Published:Updated:

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!
பிரீமியம் ஸ்டோரி
இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

கே.பாலசுப்பிரமணி, த.கதிரவன், கே.புவனேஸ்வரிஓவியம்: பிரேம் டாவின்ஸி

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

கே.பாலசுப்பிரமணி, த.கதிரவன், கே.புவனேஸ்வரிஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!
பிரீமியம் ஸ்டோரி
இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

‘ஜி.எஸ்.டி வரியைக் கொண்டு வரவே கூடாது, அதை ஏற்க முடியாது’ என்று கடுமையாக எதிர்த்தவர் அன்றைய குஜராத் முதல்வர் மோடி. ஆனால், இன்று அதே ஜி.எஸ்.டி எனும் ‘சரக்கு மற்றும் சேவை வரி’யை நள்ளிரவில், நாடு முழுக்க அமல்படுத்திப் பேசும் பிரதமர் மோடி, ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ எனப் புகழ்கிறார். ‘உண்மையில், ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரமா?’

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

கூடுதல் அவகாசம் தேவை!

“ஜி.எஸ்.டி என்பது ஒரு நல்ல திட்டம். என்றாலும், இதை அமல்படுத்திய விஷயத்தில் சில சங்கடங்கள் இருக்கின்றன. அமல் படுத்தும் தேதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். எனவே, இது குறித்த புரிதல் ஏற்படுவதற்கு இப்போது காலதாமதம் ஆகிறது.

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

அவசர, அவசரமாகத் துரிதப்படுத்தியது, பொருள்களுக்கான கட்டண நிர்ணயம் செய்தது ஆகியவற்றில்தான் இப்போது பிரச்னை இருக்கிறது. வரி நிர்ணயம் செய்யப்பட்டதில் 90 சதவிகிதப் பொருள்களில் பிரச்னைகள் இல்லை. 10 சதவிகிதப் பொருள்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில்தான் பிரச்னை. அந்தப் பத்து சதவிகிதத்துக்குள்தான் சிவகாசி பட்டாசுத் தொழில்கள், திருப்பூர் ஜவுளித் தொழில்கள், தியேட்டர் கட்டணம் ஆகியவை வருகின்றன.

ஜி.எஸ்.டி என்பது அனைத்துத் தரப்பு வணிகப் பரிமாற்றங்களையும் வரிக்குள் கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி-க்கு முன்பு, போட்டியின் காரணமாக பில் இல்லாமல், வரிசெலுத்தாமல் லாபத்தைக் குறைத்து விற்பனை செய்தார்கள் பலர். இனி அதுபோல விற்க முடியாது. இதனால்தான், இந்தத் திட்டத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். 

இதில் உண்மையில் போராட வேண்டியது நுகர்வோர்கள் மட்டும்தான். நுகர்வோர்களைப் பொருத்தவரை தேவை இருந்தால்தான் வாங்குவார்கள். தேவையில்லாவிட்டால், விலை எவ்வளவு குறைவு என்றாலும் வாங்க மாட்டார்கள். எல்லோரும் வரி கட்டும்போது பொருள்கள் விலை சீராக இருக்கும்.

பொருளாதாரரீதியாகப் பார்த்தால், ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது முதல் ஒரு சில ஆண்டுகள் பொருள்களின் விலை உயரும். ஆனால், இரண்டு வருடம் கழித்து எதிர்ப்புகளைப் பரிசீலித்து மீண்டும் பொருள்களுக்கான வரி நிர்ணயமானது மறு பரிசீலனை செய்யப்படும். அதன்பின்தான் ஜி.எஸ்.டி இயல்பு நிலைக்கு வரும். எப்போதுமே பொருள்களுக்குத் தேவை அதிகம் இருந்தால், விலை கூடும். தேவை குறைவாக இருக்கும் பட்சத்தில், விலை குறையும்.  டீ, காபி இரண்டும் வெவ்வேறு பானங்கள். டீ அதிகம்பேர் குடிப்பதால், விலை குறைவு. ஆனால், சிலர் மட்டுமே காபி குடிப்பதால், விலை அதிகம்.

