Published:Updated:

இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!

இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!
பிரீமியம் ஸ்டோரி
இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!

இரா.கலைச் செல்வன், படங்கள்: தே.அசோக்குமார்

இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!

இரா.கலைச் செல்வன், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!
பிரீமியம் ஸ்டோரி
இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!

“கலாம்சாட் செய்றதுக்கு முன்னாடி எங்க டீம் வேற ஒரு செயற்கைக்கோளைத்தான் செஞ்சோம். அது கிட்டத்தட்ட ஒரு கிலோ எடை இருந்தது. அதை நாங்க  வெற்றிகரமா விண்ணுக்கு செலுத்தணும்னா, நிறைய பணம் தேவைப்படும். என்னடா பண்றதுன்னு மொத்த டீமும் சோகத்துல இருந்தப்பதான் குலாப்ஜாமூன் கண்ல பட்டது. ‘நாம ஏன் குலாப்ஜாமூன் சைஸ்ல இந்த செயற்கைக்கோளைத் தயாரிக்கக் கூடாது’ன்னு யோசனை வந்து, அந்த வேலைகளைத் தொடங்கினோம்...” ரிஃபாத் ஷாரூக் சின்ன சஸ்பென்ஸோடு சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரை வாழ்த்த, கையில் பூச்செண்டுகளோடு ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் மாணவர்களுக்கான செயற்கைக்கோள் தயாரிப்புப் போட்டி ஒன்றை நடத்துகிறது. அதில் இந்த வருடம்,  உலகம் முழுக்க 57 நாடுகளிலிருந்து, 86 ஆயிரம் செயற்கைக்கோள் ஐடியாக்கள் நாசாவிற்கு அனுப்பப்பட்டன. அதில் 80 செயற்கைக்கோள்களை நாசா தேர்ந்தெடுத்து, தன்னுடைய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. அதில் ஒன்று, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிஃபாத் டீம் உருவாக்கிய `கலாம்சாட்’ செயற்கைக்கோள். விண்வெளியில் 12 நிமிடங்கள் வரை மிதந்து சில ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பியிருக்கிறது கலாம்சாட். இதில் உலகையே ஆச்சர்யப்படவைத்த விஷயம் ரிஃபாத் குழு தயாரித்த  சாட்டிலைட் வெறும் 64 கிராம் எடையும்,  3.8 செ.மீ. கன சதுர ( க்யூப் ) அளவும் கொண்டது. இதுதான் உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள்.

``18 வயசுல இப்படி ஒரு சாதனை... இந்தப் பயணம் எங்கே, எப்படி தொடங்கியது?”

``என்னோட அப்பா விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளைத் தனியா செஞ்சுக்கிட்டிருந்தவர். அதனால, சின்ன வயசுலயிருந்தே விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வம் எனக்கு அதிகம். சில வருடங்களுக்கு முன்னாடி நான் சுட்டி விகடனோட சுட்டி ஸ்டாரா இருந்தேன். அப்போ ஒரு கட்டுரைக்காகப் போன அறிவியல் கண்காட்சியில்தான் என்னுடைய அம்மாவுக்கு நிகரான என்னோட குரு, ஸ்ரீமதி கேசன் மேடத்தைப் பார்த்தேன். அவங்களுடைய `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பு நடத்துற ஒரு போட்டியில என்னைக் கலந்துக்கச் சொன்னாங்க. அந்தப் போட்டியில நான் தோத்துட்டேன்.  ஆனாலும், என்னோட ஆர்வத்தைப் பார்த்து அவங்க அமைப்புல என்னைச் சேர்த்துக்கிட்டாங்க. அப்புறம் என்னை மாதிரியே போட்டியில தோத்தவங்களையும், அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களையும் சேர்த்து ஒரு டீமை உருவாக்கினோம். இப்படி, தோல்வியாளர்களா சேர்ந்து ஒரு குழுவா இணைஞ்சு, இன்னிக்கு இந்தச் சாதனையைப் படைச்சுருக்கோம். இந்தச் சாதனை என்னோடது மட்டுமே அல்ல . வினய் பரத்வாஜ், யக்ஞா சாய், தனிஷ்க் திவிவேதி, கோபிநாத், முகமத் காசிப்னு எங்க எல்லோரோட உழைப்புதான் இது.

இது குளோப்ஜாமுன் சாட்டிலைட்!

நமக்கு உண்மையிலயே ஒரு விஷயத்தின்மீது ஆர்வம் இருந்து, அதுதான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டா, அது கரூரா இருந்தா என்ன… கலிஃபோர்னியாவா இருந்தா என்ன? கடுமையா உழைக்க வேண்டியதுதான்.”

 “உங்களுடைய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அந்த நொடி எப்படியிருந்தது?”

“ரொம்பவே உணர்ச்சிகரமா இருந்தது. நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சிட்டிருந்த சமயம்.  ஒரு ராக்கெட் லான்ச் ஆகிறதை நானும் அப்பாவும் டி.வி-ல பார்த்திட்டிருந்தோம். அப்போ, அதுல ஏதோ தொழில்நுட்பக் கோளாறாகி, அந்த மிஷன் ஃபெயிலாகிடிச்சு. அப்போ நான் அப்பாகிட்ட  ‘ என்னப்பா இவங்க ... இதெல்லாம் ஒழுங்கா செக் பண்ணி, பிரச்னையில்லாத மாதிரி செய்ய மாட்டாங்களா ?’ன்னு கேட்டேன். அதுக்கு அப்பா... `நீ ஒருநாள் செஞ்சு பாரு… அதோட கஷ்டம் புரியும்’னு சொன்னார். நான் எதிர்காலத்துல ஒரு செயற்கைக்கோள் செய்வேன். அது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்னு அப்பாகிட்ட சேலஞ்ச் பண்ணினேன். ஆனா, அது நடந்து ஒரு வருஷத்துல அப்பா இறந்துட்டார். என்னோட கலாம்சாட் விண்ணில் பாயும்போது, நான் முதல்ல நினைச்சது என் அப்பாவைத்தான். அந்த தருணத்துல நான் அதிகம் மிஸ் செஞ்சதும் என்னோட  அப்பாவைத்தான்…”