரெய்னிங், கீழ்ப்படிதல்’ என்கிற தலைமுறையைச் சேர்ந்தவர் கும்ப்ளே. இரண்டு அணுகுமுறையிலும் தவறில்லை. அதை எக்ஸிக்யூட் செய்வதில்தான் இரண்டு தலைமுறைகளும் மோதிக்கொண்டிருக்கின்றன.

கோஹ்லி எவ்வளவு ஆக்ரோஷமானவரோ, அதே அளவுக்கு உஷ்ணமானவர் கும்ப்ளே. தன்னுடைய பெளலிங்கின்போது யாராவது ஃபீல்டிங்கில் சொதப்பினால், டென்ஷன் ஆவார் கும்ப்ளே. ஆனால், இப்போதைய தலைமுறையோ, `அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்’ என ஈஸியாகக் கடக்கும் தலைமுறை. இங்குதான் பிரச்னையே. ஒருவரின் அணுகுமுறையை இன்னொருவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

``2007–ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவி எனக்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடியபிறகே எனக்கு கேப்டன் பதவி கிடைத்தது. அதுவும் கேப்டன் பதவிமீது அப்போது யாருக்கும் விருப்பம் இல்லாததால்தான், என்னால் அதைப் பெற முடிந்தது’’ என்று, தான் கேப்டனான கதையை முன்பு சொல்லியிருக்கிறார் கும்ப்ளே. கோஹ்லி கேப்டன் ஆனதற்குப் பின்பு இப்படிப்பட்ட பின்னணிக் கதைகள் எதுவும் இல்லை. கோஹ்லியின் பேட்டிங்கின்மீது யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு சிறந்த கேப்டனாகத் தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்பாகவே கேப்டனாகிவிட்டார் கோஹ்லி.

2014-ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் கேப்டனாகப் பொறுப்பேற்றார் கோஹ்லி. அப்போது இந்திய அணிக்குப் பயிற்சியாளர் கிடையாது. ரவி சாஸ்திரி அணியின் இயக்குநராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். தோனி தொடரின் பாதியிலேயே கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதற்கும், கோஹ்லி பொறுப்பேற்றதற்கும் சாஸ்திரியே காரணம். 2016 ஜூலை வரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளரே இல்லாமல், ரவி சாஸ்திரியின் தலைமையில் இயங்கிவந்தது இந்திய அணி. ரவி சாஸ்திரி பயிற்சியாளராவோ, அணியின் இயக்குநராகவோ இல்லாமல் அணிக்குள் ஒருவராக, கோஹ்லியின் நண்பராகவே இருந்தார். அதனால்தான், கடந்த ஆண்டு பயிற்சியாளரை நியமிக்க டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் தலைமையில் குழு அமைக்கப்பட்டபோது, ``பயிற்சியாளரே தேவையில்லை. சாஸ்திரியே போதும்’’ என்றார் கோஹ்லி. ஆனால், டெண்டுல்கர் தலைமையிலான குழு கும்ப்ளேவைப் பயிற்சியாளராக நியமித்தது. 2019 இங்கிலாந்து உலகக்கோப்பை வரை கும்ப்ளே பயிற்சி யாளராக இருக்க வேண்டும் என்பதே இந்த மூவர் குழுவின் விருப்பம்.

ஆனால் இந்த மூவரும் செய்யத் தவறியது பயிற்சியாளர் என்பவர், சாஸ்திரியைப்போல் ஒரு நண்பராக இருக்க வேண்டும் என நினைக்காமல், `பயிற்சியாளர் என்பவர் கண்டிப்பானவராக இருக்க வேண்டும்’ என நினைத்ததே.

கோஹ்லி துணிச்சலானவரா?