அதேபோல ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தும் முன்பு சிறு வியாபாரிகளிடம் பேசியிருக்க வேண்டும். ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தும் இடத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்குக்கூட அவசரம், அவசரமாகப் பயிற்சி கொடுக்கிறார்கள். அரசுத்தரப்பில் இப்படி இருக்கும்போது மற்றவர்களும் அப்படித்தானே இருப்பார்கள்.”

குழப்பம், ஊழல் அதிகரிக்கும்!

“இது ஓர் உண்மையான ஜி.எஸ்.டி அல்ல. ஜி.எஸ்.டி என்றால், மத்திய அரசு ஒரே ஒரு விகிதத்தில் ஒரு வரியை மட்டும் விதித்திருக்க வேண்டும்.

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

இந்த விஷயத்தில், மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பதால், அவரவர்களின் உரிமைகளுக்கு ஏற்ப ஒரு வரிவிதிப்பை, பாதிப் பாதியாக விதித்திருக்கின்றனர். இன்னொரு மாநிலத்துக்குப் பொருள்கள் கொண்டு போவதற்கு ஐ.ஜி.எஸ்.டி என்று போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் குழப்பத்தை விளைவிக்கும். 

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்பு சிவகாசி பட்டாசுத்தொழில் அதிபர்கள், திருப்பூர் தொழில் அதிபர்கள், சினிமா தியேட்டர் அதிபர்கள் ஆகியோரை எல்லாம் கூப்பிட்டுப் பேசி இருக்க வேண்டும்.

5, 12, 18, 28 என்ற விகிதங்களில் வரி விதிப்பு இருக்கக் கூடாது. இந்த வித்தியாசங்களால், ஊழலும் குழப்பமும்தான் அதிகரிக்கும். அரசு சொல்வதுபோல இது பொருளாதார விடுதலை அல்ல. ஆடிட்டர் ஆன எனக்கே இதில் உள்ள பல அம்சங்கள் புரியவில்லை. அமல்படுத்த மேலும் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.”

அரசு நெகிழ்வுத் தன்மையோடு இருக்கிறது!

“ஜி.எஸ்.டி கவுன்சிலில் இருக்கும், 29 மாநிலங்கள், ஐந்து யூனியன் பிரதேசங்கள் இணைந்து இதுவரை 17 கூட்டங்கள் நடத்தி இருக்கின்றன. இதில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமை அடிப்படையில் இது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 1,200 வகையான பொருள்களுக்கு வரி நிர்ணயம் செய்வது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்த முறைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்திருப்பது வெறும் அரசியல்தான். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கம்யூனிஸ்ட்கள் ஆளும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர்.  மத்திய அரசு சார்பில், மத்திய நிதி அமைச்சர் என்ற ஒரே ஒரு பிரதிநிதி மட்டும்தான் இருக்கிறார். அதிகாரப் பகிர்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இது இருக்கிறது.
 
நான்கு விதமான வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 80 சதவிகிதப் பொருள்களுக்கு 18 சதவிகிதத்துக்கும் கீழ்தான் வரி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.  மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி, மத்திய வாட், மாநில வாட், என்ட்ரி வரி, கலால் வரி, சேவை வரி என எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, இந்த முறையை அமல்படுத்தி இருக்கிறோம்.

