Published:Updated:

காடுகளின் மீட்பன்!

காடுகளின் மீட்பன்!
பிரீமியம் ஸ்டோரி
காடுகளின் மீட்பன்!

எம்.கணேஷ்

காடுகளின் மீட்பன்!

எம்.கணேஷ்

Published:Updated:
காடுகளின் மீட்பன்!
பிரீமியம் ஸ்டோரி
காடுகளின் மீட்பன்!

ஞ்சய் குப்பி. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த சரணாலயப்பகுதிகளையும் காடுகளையும் மீட்கும் கர்நாடகா போராட்டக்காரர். தற்போது கர்நாடக மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 37 சதவிகிதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அதற்கு மிக முக்கியக் காரணம் சஞ்சய். இவரின் செயல்பாடுகளுக்காகவும், குறிப்பாகப் புலிகள் வாழ்விடத்தை மீட்டதற் காகவும், `பசுமை ஆஸ்கர்` என்று அழைக்கப்படும் `விட்லி விருது` சஞ்சய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது.

`` `பசுமை ஆஸ்கர்’ விருது வென்றுள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?”

``பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். நானும் என் குழுவும் தொடர்ந்து பயணிக்க இந்த விருது ஊக்கம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.”

காடுகளின் மீட்பன்!

``சஞ்சய் குப்பி யார்?”

``கேமராவுடன் காட்டில் திரியும் இயற்கை விரும்பி. கண் முன்னால் நடக்கும் இயற்கை அழிப்பிற்கு

காடுகளின் மீட்பன்!

எதிராகக் குரல் கொடுக்கும் உணர்வுள்ள சாதாரண மனிதன். அவ்வளவு தான். நான் அடிப்படையில் இன்ஜினீயரிங் மாணவன். ஆனால், நானும் என் மனதும் இன்ஜினீயரிங் பக்கம் சென்றதே இல்லை. முப்பது வருடங்களுக்குப் பிறகு இப்போதும் நான் நினைத்துப்பார்க்கிறேன். என் படிப்பு தொடர்பாக அன்று நான் உணர்ச்சிவசப்பட்டு அதனோடு பயணித்திருந்தால், துக்கமாக உணர்ந்திருப்பேன்.”

``கடந்த ஆண்டு விப்ஜியார் பள்ளியில் சிறுத்தையால் நீங்கள் தாக்கப்பட்ட பிறகு, வன விலங்குகள் மீதான பார்வையில் உங்களுக்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?”

``நிச்சயமாக இல்லை. ஒரு விலங்கை அச்சத்திற்குள் ஆழ்த்தினால், அது அப்படித்தான் நடந்துகொள்ளும். அதுதான் அன்றும் நடந்தது. சிறுத்தைகள் மீதான காதல் சிறுவயதில் இருந்தே எனக்கு இருக்கிறது. அழகாக, சுறுசுறுப்பாக அதே நேரம் நழுவிச்செல்லும் ஒரு வேட்டையாடி அது. புலிகள் இல்லாத பகுதிகளில், காட்டை சமநிலைப்படுத்தும் முயற்சியில் சிறுத்தைகள்தான் அதிக பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தி, காட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிறது. மக்கள் என்னைப் பார்க்கும் போதெல்லம் அதை நினைவுபடுத்தி என்னிடம் பேசுவார்கள். லண்டனில் நடந்த பசுமை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு எனக்கு பரிசளித்த இரண்டாம் எலிசபத் மகாராணியின் மகளான இளவரசி ஆன், மேடையில் கூறும்போது `நிறைய வடுக்கள் கொண்ட மனிதர் நீங்கள்` என்றார். அதைக் கேட்டதும் எனக்குப் பெருமையாக இருந்தது. அது உண்மைதான். ஆம், என் கையில் சிறுத்தை கடித்து முப்பது ஒட்டைகள் விழுந்திருந்தன. அவை வெற்று வடுக்கள் மட்டுமே. உண்மையில் நடந்த அந்த விபத்திற்காக நான் சந்தோசப்படுகிறேன். அந்த இடத்தில் நான் இல்லாமல் ஒரு குழந்தை இருந்திருந்தால்… அதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

காடுகளின் மீட்பன்!
காடுகளின் மீட்பன்!

உண்மையில், அந்த விபத்திற்கு பின்னர்தான் என்னால் தைரியமாக காட்டிற்குள் வலம் வர முடிந்தது. வன விலங்குகள் மீதான என் கருத்தை அவை மாற்றவில்லை. மாறாக, சிறுத்தையின் வலிமையைக் கண்டு ஆச்சர்யம் கொள்ளவே தோன்றுகிறது.”

``கர்நாடக மாநிலக் காடுகளில் என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள்?”

``கர்நாடக அரசு மற்றும் வனத்துறை உதவியுடன் மாநிலத்தின் வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, காடுகளின் பரப்பளவை சுமார் ஏழு லட்சம் ஏக்கர் வரை விரிவுபடுத்தியிருக்கிறோம். இதற்குள் தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் அடக்கம். 1970-க்குப் பிறகு, கர்நாடக மாநிலம் தனது காடுகளின் உண்மையான பரப்பளவைத் தற்போதுதான் காண்கிறது. வன விலங்கு களுக்குத் தங்களின் பகுதி பரிசளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அவற்றைப் பாதுகாப்பாக உணர வைத்திருக்கிறோம். குறிப்பாகப் புலிகள். இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கும் சூழலில், உலக அளவில் வெறும் 10 சதவிகிதப் புலிகள் மட்டுமே கொண்டுள்ள கர்நாடகக் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை  கணிசமாக உயர்ந்திருக்கிறது. இது எங்களைச் சர்வதேச அளவில் பெருமைப்படுத்தியிருக்கிறது.”

காடுகளின் மீட்பன்!

பசுமை ஆஸ்கர் விருது

இயற்கை பாதுகாப்புப் பணிகளில் உலக அளவில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் `பசுமை விருது` என்றழைக்கபடும் `விட்லி விருது` வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 166 பேரில் 6 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் இருவர் இந்தியர்கள். ஒருவர் அஸ்ஸாம் மாநிலத்தில், அழிவின் விளிம்பில் இருந்த `கிரேட் அட்ஜடன்ட் ஸ்டார்க்’ (Greater Adjutant Stork) என்ற நாரை இனத்தைப் பாதுகாக்கப் போராடிய சூழலியலாளர் பூர்ணிமா பர்மான். மற்றொருவர் சஞ்சய் குப்பி.