கோஹ்லியின் ஆட்டிடியூட் எப்போதுமே விவாதப்பொருள்தான். துணிச்சலானவராக, ஆக்ரோஷமானவராக, அதிரடியானவராக ஃபீல்டில் இருப்பார் கோஹ்லி. ஆனால் இது எல்லாமே ஃபீல்டிங் செய்யும்போதுதான். கேப்டனாக கோஹ்லி துணிச்சலானவரா, அதிரடியானவரா என்றால், இல்லை என்பதே பதில். ஒரு செட்டான ஃபார்மேட்டிலேயே பயணிப்பார் கோஹ்லி. இரண்டு ஸ்பின்னர், இரண்டு அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர், இரண்டு ஆல் ரவுண்டர் எனப் பல ஆண்டுகாலமாகப் பின்பற்றப்படும் பழைய ஃபார்முலாவையே இன்னமும் பின்பற்றுபவர்தான் கோஹ்லி.

அதிரடியாக அணி வீரர்களை மாற்றிப்போட்டுப் பார்க்கும் சோதனை முயற்சிகளை கோஹ்லி விரும்ப மாட்டார். காரணம், அணியில் கன்னாபின்னாவென மாற்றங்களை ஏற்படுத்தினால், அது விமர்சனங்களைக் கிளப்பும் எனப் பயப்படுவார். இன்னொரு முக்கியமான விஷயம்... கோஹ்லி கேப்டனாக யோசிக்க வேண்டியதைவிட பேட்ஸ்மேனாகப் பல வியூகங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. அவர் கேப்டனாக ரிஸ்க் எடுத்து யோசிப்பதைவிட பேட்ஸ்மேனாக அவர் சிந்திக்க அதிக நேரம் வேண்டும். அதனால்தான், அவர் கேப்டன்ஸியில் அதிரடி முடிவுகளை எடுப்பதில்லை. அந்த முடிவுகளை மற்றவர்கள் எடுக்கும்போது, அதை அவரால் தாங்கிகொள்ளவும் முடியவில்லை.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் தொடர் போட்டியின் கடைசி டெஸ்ட்டில் கோஹ்லியால் ஆட முடியாத நிலை. ரஹானே கேப்டன் ஆனார். இதுதான் நேரம் என ரிஸ்க் எடுக்க விரும்பினார் கும்ப்ளே.

கோஹ்லியின் இடத்தை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவைக் கொண்டு நிரப்பினார் கும்ப்ளே. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஷ்வின், மிஷ்ரா என சீனியர்கள் தடுமாற, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை சீர்குலைத்தார் குல்தீப்.

குல்தீப்பை அணிக்குள் கொண்டுவந்ததை கோஹ்லி ரசிக்கவில்லை என்பதோடு தனக்குத் தகவல் சொல்லாமல் ப்ளேயிங் லெவனில் எப்படி மாற்றங்களைக் கொண்டுவரலாம் எனக் கோபப்பட்டார். இங்கிருந்துதான் இருவருக்கும் இடையிலான உரசல் உச்சம் தொட்டது. சாம்பியன்ஸ் டிராஃபி அணியில் கும்ப்ளே சில வீரர்களைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்ல, கோஹ்லி அதை மறுக்க... மோதல் வெளி உலகத்துக்கு வந்தது.
கும்ப்ளே சிறந்த நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், அவர் சிறப்பான பயிற்சியாளர் இல்லை. அதேபோல் கோஹ்லி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால், வியூகங்கள் அமைப்பதிலும், நெருக்கடியான சூழலை ஹேண்டில் செய்வதிலும் அவர் சிறந்தவர் இல்லை.

கோஹ்லிக்கு கேப்டன்ஸியைவிட தன்னுடைய பேட்டிங் முக்கியம் என்பதில் எவ்வளவு கவனம் இருந்ததோ, அதேபோல் அனில் கும்ப்ளேவுக்குப் பயிற்சியாளர் என்பதைவிட பிசிசிஐ-ல் பல சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்பதில் அதிகக் கவனம் இருந்தது.

கும்ப்ளே- கோஹ்லி இருவருமே இன்னும் மெச்சூர் ஆகியிருந்தால், இந்தச் சூழலே உருவாகாமல் இருந்திருக்கும்!