மக்களிடம் ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து கேரளாவுக்கு, லாரியில் ஆப்பிள் கொண்டுவர வேண்டும் என்றால், ஒரு மாதம் ஆகும். ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைவு வரி செலுத்த வேண்டும். இது தவிர டோல்கேட்களில்  லஞ்சம் கொடுக்க வேண்டும். இதனால், வாடகை அதிகரிப்பதோடு நேரமும் வீண் விரயமாகிறது. இப்படிப் போக்குவரத்துத் தாமதங்கள் காரணமாகவே, 18 சதவிகிதம் அளவுக்கான காய்கறி, பழம் போன்ற பொருட்கள் அழுகி வீணாகின்றன என்று மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏன் வரி போடவில்லை என்கிறார்கள். பெட்ரோலுக்கு மத்திய அரசு வரி விதிக்க முடிவு செய்தது. ஆனால், மாநில அரசின் பிரதிநிதிகள்தான் வேண்டாம் என்று சொன்னார்கள். எனினும் பெட்ரோலியப் பொருள்களுக்கு வரி விதிப்பது குறித்த முடிவு கைவிடப்படவில்லை; தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோலுக்கு ஜீரோ சதவிகிதம் என்ற பிரிவில் கொண்டுவரத்தான் மத்திய அரசுத் திட்டமிட்டிருக்கிறது. அப்படிச் செய்தால், நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். 

ஜி.எஸ்.டி அமலுக்கு வருவதற்கு முதல்நாளில், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், ‘உரங்களுக்கான வரியை 12 சதவிகிதத்தில்  இருந்து ஐந்து சதவிகிதம் ஆக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதனை அரசு ஏற்றுக்கொண்டு உடனே வரியைக் குறைத்தது. மத்திய அரசு நீக்குப்போக்கோடு, நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறது.”

சொன்னது வேறு; நடைமுறைப் படுத்தியிருப்பது வேறு!

‘`ஜி.எஸ்.டி என்பது பல்முனை வரி என்பதற்குப் பதிலாக ஒருமுனை வரி என்றுதான் மக்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், மத்திய பி.ஜே.பி அரசு, ‘வரி உயர்வை’த்தான் ஜி.எஸ்.டி-யாக அமல்படுத்தியிருக்கிறது.

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

சாதாரண ஏழை, எளிய மக்களும் பயன்படுத்துகிற வெட்கிரைண்டருக்கு, இதுவரையிலும் 14 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்படியே இருமடங்காக உயர்த்தி 28 சதவிகிதமாக்கிவிட்டார்கள். ஜி.எஸ்.டி வரிவிதிப்புக் குறித்த கவுன்சிலில் அனைத்துத் தரப்பினரோடும் விவாதிக்கும்போதே, இப்படி 14 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று அவர்கள் அறிவித்திருந்தால், அப்போதே கொந்தளித்திருப்போம். ஆனால், அப்போது எதையுமே சொல்லாமல், இப்போது பல மடங்கு வரி நிர்ணயம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் தொகையில் தினமும் ஒன்றைரை கோடிப் பேர் ஹோட்டலில் சாப்பிட்டு வருபவர்கள்தான். ஆனால், ஹோட்டல் பண்டங்களுக்கு 18 சதவிகித வரி விதித்திருக்கிறார்கள். பீட்ஸாவுக்கு ஐந்து சதவிகித வரி, கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரி. ஜவுளித்துறை, சினிமாத்துறை, பட்டாசுத் தொழில்துறை ஆகிய மூன்று துறைகளுமே ஜி.எஸ்.டி-யை எதிர்த்து ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்த சிறு தொழில் முனைவோர் இப்போதுதான் மெள்ள எழுந்து நிற்க ஆரம்பித்தார்கள். ஆனால், மறுபடியும் ஜி.எஸ்.டி என்ற பெயரில் இந்தச் சிறுதொழில் முனைவோரை அடித்துச் சாய்த்துவிட்டார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், ஜி.எஸ்.டி பற்றி பி.ஜே.பி சொன்னது வேறு; இப்போது நடைமுறைப்படுத்தியிருப்பது வேறு!

தன்னைச் சந்தைப்படுத்திக்கொள்வதில், பிரதமர் மோடியை வெல்வதற்கு ஆள் கிடையாது. நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக்கூட்டி, ‘ஜி.எஸ்.டி ஏழை எளிய மக்களுக்கானது’ என்கிறார். ஆனால், இது ஏழைமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல். சமீபத்தில் நடைபெற்ற ஆடிட்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, ‘வரி ஏய்ப்போருக்குத் துணை போகாதீர்கள்’ என்று அறிவுரை சொல்கிறார். ஆனால், ஒரு வருடத்துக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலுமான வாராக் கடன்களை ரத்து செய்கிறார் மோடி. இவருக்கு யார் உபதேசம் செய்வது?’’

பாரபட்சமானது; ஏற்றுக் கொள்ள முடியாதது.’’

``ஜி.எஸ்.டி-யை முதன்முதலில் காங்கிரஸ் அறிமுகப்படுத்தியபோது, ‘ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த விடமாட்டேன். என் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த முடியும்’ என்றெல்லாம் பேசியவர்தான் மோடி.  அப்போது காங்கிரஸ் அறிமுகப்படுத்திய வடிவத்திலேயே ஜி.எஸ்.டி-யை இப்போதும் அமல்படுத்தியிருந்தால், எந்த விதப் பிரச்னையும் எழுந்திருக்காது. ஆனால், தற்போது பி.ஜே.பி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பில், குறிப்பிட்ட சில அத்தியாவசியப் பொருள்களுக்கான வரி விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

உதாரணமாக, திரைத்துறை இன்றைக்கும் ஏழை எளிய மக்களின் பொழுதுபோக்குச் சாதனமாக இருக்கிறது. ஆனால், இந்த சினிமாவுக்கு ஜி.எஸ்.டி., கார்ப்பரேஷன் வரி, பஞ்சாயத்து வரி என்று எல்லாமும் சேர்ந்து 58 சதவிகிதம் வரையில் வரியாகவே சுமத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி விதிக்கப்படும்போது, மேற்கொண்டு வரிகள் விதிக்கப்படக் கூடாது என விதிமுறை வகுத்திருந்திருக்கலாம். இது மட்டுமல்ல.... முந்திரிப் பருப்புக்கு ஐந்து சதவிகித வரி, ஏழை எளியவர்கள் சாப்பிடும் கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரி. எளியவர்கள் பயன்படுத்தும், கைத்தொழில் வகையைச் சேர்ந்த தீப்பெட்டிக்கும் வரி உயர்வு என்பது பாரபட்சமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.’’

ஏழைகளுக்கு ஒரு வரி; பணக்காரர்களுக்கு ஒரு வரி!

இனி என்னவெல்லாம் செய்யும் ஜி.எஸ்.டி!

“மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘ஜி.எஸ்.டி. வரியை வெவ்வேறு விகிதங்களில் ஏன் கொண்டுவந்துள்ளோம் என்றால், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க முடியாது. அதனால்தான், ஏழைகளுக்குக் குறைவாகவும், பணக்காரர்களுக்கு அதிகமாகவும் வரியை விதித்துள்ளோம்’ என்றார். அவரின் இந்தப் பேச்சை வைத்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இதுவே, எனது கேள்வியும்கூட. சாமான்யர்கள் மட்டுமல்ல; இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களின் பணிச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஹோட்டல்களில் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் ஹோட்டல்களில் உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சாமான்ய மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 15 ரூபாயில்  இருந்து 20 ரூபாய் வரை உணவுப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளன. தற்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் தண்ணீர்கேன்களின் விலையும் உயரப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எளிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான வரி இப்படி இருக்கையில், சூப்பர் லக்சரி கார்களின் விலையோ 10 சதவிகிதம்வரை குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 55 சதவிகித வரி செலுத்தக்கூடிய எஸ்.யூ.வி. கார்களின் விலை குறைந்துள்ளது. இதைத்தான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுதான் ஏழைகளுக்கு ஒரு வரியும், பணக்காரர்களுக்கு ஒரு வரியும் என அருண் ஜெட்லி சொன்னாரா?”